"நிஜம் நிழலாகிறது".. கமலாலயம் வெச்ச புள்ளியில்.. கோலம் வரையும் எடப்பாடி.. "கலைகிறது மேகங்கள்".. பலே
அதிமுக - பாஜக கூட்டணி இடையே விரிசல் வந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், இரு கட்சியிலும் பிணக்குகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இது இரு கட்சி தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தி வந்தாலும், மற்றொருபக்கம், அதிமுக - பாஜக கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுக - பாஜக இடையேயான உட்கட்சி பூசல்கள் இதுவரை முடிவுக்கு வராத நிலையில், அதுகுறித்த ஏகப்பட்ட சந்தேகங்களும், யூகங்களும், அனுமானங்களும் இணையத்தில் தினமும் வட்டமடித்து கொண்டே இருக்கிறது.
பாஜகவில் இருந்து அதிருப்தியாளர்கள் ஒவ்வொருவராக விலகி வருவதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.. மூத்த தலைவர்கள் நாராயணன் திருப்பதி, வெங்கடேசன், கோவர்த்தன், குஷ்பு போன்ற பாஜக நிர்வாகிகள் சிலருக்கு, சமீபத்தில் மத்திய அரசு பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டன...

அதிருப்தி
இதையடுத்து, தனக்கு எந்த பதவியும் கிடைக்காத அதிருப்தியில் தான், நிர்மல்குமார் அதிமுகவுக்கு தாவிவிட்டதாக காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது பதவிக்காக, பொறுப்புக்காக காத்திருந்தவர்கள், அதிருப்தி அடைந்து மாற்று கட்சிக்கு சென்றதாக சொல்கிறார்கள்.. ஆனால், இன்னொரு சாரார் அதை மறுக்கிறார்கள்.. ஒருகட்சிக்குள் நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். அப்படியானால், கட்சியில் இருந்து விலகி மட்டும் இருக்கலாமே? எதற்காக விலகும்போது, கட்சி தலைமையை மோசமாக விமர்சிக்க வேண்டும்? அப்படியே கட்சியில் இருந்து விலகினாலும், நேராக ஏன் அதிமுக போக வேண்டும்? நேராக திமுக, காங்கிரஸ், விசிக என்று செல்லலாமே? என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

டிராமா + டிராமா
இப்படிப்பட்ட சூழலில், அதிமுக - பாஜக இரு தரப்பிலும் நடந்து கொண்டிருப்பது "ஒரு நாடகம்" என்று சொல்லி வருகிறார் மூத்த தலைவர் கேசி பழனிசாமி.. ஒரு பேட்டியில் சொல்கிறார், "எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, மேலிட பாஜகவை எதிர்ப்பவர் கிடையாது.. கடந்த 2016முதல் இப்போதுவரை, பாஜகவின் கொள்கைகளை அல்லது தமிழர் நலனை பாதிக்கக்கூடிய விஷயங்களை இதுவரை ஏதாவது ஒன்றையாவது எடப்பாடி பழனிசாமி எதிர்த்திருக்கிறாரா? அண்ணாமலை - எடப்பாடி இருவரிடமும், தனிப்பட்ட முறையில், சாதீய ரீதியாக குற்றச்சாட்டுகள் வருமேயொழிய, தேர்தல் சமயத்தில் இவங்க 2 பேருமே ஒன்று சேர்ந்து கொள்வார்கள்.. இப்போது கட்சி தாவல் நடப்பதெல்லாம் ஒரு நாடகம்.. கருத்து வேறுபாடு இருப்பது போலகாட்டிக் கொள்கிறார்கள்" என்றார்.

