கடவுள் பெயரால் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கிறாரா? அறப்போர் இயக்கம் கேள்வி!
சென்னை: கடவுள் பெயரால் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கிறாரா என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை ராமாபுரத்தில் உள்ள கலசத்தம்மன் கோவிலுக்கு, பொதுப் பாதையை ஆக்கிரமித்து மண்டபம் கட்டியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு நிலத்தை கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது உறுதி செய்யப்பட்டதால் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிட்டது. எனினும், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

இதனால், அப்பகுதியில் அமையும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடங்கியுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றாததால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பாதியில் முடங்கி நிற்கின்றன. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவில் நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு தலைமை செயலாளர் அறிக்கை அளித்து விட்டார். அந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தில் இருக்கும் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எழுத்துப்பூர்வமான உத்தரவு கொடுத்து விட்டார்.
கோவில் நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு தலைமை செயலாளர் அறிக்கை அளித்து விட்டார். அந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தில் இருக்கும் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற… pic.twitter.com/H03N002lMw
— Arappor Iyakkam (@Arappor) September 2, 2023
ஆனால் அங்கே சாலை ஆக்கிரமிப்பு கூட இது வரை அகற்றப்படவில்லை. இரண்டு திமுக கவுன்சிலர்கள் உட்பட பல கட்சி பிரமுகர்கள் இணைந்து தற்பொழுது அங்கு மேலும் சில கட்டுமானங்களை செய்து வருகிறார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை தடுப்பது யார்? பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை மீட்டு கொடுக்க முட்டு கட்டை போடுவது யார்?
கோவில் ஆக்கிரமிப்பால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள பாதாள சாக்கடை திட்டத்தை மீண்டும் துவங்க விடாமல் தடுப்பது யார்? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்வாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications