"கேம் சேஞ்ச்".. டோட்டலாக மாறிய எடப்பாடி பழனிசாமி.. "யார்" கிட்டயும் போகட்டுமே..உற்றுநோக்கும் மேலிடம்
எடப்பாடி பழனிசாமி பாஜகவை கழட்டிவிடவும் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமி, முன்பைவிட கூடுதலாக, தற்போது துணிந்து களமாடி கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.. தென்மண்டலங்களிலும் பலத்தை கூட்டி வரும் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜகவுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துவருவதாகவும் சொல்கிறார்கள்.
பாஜக மேலிடம், 2 முறை சந்திக்க தனக்கு அப்பாயிண்ட்மென்ட் தராததுடன், மாஜிக்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களிடம் நடத்திய ரெய்டும், அதன் மூலம் கணக்கில் வராத பல கோடி ரூபாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் எடப்பாடி பழனிசாமியை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது..
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட, டெல்லியை சமாதானப்படுத்தி விடலாம் என்பதே எடப்பாடியின் முழுமூச்சு நம்பிக்கையாக இருந்தது.. ஆனாலும், மேலிடம் அதை கண்டுகொள்ளவில்லை.

அப்பாயிண்ட்மென்ட்
அந்த கோபத்தில்தான் டெல்லியில் இருந்து திரும்பிய உடனேயே, ஓபிஎஸ் டீமில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.. ஏற்கனவே பாஜகவுக்கு எரிச்சலை தரக்கூடிய செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருவதாக டெல்லியின் காதில் புகார் சொல்லப்பட்டு வந்தது.. இதுஎடப்பாடி தரப்புக்கும் தெரியும் என்றாலும், தன் போக்கை எடப்பாடி மாற்றிக் கொள்வார், அல்லது பாஜகவிடம் லேசாக படிந்துவிடுவார் என்றே கணக்கு போடப்பட்டது. ஆனால், டெல்லியில் இருந்து திரும்பியதுமே, எடப்பாடி இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தது, டெல்லிக்கே கொஞ்சம் ஷாக்தானாம்..

ஓபிஆர்
போதாக்குறைக்கு ஓபிஎஸ் பக்கம் ஆதரவு அலை வீசுவதால், இன்னும் இறுக்கத்துடன் காணப்படுகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. எல்லாவற்றிற்கும் மேலாக, ஓபி ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கம் செய்த எடப்பாடி, ரவீந்திரநாத்தை, அதிமுக உறுப்பினராகவே கருதக்கூடாது என்று கூறி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, கடிதம் எழுதினார்... ஆனால், அந்த கடிதத்தையும் மேலிடம் கண்டுகொள்ளவில்லை.. அதிமுக எம்பியாகவே இன்றுவரை ஓபிஆர் திகழ்ந்து வருவதும், எடப்பாடி டீமுக்கு அதிர்ச்சிதான்.

நெருக்கம்
அதனால்தான், பாஜக எந்த வகையில் செக் வைத்தாலும், அவைகளை எதிர்க்கவும், சமாளிக்கவும், எடப்பாடி பழனிசாமி துணிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.. மேலும், தனக்கு நெருக்கமானவர்களிடம், பாஜகவை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்... எதுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அலர்ட் செய்துவிட்டே, ஒவ்வொரு அதிரடியையும் தற்போது எதிர்கொண்டு வருகிறாராம்.. அதிமுகவில் 90 சதவீத நிர்வாகிகளின் வலிமையை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை, பாஜகவும், அவ்வளவு சீக்கிரம் பகைத்து கொள்ளுமா? என்பது தெரியவில்லை.

எடப்பாடி டீம்
என்றாலும், பாஜகவின் தயவு தங்களுக்கு வேண்டாம் என்பதே எடப்பாடி & கோ-வின் முடிவாக இருக்கிறதாம். அதனால்தான், நேற்றைய தினம் ஓபிஎஸ் பற்றி பேசும்போது, பாஜகவுக்கு எரிச்சலூட்டும் வகையிலேயே பதிலை சொல்லி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. சேலத்தில் பேட்டி தந்தபோது, ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் போகட்டும், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியிருந்ததும் அதை மையப்படுத்திதான் என்கிறார்கள்.. இதையும் பாஜக கவனிக்காமல் இல்லை.. கண்டுகொள்ளாமல் விடப்பட்டால், கலங்கடித்து ஓடிவரக்கூடும் என்றே மேலிடம் நினைத்ததாம்..

தவிடுபொடிகள்
ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால், வேறு மாதிரியாக இருக்கிறது என்கிறார்கள்.. அதேபோல, நீதிமன்றத்திலும், ஓபிஎஸ்ஸுக்கு சளைக்காமல் எடப்பாடி டீம் பதில்களையும், வாதங்களையும் எடுத்து வைத்து வருவது, அவரது ஒற்றை தலைமை பிடிவாதத்தையே காட்டுவதாகவும் அரசியல்நோக்கர்கள் சொல்கிறாகள். நாளை மீண்டும் பொதுக்குழு வழக்கு பற்றின விசாரணை கூட உள்ளநிலையில், ஹைகோர்ட் என்னவகையான தீர்ப்பை வழங்க போகிறதோ தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ், நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நம்பி வருகிறார்..

ஹைகோர்ட்
2 வாரத்தில் பொதுக்குழு குறித்து உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, ஹைகோர்ட்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. பாஜகவையும், ஓபிஎஸ்ஸையும் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கினாலும், கோர்ட் தீர்ப்புதான் அவரது, தற்காலிக பொதுச்செயலாளர் பதவியையும் தீர்மானிக்க உள்ளதையும் மறுக்க முடியாது.. ஆக, பாஜகவுக்குள்ளான விரிசல் எடப்பாடி தரப்புக்கு மேலும் அதிகமாகி உள்ளது என்பது மட்டும் தெளிவாகி கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications