சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த பொண்ணு மாதிரி நானும் இறக்க வாய்ப்பு.. நண்பர்களை அலர்ட் செய்த தந்தூரி சாப்பிட்டு இறந்த மாணவன்!

Google Oneindia Tamil News

ஆரணி: ஆரணியில் பிரியாணி சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததை போல் நானும் இறந்து விட வாய்ப்பிருக்கிறது என தன்னுடன் உணவு சாப்பிட்ட நண்பர்களுக்கு ஆரணியை சேர்ந்த திருமுருகன் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள 5 ஸ்டார் எலைட் எனும் அசைவ ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு ஆரணி மோகனன் தெருவை சேர்ந்தவரும் ஆப்பிள் பள்ளியின் உரிமையாளருமான கணேஷ் என்பவரது மகன் திருமுருகன் (17) நண்பர்களுடன் கடந்த 24 ஆம் தேதி உணவருந்தினார்.

நண்பர்கள் அனைவரும் அவரவர் விருப்பம் போல் உணவை ஆர்டர் செய்துள்ளனர். அதில் எனது மகன் மட்டுமே தந்தூரி சிக்கன் சாப்பிட்டுள்ளார். அவருக்கு அன்று இரவு வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் குடல் முழுவதும் தொற்று பரவி அழுகி போய்விட்டதாக கூறிய மருத்துவர்கள் உடனடியாக வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வலியுறுத்தினர். இதனிடையே வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.

தொடர் மின்வெட்டு.. தூக்கத்தை தொலைத்த மக்கள்.. ஆரணி மின் வாரிய அலுவலகத்தின் மீது கல்வீச்சு! தொடர் மின்வெட்டு.. தூக்கத்தை தொலைத்த மக்கள்.. ஆரணி மின் வாரிய அலுவலகத்தின் மீது கல்வீச்சு!

 வேலூர் தனியார் மருத்துவமனை

வேலூர் தனியார் மருத்துவமனை

பின்னர் அந்த மாணவனை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வயிற்று வலி தாங்க முடியாததால் அந்த மாணவனை அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக 4 மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

நீல நிறம்

நீல நிறம்

பின்னர் அதை நம்பாமல் தனியார் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கும் அந்த மாணவனின் உயிரிழப்பை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து வீட்டிற்கு கொண்டு வந்த போது நகங்கள், நரம்புகள் எல்லாம் நீல நிறமாகிவிட்டது. மாணவனின் இறப்புக்கு வந்த நண்பர்கள் பலர் கதறி அழுதனர்.

உதவி

உதவி

இறப்பதற்கு முன்னர் திருமுருகன் நண்பர்களுக்கு ஒரு உதவியையும் செய்துள்ளாராம். திருமுருகன் அந்த ஹோட்டலில் தன்னுடன் சாப்பிட்ட நண்பர்களுக்கு ஒரு குரூப் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் நாம் சாப்பிட்ட ஹோட்டல் இருக்கும் பகுதியில் வேறு ஹோட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி ஒருவர் இறந்துவிட்டார்.

வாட்ஸ் ஆப் மெசேஜ்

வாட்ஸ் ஆப் மெசேஜ்

அவரை போல் நானும் இறந்துவிட வாய்ப்புள்ளது. எனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருக்கிறது. எனவே நீங்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என திருமுருகன் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜை காண்பித்து நண்பர்கள் கதறினர். தனது மகனின் உயிரை காவு வாங்கியஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி நகர காவல் நிலையத்தில் திருமுருகனின் தந்தை கணேஷ் புகார் கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரணி காந்தி சாலை பகுதியில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி இதே போல் வயிற்று வலியால் துடித்து இறந்தது நினைவுக்கூரத்தக்கது.

English summary
Arani 17 years old boy sent message to his friends that he had severe stomach pain. So he might be dead like a girl who died of eating briyani at a hotel in Gandhi road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X