சட்டென வந்த "குரூமூர்த்தி".. பட்ட பாடெல்லாம் போச்சே.. எடப்பாடி பழனிசாமியின் ரகசிய டீம்.. சரவெடி பாஜக
ஓபிஎஸ்ஸுக்கு பாஜகவின் ஆதரவு கிடைத்துள்ளதால், எடப்பாடி என்ன செய்ய போகிறார்
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், பாஜகவின் தலையீடுகள் அதிகரித்து வருவதாகவும், இது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை தர துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 10 எம்பி சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.. அதற்காகவே அதிமுகவின் இணக்கத்தை விரும்புகிறது..
கடந்த சில மாதங்களாகவே, அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாத நிலையில், தற்சமயம், இவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக மறைமுக அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வோட்பேங்க்
அதற்கேற்றபடி ஓபிஎஸ் டெல்லிக்கு செல்ல உள்ளதாகவும், விரைவில் பிரதமர், அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் செய்திகள் பரபரத்து வரும் நிலையில், ஒன்றுபட்ட அதிமுகவையே பாஜக விரும்புகிறது.. தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? என்று முழுமையாக தெரியாவிட்டாலும், கட்சி நிர்வாகிகளின் ஆதரவு 95 சதவீதம் இருப்பதை மறுக்க முடியாது.. ஆனால், ஓபிஎஸ்ஸை சுத்தமாக கழட்டிவிட நேர்ந்தால், ஏதோ ஒரு வகையில் அதிமுக ஓட்டுக்களையே ஓபிஎஸ்ஸும் பிரிக்கக்கூடும் என்பதை மறுக்கவும் முடியாது.

15%
இது எடப்பாடிக்குதான் சிக்கல்.. அதேபோல, கடந்த முறை கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பெரும்பாலான வாக்குகளுக்கு பாமகவும் ஒரு காரணம்.. கிட்டத்தட்ட 15 சதவீத பாமக வாக்கு வங்கி கொங்குவில் உள்ளது.. கூட்டணியில் இருந்து பாமகவை கழட்டிவிட நேர்ந்தால், இதுவும் எடப்பாடிக்கு சிக்கல் என்பதை கூற வேண்டி உள்ளது.. அதனால்தான், எடப்பாடி, தென் மாவட்டங்களில் வலையை வீசி, வாக்கு வங்கியை நோக்கி நகர்ந்து வருகிறார்.. ஆனால், தென்மண்டல அதிமுக புள்ளிகள் ஓபிஎஸ்சை பெரிதாக விமர்சிப்பதில்லை, அறிக்கையும் வெளியிடுவதில்லை, கட்சி கூட்டங்களில் ஓபிஎஸ் தரப்பை பற்றி வாயே திறப்பதில்லை, என்பதெல்லாம் எடப்பாடி காதுகளுக்கு சென்றுள்ளது.

ரகசிய ஐடி விங்
அதைக் கேட்டு அதிர்ந்துபோன எடப்பாடி, அவர்கள் யார் என்பது குறித்து லிஸ்ட் எடுக்க உத்தரவிட்டுள்ளதுடன், இதற்காகவே ஐடி விங் மூலம் ரகசிய டீமை களமிறக்கியும் உள்ளார்.. ஆனால், ஓபிஎஸ் எதற்குமே அசரவில்லை.. காரணம், இதுவரை ஓபிஎஸ் + எடப்பாடி என இருவரில் யாருக்குமே தன் ஆதரவை வெளிப்படையாக பாஜக காட்டிக் கொள்ளவிட்டாலும், ஓபிஎஸ்ஸை கைவிட்டுவிட்டதாகவே ஒரு பேச்சு வட்டமடித்து கொண்டிருந்தது.. ஆனால், இப்போது நிலைமை சற்று மாற துவங்கி உள்ளதாம்.. அதற்கான அறிகுறிதான், நேற்றைய தினம் துக்ளக் குருமூர்த்தி பேச்சில் அறிய முடிந்ததாக கூறுகிறார்கள் அதிமுகவினர்..

ஃபைல்கள்
"அதிமுக பிளவால் பாஜக வளர்ச்சி பெறும். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இருக்கும். அதிமுக தொடர்ந்து இதே போல் இருந்தால் அது சின்ன கட்சியாக மாறிவிடும். அதிமுகவின் அடையாளமாக எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இருந்தால் அதிமுக சின்னக்கட்சி ஆக மாறிவிடும்" என்று பாஜகவின் தவிர்க்க முடியாத நபரான குருமூர்த்தி கூறியுள்ளது, அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆக, மேலிட பாஜகவானது, ஓபிஎஸ்ஸுக்கான ஆதரவை அதிகரித்து வருவதுடன், எடப்பாடிக்கான நெருக்கடியை கூட்ட தொடங்கிவிட்டதும் இதன்மூலம் அறிய முடிகிறது.. இனி, எடப்பாடி பழனிசாமியின் மூவ் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்தே, பாஜகவுடனான அவரது நிலைப்பாடு தெரியவரும்.. பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications