Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜா பற்றி ஏஆர் ரஹ்மான் வீடியோ.. இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் என புகழாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழா குறித்து ஏஆர் ரஹ்மான் வீடியோ வெளியிட்டுள்ளார். "இசையுலகில் தமிழுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டுக்கே தனிப்பெருமையைத் தேடித் தந்தவர் இசைஞானி. அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் சாதனை செய்ய ஊக்கமளிக்கக்கூடியதாக இருக்கும்." என ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோவில், "இசையுலகில் தமிழுக்கும், தமிழருக்கும் மட்டுமல்லாது, தமிழ்நாட்டுக்கே தனிப்பெருமையைத் தேடித் தந்தவர் இசைஞானி. இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்களிசை - இவற்றிற்கிடையே நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசைமேதை அவர்.

AR Rahman Praises Ilayaraja in Video Says Maestro Brought Global Pride to Tamil Nadu

ஏஆர் ரஹ்மான் வீடியோ

குறிப்பாக திரையிசையைக் கடந்து மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் சாதனை செய்ய ஊக்கமளிக்கக்கூடியதாக இருக்கும். அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞர் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் உங்களைப் போலவே நானும் பேருவகை கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜாவின் பொன்விழாவை தமிழாடு அரசே ஒருங்கமைத்து கொண்டாடுவதில் இளையராஜா அவர்களுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல் ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரமாகவும் பார்க்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே" எனத் தெரிவித்துள்ளார்.

இசைஞானிக்கு பாராட்டு விழா

சிம்பொனி இசையமைத்து சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படங்களுக்கு இசையமைக்கத் துவங்கி, 50 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி, 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50' என்ற பெயரில், சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுரவிக்கும் விதமாகவும், லண்டனில் அவர் அரங்கேற்றிய சிம்பொனி இசையைப் பாராட்டும் விதமாகவும் இந்த விழா நடந்தது.

இளையராஜா பேச்சு

இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், "உலகில் இதுவரை தோன்றிய இசை மேதைகளுக்கு இதுபோன்ற பாராட்டு வழங்கப்படவில்லை. இது முதல் முறையாக நடக்கிறது. முதன்முறையாக முதல்வர் ஸ்டாலினிடம் நான் சிம்பொனிக்கு செல்லப்போகிறேன் என்று சொன்னதும், அவர் உடனே என்னை வாழ்த்தினார். எனக்கு இசைஞானி பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மேல் வைத்த அதே அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன்.

கிராமத்தில் இருந்து வந்தவன், அதனால் கிராமத்துச் சாயல் இருக்கக் கூடாது. ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் என்பதால் அந்த இசைச் சாயலும் வந்துவிடக் கூடாது. அந்தப் படங்களின் பின்னணி இசைச் சாயலும் வந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டுக்காரன் என்பதால் தமிழ்நாட்டுச் சாயலும் வந்துவிட்டது. இந்தியன் என்பதால் இந்தியச் சாயலும் வந்துவிடக் கூடாது.

இளையராஜா உருக்கம்

உலகில் பல கலைஞர்களின் இசை கேட்டுள்ளேன். அவர்கள் சாயலும் வந்துவிடக் கூடாது. அவர்கள் சாயல் பயன்படுத்தி விட்டேன் என்று கூறிவிடக் கூடாது. இவ்வளவு கட்டுப்பாடுகளை மீறி 35 நாளில் சிம்பொனி உருவாக்கினேன். என் கற்பனையில் தோன்றிய இசையை 87 பேருக்கு எழுதியதுதான் அவர்கள் வாசித்தார்கள். 35 நாட்களில் சிம்பொனி இசையை வடித்தேன். எண்ணத்தில் தோன்றியதை ஒலி வடிவில் வடித்தேன். ஏராளமான சுய கட்டுப்பாடுகளுடன் சிம்பொனி இசையை உருவாக்கினேன்.

வாழ்க்கையில் என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரம் செலவழிக்கவில்லை. அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருந்தால், இந்த சிம்பொனியை எழுதியிருக்க முடியாது. இதுபோல நீங்கள் விரும்பிக் கேட்கும் அத்தனைப் பாடல்களை இசையமைத்திருக்க முடியாது. ஆகையால், எனது குழந்தைகளுக்குத்தான் நான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

மேலும் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட இளையராஜா, "நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும், அமைச்சர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+