வெடித்துக் கிளம்பிய ரூ.136 கோடி ஊழல் புகார்! அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க முறைகேடு! பெரிய சிக்கல்
சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், நடந்த கூட்டுறவு சங்க ஊழல் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கவும் அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சியில் 1,068 கூட்டுறவு சங்கங்களில் மட்டும் ரூ.136 கோடி அளவில் ஊழல் முறைகேடு நடந்து உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது கடந்த அதிமுக ஆட்சியில் 2015- 2016ஆம் ஆண்டு முதல் 2020-2021 வரை 1068 கூட்டுறவுச் சங்கங்களில் 136 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. 62 சதவீதம் கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 1 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலும், 18 சதவீதம் கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும் ஊழல் நடைபெற்று உள்ளது.
மேலும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 967 கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த கூட்டுறவு சங்க ஊழல் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
இதுதொடர்பான புகார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சராக செல்லூர் ராஜூ செயல்பட்டு வந்தார். அவரது துறையில் ரூ.136 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications