நோட்டா இல்ல.. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்ல! புதிய முறையை கையாண்ட அறப்போர் ஜெயராமன்.. பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் புதிய முறையை கையாண்டு இன்று வாக்கு பதிவு செய்தார்.
காலை 7 மணியில் இருந்து தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மும்முரமாக நடந்து வருகிறது.காலையில் இருந்து மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர் விஜய் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அதிகாலையிலேயே வந்து வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

நோட்டா
தற்போது நடைபெறும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை. தமிழ்நாடு உள்ளாட்சி சட்ட விதிப்படி தேர்தலில் நோட்டா பிரிவு கிடையாது. இதனால் இந்த முறை வாக்கு பெட்டியில் நோட்டா இணைக்கப்படவில்லை. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையாவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நோட்டா ஏன் இல்லை?
நோட்டா இருந்திருக்க வேண்டும். நோட்டாவை தேர்வு செய்வது எங்கள் ஜனநாயக உரிமை. ஆனால் அதை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கவில்லை என்று மக்கள் பலர் விமர்சனம் வைத்து வந்தனர். இது தொடர்பாக பல கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டனர். தமிழ்நாடு உள்ளாட்சி சட்ட பிரிவில் இதற்காக சட்டம் இயற்ற வேண்டும்.

எப்போது அனுமதி?
அந்த சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே நோட்டோவிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில்தான் இன்று அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய முறையை கையாண்டு வாக்களித்தார். அதன்படி நோட்டோ வசதி இல்லாத காரணத்தால் வாக்களிக்க விரும்பவில்லை என்ற விண்ணப்பத்தை கொடுத்து அவர் தனது வாக்கை பதிவு செய்தார். மயிலாப்பூரில் உள்ள கற்பகவல்லி பள்ளியில் அவர் வாக்களித்தார்.

அறப்போர்
வாக்குச்சாவடிக்கு வந்த ஜெயராமன் வாக்குசாவடியின் தேர்தல் அதிகாரியிடம் 17 - பி என்கிற விண்ணப்பத்தை பெற்று தனது வாக்கினை பதிவு செய்தார். இது வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில், நோட்டா வசதியும் இல்லாத பட்சத்தில் பயன்படுத்தப்படும் விண்ணப்பம் ஆகும். தேர்தல் விதி பிரிவு 71 படி வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் இந்த விண்ணப்பத்தை பயன்படுத்தலாம். தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் இந்த விண்ணப்பத்தை பயன்படுத்தினார்.












Click it and Unblock the Notifications