"தூக்குங்க அவரை".. மேலிட "சீக்ரெட்" மூவ்.. இது சீன்லயே இல்லையே.. திமுகவை விடுங்க.. அப்ப எடப்பாடி?
அமமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராகி கொண்டிருக்கிறதா தெரியவில்லை
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்து ஒன்று, தமிழக அரசியலில் விவாதங்களையும், பரபரப்பையும் கிளப்பி வருகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. கட்சியை பலப்படுத்தும் வேலையிலும் பாஜக மும்முரமாகி விட்டது.. அதிலும், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, என நாலாபக்கமும் உள்ள கட்சிகளில் அதிருப்திகள் யார் என்பதை பார்த்து கொக்கி போட்டு தூக்கும் வேலையில் இறங்கிவிட்டதாகவே தெரிகிறது.
பாஜகவுக்கு யார் சென்றாலும், முக்கிய பதவி தரப்படும் என்பதால், பலரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருவது இயல்புதான்.. ஆனாலும், உடனடியாக முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதால், இந்த கட்சிகளின் அதிருப்தியாளர்கள் பொறுமை காத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

4 சீட்டுகள்
இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாஜக இப்போதைக்கு உள்ளது.. அதிமுகவுடன் இணைந்து கூட்டணி வைத்ததால்தான் 4 சீட்களையாவது பெற முடிந்தது என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம், வரப்போகும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமையாவிட்டாலும், தனித்து களம்காணும் வகையில், அமைய உள்ள கூட்டணியை பலப்படுத்தும் பணிகளிலும் கவனம் செலுத்தவும் முயன்றுள்ளது.. கடந்த எம்பி தேர்தலின்போதே இப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டது..

டிடிவி தினகரன்
அதில், முதலில் சிக்கியவர் அமமுகவின் டிடிவி தினகரன்தான் என்றார்கள்.. காரணம், தினகரனை பொறுத்தவரை, மிக தேர்ந்த அரசியல்வாதி.. நுணுக்கம் தெரிந்தவர்.. ஆனால் ஏனோ ஆர்கே நகர் தேர்தலுக்கு பிறகு பெரிய அளவில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை. எனினும் ஒருகுறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை தக்கவைத்தபடியே வருவதை, டெல்லியே கவனித்து வைத்துள்ளது.

சசிகலா
சசிகலா விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாஜக, பெரிதாக வாய் திறக்கவில்லை.. ஆதரவு தரவில்லை.. சசிகலாவை வைத்து கட்சிக்கு பெரிதாக லாபம் எதுவுமில்லை என்று பாஜக தரப்பு நினைப்பதாலும், தென்மண்டலங்களில் மட்டுமே செல்வாக்கு இருப்பவரை பொறுப்பில் அமர்த்தினால், அதிமுக பலவீனப்படுவதுடன், சாதி ரீதியான முத்திரை கட்சிக்கு அதிகமாக விழுந்து விடும் என்று கணக்கு போடுவதாலும், சசிகலாவை ஆதரிக்க தயங்குகிறது.

கண் வைத்த பாஜக
அதற்கு பதிலாக, தினகரன் மீது பாஜகவின் கண் விழுந்தது.. அப்போது அது கைகூடாத நிலையில், வரப்போகும் தேர்தலில், அமமுகவை வைத்து பாஜக கூட்டணி கணக்கு போடும் என்கிறார்கள்.. இதற்கு காரணம், கடந்த தேர்தல்களில் அமமுக பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்கள்தான்.. அதிலும் திமுகவுக்கு செல்லவிருந்த ஓட்டுக்களை வெகுவாக பிரித்ததே தினகரன்தான் என்பதே பாஜகவின் இந்த நம்பிக்கைக்கு காரணம்.

திமுகவுக்கு செக்
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு கணிசமான லோக்சபா தொகுதிகளை ஒதுக்கலாம் என மேலிடம் விரும்புவதாக தெரிகிறது.. இது எல்லாவற்றையும்விட, ஆரம்பத்திலிருந்தே தினகரன் மீது டெல்லி மேலிடத்திற்கு சாப்ட் கார்னர் இருந்து வருகிறது. அந்த வகையில் அமமுக மீது தன்னுடைய கவனத்தை கூடுதலாகவே திருப்பி, அக்கட்சியின் அசைவுகளை கவனித்து வருகிறதாம் பாஜக.. அப்போதுதான், பலம்பொருந்திய ஸ்டாலினின் திமுகவை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றும் பிளான் நடப்பதாக தெரிகிறது.

நயினார் நாகேந்திரன்
இதை எல்லாம் மனதில் வைத்தே, இரட்டை இலை சின்னம் லஞ்சம் வழக்கு விறுவிறுப்பானதாக தகவல்கள் வெளிவந்தாலும், பாஜகவை தற்போதுவரை தினகரனும் பெரிதாக விமர்சிக்காமல் உள்ளதையும் கவனித்தில் கொள்ள வேண்டி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று ஒரு கருத்தை செய்தியாளர்களிடம் சொல்லி உள்ளார்.. "சசிகலா பாஜகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் சொல்வதுகுறித்து, சசிகலாதான் பதில் கூற வேண்டும்... ஆனால், அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சசிகலா
அதிமுகவை கைபற்றுவது தான் தன்னுடைய ஒரே நோக்கம், அதற்காகவே அமமுகவை ஆரம்பித்தேன் என்று இத்தனை காலமும் தினகரன் சொல்லி வந்த நிலையில், திடீரென அமமுக -அதிமுக இணைய வாய்ப்பில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அப்படியானால் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தயாராகிறாரா? அல்லது கட்சியை கைப்பற்றியே தீருவேன் என்று உறுதியுடன் தெரிவித்து வரும் சசிகலாவை வெறுப்பேற்ற இவ்வாறு சொல்கிறாரா? தெரியவில்லை.. ஆனால், எப்படி பார்த்தாலும், தினகரனின் இந்த அதிரடி அரசியலை பாஜக ரசிக்கும் என்றே தெரிகிறது.. பார்ப்போம்..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications