ஆபத்து.. 2 அமாவாசை வரப்போகுது.. அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு ஆபத்து.. ஆற்காடு பஞ்சாங்கம் பகீர்
சென்னை: ஆடி அமாவாசை குறித்து, ஆற்காடு பஞ்சாங்கம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதை பலரும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
வழக்கமாக, அமாவாசை நாட்கள் என்றாலே விசேஷம்தான்.. தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதும், அவர்களை வணங்கி வழிபடுவதும் அன்றைய நாட்களில் வழக்கம்.. அதிலும், ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் இதில் பிரசித்தி பெற்றவை.

2 அமாவாசைகள்: இந்த வருடம் ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருகின்றன.. ஆடி 1 எனப்படும் ஜூலை 17-ந்தேதி மற்றும் ஆடி 31 எனப்படும் ஆகஸ்டு 16-ந்தேதியும் என 2 அமாவாசைகள் வர உள்ளன.. 2 அமாவாசை வருவதால், எந்த அமாவாசையில், முன்னோர்களுக்கு திதி தரலாம் என்ற குழப்பம் பொதுமக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.
இதற்கு சிலர் இரண்டையுமே கடைபிடிக்கலாம் என்கிறார்கள்... ஒரு சேனலுக்கு இதுகுறித்து, காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த சாஸ்திர பண்டிதர் சுந்தரராம வாஜ்பாய் சொல்லும்போது, "இந்த ஆடி மாதம் இரண்டு அமாவாசை வருகிறது. இதில் முதலில் வரும் ஆஷாட அமாவாசையை கடைபிடித்தால் விசேஷம். ஆடி இறுதியில் வரும் அமாவாசையையும் கடைபிடிக்கலாம்... இரண்டையும் கடைப்பிடிப்பது நல்லது" என்று தெரிவித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஆற்காடு பஞ்சாங்க ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர், இன்னொரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், இதுகுறித்து தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்..
எது சிறந்தது: அதில், "இந்த வருடம் ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருகின்றன.. இதில் ஆகஸ்டு 16-ந்தேதி அதாவது ஆடி மாதம் 31ம் தேதி வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உகந்தது.. அந்த நாளில், முன்னோர்களுக்கு திதி தந்தால் இன்னும் சிறப்பு,..
ஆனால், ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால், நல்ல பலன்களும் நடக்கும்.. அல்லது மோசமான பலன்களும் நடக்கும்.. எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.. குறிப்பாக, வங்கி பரிவர்த்தனைகளில் நிறைய புதிய மாற்றங்கள் ஏற்படும்.. நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கவும் தயாராக இருக்கும்.. ஆனால் வாங்குவதற்குதான் கஸ்டமர்கள் யாரும் கிடைக்கமாட்டார்கள். வடமாநிலங்களில் இந்த முறை மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்..
ஆபத்து: பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் கஷ்டத்தை சந்திக்க நேரலாம்.. பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவார்கள்.. அதிரடி சோதனைகள் நிறைய நடந்து, அதன்மூலம் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்படும்... அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல தொந்தரவுகள் எழலாம்.. வடமாநிலங்களில் கொள்ளை சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்பது உட்பட பல்வேறு தகவல்களை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆற்காடு பஞ்சாங்கத்தில், முன்கூட்டியே கொரோனா வைரஸ் குறித்தும் கணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.. அதேபோல, 2 வருடங்களுக்கு முன்பு, கேரள வெள்ளத்தையும், நிலச்சரிவையும்கூட, ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், தற்போது கணித்துள்ள செய்தியும், இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications