தமிழ்நாட்டில் ஏப்.16ஆம் தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி! உஷார் நிலையில் போலீஸ்!
சென்னை: உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதியை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை மறுதினம் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் அந்த அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அதில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை மறுதினம் ஏப்ரல் 16ஆம் தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடைபெறும் அனைத்து இடங்களிலும் போலீஸார் உஷார் நிலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல காவல்துறை உயர் அதிகாரிகள் பேரணி நடைபெறும் இடங்களை நேரடியாக பார்வையிட்டு காவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

கடந்த முறை ஆர்.எஸ்.எஸ்.பேரணி அறிவித்த போது அதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையும் அது போல் எந்த அரசியல் இயக்கமோ, அமைப்போ அறிவிப்பு வெளியிடவுள்ளதா என்பதையும் உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்று வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ்.பேரணியும் நடைபெறவுள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்படவுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications