"சாயும்" தினகரன்.. தாங்கும் பாஜக.. சைக்கிள்கேப்பில் "நூல்" விட்ட எடப்பாடி.. தொக்கா சிக்கும் மீன்கள்?
அமமுக அதிருப்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வலையை வீசியுள்ளதாம்
சென்னை : எவ்வளவுதான் நெருக்கடிகள் சூழ்ந்தாலும், தன் பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. என்ன விஷயம் தெரியுமா?
பாஜகவை பொறுத்தவரை டிடிவி மீது நிறைய சாப்ட் கார்னர் உள்ளது.. குறிப்பாக அவரது அரசியலில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.. மிக சிறந்த அரசியல் தலைவர் என்ற வரிசையில் அவரை வைத்து பார்க்கிறது..
தினகரன் எப்போது தேர்தலில் நின்றாலும், அமமுக பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்கள்தான் என்பதால், இதையும் தங்களுக்கு சாதகமாகவே பாஜக கருதுகிறது.

டென்ஷன்
அதனால்தான் வரப்போகும் தேர்தலிலும் தினகரனை குறி வைத்துள்ளதாகவும், அப்படி அமமுகவை கூட்டணியில் இழுத்து போட்டால், நிச்சயம் திமுகவின் ஓட்டுக்களை வெகுவாக பிரித்துவிடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இன்னொரு கணக்கும் பாஜகவுக்கு உள்ளது.. டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், அதிமுகவுக்கு டென்ஷன் எகிறியே கிடக்கும், அதனால் அவர்களுக்குள் அதிகாரப்பிரச்சனை தலைதூக்கி உட்கட்சி பூசல் பெருகினால் அது தங்களுக்கு சாதகம் என்றும் நினைக்கிறது..

ம்ஹூம் நோ
ஆர்கே நகர் தேர்தல் சமயத்தில், "எந்த காலத்திலும் பாஜகவுடன் மட்டும் கூட்டணி கிடையாது" என்று அடித்து சொன்னவர், இப்போது முழுமையாக பாஜகவின் குரலாகவே ஒலிக்க தொடங்கிவிட்டார் தினகரன்.. "அன்றைக்கு பாஜகவின் செயல்பாடுகள், இன்றைக்கு பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைதான் நாம் பார்க்க வேண்டும்.. அன்றைக்கு ஸ்டெர்லைட் விஷயத்தில், அவர்களின் செயல்பாட்டை பார்த்து அப்படி நினைத்தேன்.. ஆனால், அதற்கு பிறகு தமிழகத்தின் மீதும் அவர்கள் கரிசனமாக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள் என்ற சமிக்ஞைகள் தெரிவதால், அவர்களுடன் கூட்டணி வைத்தாலும் அதில் தவறில்லை என்று வெளிப்படையாகவே சொல்கிறார் தினகரன்.

நெருக்கம் + ஈர்ப்பு
அதிமுகவில் இதற்கு முன் யார் ஓபிஎஸ், எடப்பாடி இருவரையும் சேர்த்து வைத்தார்களோ, அவர்கள் மனது வைத்தால் தான், அவர்கள் இருவரும் சேருவார்கள்" என்றும் ஆரூடம் கூறியுள்ளது, அதிமுகவினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இப்படி, பாஜகவுடன் நெருக்கமாகி கொண்டே வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு கணக்கை போட்டுள்ளாராம். சமீபகாலமாகவே கட்சிக்கு எந்தவிதமான செலவையும் தினகரன் செய்வதில்லையாம். எந்த ஒரு கூட்டம் என்றாலும் நிர்வாகிகளையே முழு பொறுப்பையும் ஏற்க சொசால்லிவிட்டு, தாராளத்தை கண்ணிலேயே காட்டுவதில்லையாம்.

தூண்டில் மீன்
இதனால் பல அமமுக நிர்வாகிகள் கையை பிசைந்து நிற்க, இந்த தகவலை மோப்பம் பிடித்துவிட்டதாம் எடப்பாடி தரப்பு.. தென்மண்டலங்களில் உள்ள அமமுக அதிருப்தியாளர்களுக்கு வலையையும் விரித்துள்ளாராம்.. அத்தகைய நிர்வாகிகளிடம், தற்போதுள்ள பதவியையே அல்லது அந்த பதவிக்கு இணையான பதவியை தருவதாக சொல்லி நூல் விட்டுள்ளதாம் எடப்பாடி தரப்பு.. ஆனால், அதற்குள் இப்படி ஒரு விஷயம், தினகரன் காதுக்கும் சென்றுவிட்டதாம்..

சிங்கங்கள்
ஏற்கனவே, அசால்ட்டாக இருந்துதான், அமமுகவின் பலம்வாய்ந்த் சிங்கங்களை இழந்துவிட்டோம்.. இனியாவது உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்து, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.. எவ்வளவுதான் சட்டசிக்கல்கள், பாஜக அழுத்தம், ஓபிஎஸ் பிரச்சனை, வழக்குகள், ரெய்டுகள், என நாலாபக்கமும் நெருக்கடி இருந்தாலும், தன் பலத்தை தக்க வைத்து கொள்வதிலும், பெருக்கி கொள்வதிலும் உஷாராகவே இருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி என்று வியக்கின்றனர்..












Click it and Unblock the Notifications