69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல்! பென்சன் கிடைப்பதில் சிக்கல்? மத்திய அரசு தந்த.. பெரிய மெசேஜ்
சென்னை: 69 லட்சம் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் வருங்கால ஊதியக் குழுவின் பலன்கள் கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நிதிச் சட்டம் 2025-ன் கீழ் இந்த சலுகைகள் நிறுத்தப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என அரசு தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசு 8-வது மத்திய ஊதியக் குழுவின் (8th CPC) விதிமுறைகளை (ToR) அறிவித்ததைத் தொடர்ந்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு (AIDEF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டமைப்பு, இந்த விதிமுறைகள் 69 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களை புறக்கணிப்பதாகவும், இந்த முடிவை நியாயமற்றது மற்றும் பாகுபாடானது என்றும் சாடியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஓய்வூதியதாரர்களை ஊதியக் குழுவின் வரம்பில் இருந்து விலக்குவது, வழக்கமான நடைமுறைகளுக்கு எதிரானது என்றும், அவர்களின் பலன்களை முறையாக மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை மறுப்பதாகவும் AIDEF வலுவாக வாதிட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், ஊழியர் கூட்டமைப்பு ஒரு முக்கிய அம்சத்தைக் குறிப்பிட்டது. அதாவது, 8வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாட்டு விதிகளில் (ToR), ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் சேர்க்கப்படவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும். "குறிப்பாக, மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய திருத்தம் தொடர்பான செயல்பாட்டு விதிகள், 7வது மத்திய ஊதியக் குழுவுக்கு வழங்கப்பட்ட விதிகள் முற்றிலும் வேறுபடுகின்றன.. 69 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களை 8வது ஊதியக் குழுவின் வரம்புக்குள் சேர்க்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக உழைத்த அவர்களை, இந்த ஊதியக் குழுவின் வரம்பில் இருந்து விலக்கி வைப்பது நியாயமல்ல" என்று கூட்டமைப்பு தெரிவித்தது.
இருப்பினும், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. "இந்தக் கூற்று தவறானது. CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021-இன் விதி 37 திருத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் அரசு ஊழியர் ஒருவரின் நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே, அவர்களின் ஓய்வூதியப் பலன்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று அரசு தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டது.
குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே மாற்றம்
CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021-இல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய திருத்தம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மற்றும் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, விதி 37(29C) என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இந்தத் திருத்தம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும். பொதுத்துறை நிறுவனங்களில் இணைக்கப்பட்ட முன்னாள் அரசு ஊழியர்கள், ஒழுங்கீன நடத்தை காரணமாக அந்த நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் அல்லது நீக்கப்பட்டால் மட்டுமே அவர்களின் ஓய்வூதியப் பலன்கள் பறிமுதல் செய்யப்படும்.
இதன் மூலம் 69 லட்சம் ஊழியர்களுக்கு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் வருங்கால ஊதியக் குழுவின் பலன்கள் கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