அலசல் அலசல்கள்
அதிமுக - பாஜக இடையே நிலவிவரும் அதிருப்தி குறித்து இப்படியான அலசல்கள் வட்டமடித்தாலும், உண்மையிலேயே என்ன நடக்கிறது? கூட்டணி தொடரும் என்று இரு கட்சியிலும் பேட்டிகளை தந்தாலும், இரு கட்சிகளின் நிர்வாகிகளின் பேச்சில் கோபமும், ஆத்திரமும், காட்டமும் தென்பட்டு கொண்டிருக்கிறதே? என்ன காரணம்? என்ற கேள்விகள் வலம்வருகின்றன.. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

மைனஸ் பாயிண்ட்ஸ்
"பாஜகவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்க துணிந்துவிட்டார் என்றால், அவர் இந்நேரம் மேலிட பாஜகவை விமர்சித்திருக்க வேண்டுமே? மத்திய பாஜகவின் விலைவாசி ஏற்றம், கேஸ் விலை உயர்வு இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருக்க வேண்டுமே? அதானி விஷயம் குறித்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டுமே? ஆனால், எடப்பாடி இதுவரை ஏதாவது அதை பற்றி பேசினாரா? அதனால் இது ஒரு நாடகம்தான்.. பாஜகவை தவிர்த்துவிட்டு, எடப்பாடியால் இருக்க முடியாது.. காரணம், புலனாய்வு துறைகள் மூலம் நெருக்கடிகள் வந்தாலும், அவைகளை தங்களிடம் அண்டவிடாமல் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கைக்காகத்தான்..

ஒருதலைப்பட்சம்
அதுமட்டுமல்ல, திமுகவுடன் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது, இன்னொரு தேசிய கட்சியான பாஜக, தங்களின் கூட்டணியில் இருப்பதே சரி என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறது.. ஒருவேளை நாளை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டாலும், அக்கட்சியின் தயவு தங்களுக்கு தேவைப்படும் என்றும் அதிமுக கணக்கு போடுகிறது.. அதனால், ஈரோடு இடைத்தேர்தல் தோல்வியை மறைப்பதற்காகவே இப்படி ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.. இடைத்தேர்தல் சமயத்தில் இருந்தே, "எடப்பாடிக்கு ஆதரவாக ஒருதலையாய் செயல்படுகிறார் அண்ணாமலை" என்ற விமர்சனம் கிளம்பி உள்ளது.

இணக்கம் + பிணக்கம்
இந்த விமர்சனத்தை மட்டுப்படுத்தவே, பொதுச்செயலாளர் தேர்வு முடியும்வரை இப்படியான செயல்பாடுகள் தொடரலாமே தவிர, அதிமுக - பாஜக இடையே பிளவு என்பது வரவாய்ப்பே இல்லை. இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.. அண்ணாமலை மீதான தனிப்பட்ட அதிருப்திகள் காரணமாக வேண்டுமானால் நிர்மல்குமார் விலகி அதிமுகவில் வந்திருக்கலாம்.. ஆனால், 420 என்று சொல்லிவிட்டு வெளியே வந்திருக்கிறார்.. இவ்வளவு மோசமாக விமர்சித்தும்கூட, நிர்மல்குமாரை மேலிட பாஜக யாருமே கண்டிக்கவில்லை.. அண்ணாமலைக்காகவும் மேலிட பாஜக சப்போர்ட்டுக்கு வரவில்லை..

ஹோப் டீம்
இதே நிர்மல்குமார், அண்ணாமலையைதான் விமர்சித்து விட்டு வெளியே வந்திருக்கிறாரே தவிர, பாஜகவையோ, அக்கட்சியின் கொள்கைகளையோ விமர்சிக்கவில்லை.. மத்திய பாஜகவின் செயல்பாடுகளையும் கண்டிக்கவில்லை.. எனவே, நாளைக்கே தமிழக பாஜக தலைமையில் மாற்றம் செய்யப்பட்டால், நிர்மல்குமார், மீண்டும் பாஜகவுக்கே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. எனவே, நிர்மல்குமார் விஷயத்தை மட்டும் இங்கே தனியே ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், அதிமுக - பாஜக இடையே நடந்து கொண்டிருப்பது ஒரு தற்காலிக நாடகம் மட்டுமே.. விரைவில் இரு கட்சி தலைவர்களும் ஒன்றுசேருவார்கள்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications