ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த எடப்பாடி பழனிசாமி.. ஆர்.பி. உதயகுமாருக்கு போஸ்டிங்.. ஏன் தெரியுமா
சென்னை: ஆர்.பி. உதயகுமாரை எதிர்கட்சி துணைத்தலைவராக நியமனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.. இத்தனை நாளும் நிலவி வந்த குழப்பத்துக்கு ஒரு முடிவு கிடைத்துள்ள நிலையில், இதற்கான பின்னணி காரணம் என்ன? உதயகுமாரை, எடப்பாடி தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.. அதிமுகவின் முக்கிய தலைவர்கள் யார் என்பதை பார்த்து, அவர்களுக்கு அந்த பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.
ஓபிஎஸ் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்.. எனவே, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி அதே சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்டது..

திண்டுக்கல்
அதேபோல, ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியும், அவர் சார்ந்த சமூகத்துக்கே வழங்கப்படுமா? அல்லது வழக்கம்போல், அந்த பதவியையும் கொங்குவுக்கே எடப்பாடி பழனிசாமி ஒதுக்கிவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பிறகு, நத்தம் விஸ்வநாதனுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி, திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவி, செல்லூர் ராஜூவுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.. அப்படியானால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் வாய்ப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற அடுத்த எதிர்பார்ப்பு கிளம்பியது..

செல்லூர் ராஜு
அப்போதுதான் 2 பேரின் பெயர்கள் பலமாக அடிபட்டன.. ஒருவர் செல்லூர் ராஜு.,, மற்றொருவர் ஆர் பி உதயகுமார்.. இதற்கு காரணம், தென்மாவட்டம் என்ற அடிப்படையிலும், முக்குலத்தோர் சமூகம் என்ற அடிப்படையிலும் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது. இறுதியில் ஆர். பி உதயகுமாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.. இதற்கு சில காரணங்களும் கணிக்கப்படுகின்றன.. செல்லூர்ராஜைவிட, ஓபிஎஸ்ஸை சமீபகாலமாகவே அதிகம் விமர்சித்து வந்தவர் உதயகுமார்..

ஸ்டிராங்
ஆரம்பத்தில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர்தான் உதயகுமார்.. ஆனால், திடீரென எடப்பாடி பக்கம் ஸ்டிராங் ஆகிவிட்டார்.. நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்திலேயே மேடையிலேயே ஓபிஎஸ்ஸை தாக்கி பேசியதில் அப்பட்டமாக விளங்கியது. எப்படியும் உதயகுமாருக்கு பதவி கிடைக்கும் என்பதை ஓபிஎஸ் டீம் அறிந்ததாலோ என்னவோ, அவர்களும் உதயகுமாரையே டார்கெட் செய்து விமர்சித்து வருகின்றனர்.. அதனால், நேரடியாகவே, ஓபிஎஸ் தரப்பினருக்கு பதிலடி தந்து வருகிறார் உதயகுமார்..

சான்ஸ்
இதனால், சாதி சங்கங்களின் எதிர்ப்பையும் உதயகுமார் எதிர்கொள்ளும் நிலைமை வந்துள்ளது என்றாலும், அதை சரிக்கட்டவும் பிளான்களை போட்டு வருகிறார்.. உதயகுமாருக்கு இந்த சான்ஸை எடப்பாடி தருவதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு, எடப்பாடி மீதான அதிருப்திகள் தென்மண்டலங்களில் கூடிவிட்டன.. ஏற்கனவே வன்னியர் ஒதுக்கீடு விஷயத்தில் அதிருப்தியில் இருந்தவர்கள், ஓபிஎஸ்ஸை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டதால், இன்னும் அதிருப்திகளை சம்பாதித்து கொண்டுவிட்டார்..

கரிசனங்கள்
கொங்கு மண்டலம் மீது மட்டுமே கரிசனங்கள் காட்டப்படுகின்ற வேதனை வைத்திலிங்கம் போன்றோருக்கு ஏற்கனவே இருந்து வரும் நிலையில், இதுவும் சாதி ரீதியான விமர்சனங்களை எடப்பாடி மீது முன்வைக்க காரணமாகிவிட்டது. எனவே, முக்குலத்தோர் சமுதாய மக்களின் இழந்துபோன ஆதரவை மீட்டெடுக்கவும், ஓபிஎஸ் இந்த விஷயத்தில் நுழைந்து குட்டைய குழப்பி, இருக்கின்ற முக்குலத்தோர் ஆதரவையும் கிடைக்காமல் செய்துவிடுவாரோ என்ற கலக்கத்திலேயே, அதே சமூகத்தை சேர்ந்த உதயகுமாருக்கு போஸ்டிங் தரப்பட்டுள்ளதாகவே தெரிகிறது..

சீண்டல்
முக்குலத்தோரை எடப்பாடி புறக்கணிக்கிறார் என்ற ஓபிஎஸ்ஸின் அரசியலும் இனி எடுபடாது என்பதே எடப்பாடியின் கணக்காம்... இதனால், ஓபிஎஸ்ஸின் செல்வாக்கையும் தென்மண்டலங்களில் உடைக்க முடியும் என்று யோசிக்கிறாராம். அதுமட்டுமல்ல, சும்மா இருந்த உதயகுமாரை இந்த அளவுக்கு பெரிதுப்படுத்திவிட்டதே ஓபிஎஸ் டீம்தான் என்கிறார்கள்.. நேற்றுகூட கோவை செல்வராஜ், உதயகுமாரை சீண்டி பேட்டி தந்திருந்தார்..

சீனியர்கள்
"உதயகுமார் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார், அம்மா பெயரில் கோவில் கட்டிய இடத்தில் தனது தந்தையை அடக்கம் செய்து சுடுகாடு ஆக்கிவிட்டார். லஞ்ச ஒழிப்பு துறையில் உதயகுமார் செய்த ஊழல் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன்" என்று கூறி உதயகுமாருக்கான முக்கியத்துவத்தை தந்திருந்தார்... கொங்கு மண்டல அதிமுக சீனியர், தென்மண்டல அதிமுக சீனியரை பகிரங்கமாக மிரட்டியதும், ஒருவகை சாதி அரசியலாகவே பார்க்கப்பட்டது.

கும்பிடு போட்ட உதயகுமார்
ஆக மொத்தம், அதிமுகவில் எப்போதுமே மேலோட்டமாக இருந்து வரும் சாதீய லாபி, இப்போது ஓபனாக வெடிக்க தொடங்கிவிட்டது... அதிகார மோதலானது சாதீய மோதலாக வெடிக்க தொடங்கிவிட்டது.. ஒருவேளை சசிகலா தரப்பினருடன் ஓபிஎஸ் இணையும் சூழல் வந்தால், அதேசமூகத்தை சேர்ந்த உதயகுமாரின் அரசியல் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு துவங்கி உள்ளது.. காரணம், ஓபிஎஸ் மனைவி இறந்ததுமே அவருக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு சசிகலா சென்றபோது, அவருக்கு பெரிய கும்பிடு போட்டு வரவேற்றவர் இதே ஆர்.பி உதயகுமார் என்பதையும் இங்கு அழுத்தமாக பதிவு செய்ய வேண்டி உள்ளது..
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications