அரக்கோணம் டூ சென்னை.. ஒரேடியாக 15 ரயில்களா? சென்னை புறநகரில் புது மாற்றம்.. திடீர்னு வந்த அறிவிப்பு
சென்னை: திடீரென சென்னையில் ஒரேடியாக 15 புறநகர் ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பயணிகளுக்கு அசவுகரியத்தை தந்து வருகிறது. என்ன காரணம்?
தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக, அவ்வப்போது ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. இதில், முக்கிய போக்குவரத்து நிகழும் மாநகராக சென்னை திகழ்ந்து வருகிறது. எனவேதான்., புறநகர் ரயில் போக்குவரத்து சேவையில் அடிக்கடி இதற்கான மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆவடி பணிமனையில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
ஆவடி பணிமனை: "ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம்: திருவள்ளுரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சாரரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் ஆவடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
ஆவடி: ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இத்தனை ரயில்களின் சேவைகளும் இல்லாதது, வழக்கமாக செல்லும் பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications