பஞ்சு பஞ்சா போச்சே.. கிளம்பி வந்த "2 தூதர்கள்".. ஏமாந்த எடப்பாடி & பாஜக சீனியர்ஸ்.. மேலிடம் "கறார்"

மாநில தலைமையை மாற்றும் எண்ணம் இல்லை என்று நட்டா திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக குறித்து ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ள நிலையில், அது பாஜக சீனியர்கள் மற்றும் அதிமுக இடையே கடுமையான அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்றே இதுவரை உறுதியாகவில்லை.. அதேசமயம், பாஜகவை கழட்டிவிட எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகவும், எடப்பாடியை கழட்டிவிட்டு, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன..

இதனிடையே, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை கட்சிக்குள் இணைத்து கொள்ளும்படி மேலிட பாஜக, எடப்பாடிக்கு பலவிதங்களில் அழுத்தம் தந்து வருவது தெரிந்த விஷயம்தான் என்றாலும், எடப்பாடியும் பாஜக மேலிடத்துக்கு ஒரு அழுத்தம் தந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.

 ஹோப் வானதி

ஹோப் வானதி

அதாவது, அண்ணாமலையை உடனடியாக பதவியில் இருந்து மாற்றுங்கள், பொன்.ராதா அல்லது வானதி போன்ற சீனியர்களை மாநில தலைமையிலை அமர வையுங்கள், இல்லாவிட்டால், திமுக கூட்டணியை சமாளிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்து வந்துள்ளாராம்.. அதற்கு பிறகுதான், எடப்பாடி பழனிசாமி டீமில் சிவி சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி தவிர, 2ம் கட்ட தலைவர்களான எம்எல்ஏ அருண்மொழித்தேவன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்பி கோ.ஹரி உள்ளிட்டோர் பாஜகவுக்கு எதிராகபேச ஆரம்பித்தனர்..

 அமாவாசை சத்யராஜ்

அமாவாசை சத்யராஜ்

சில நாட்களுக்கு முன்பு அருண்மொழித்தேவன் கடலூரில் பேசும்போது, "அண்ணாமலை திடீரென பாஜக மாநில தலைவர் ஆகிவிட்டார். அவரைபார்த்தாலே அமாவாசை சத்யராஜ் ஞாபகம்தான் வருது.. பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்று சொன்னால், அதற்கு மறுப்பு சொல்லுங்கள், அதைவிட்டுவிட்டு, 2ம் கட்ட, 3ம் கட்ட என்று ரேங்க் போடுவதற்கு இந்த அண்ணாமலை யார்? என்று கேட்டிருந்தார்.. திருவள்ளூர் மாவட்டத்தில் கோ. ஹரி பேசும்போது, "எந்தக் காலத்திலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது... 4 தொகுதிகளை வென்ற பாஜக தன்னை எதிர்க்கட்சியாக நினைத்துக் கொண்டுள்ளது... வெறும் 4 எம்எல்ஏ அதுவும், அதிமுக போட்ட பிச்சை.. தினமும் மீடியாவில் தன்னுடைய பெயர் வரவேண்டும் என்பதற்காக, அண்ணாமலை எதை எதையோ பேசி வருகிறார்" என்றார்.

 தூதுவர்கள்

தூதுவர்கள்

சசிகலா, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்ய சில நாட்களுக்கு 2 மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த சேலத்திற்கு வந்தார்களாம்.. அப்போது, ஆலோசனை நடத்த வந்த பாஜக மேலிட தலைவர்களிடம், முதலில் தமிழகத்தில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள்.. மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றோரை தலைவராக போடுங்கள். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் குறித்து பேசக்கூடாது... அப்படி செய்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அப்போது நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது...

 மாற்றுங்க மாற்றுங்க

மாற்றுங்க மாற்றுங்க

ஏற்கனவே தமிழக பாஜகவுக்குள்ளேயே இதே கோரிக்கைதான் கடந்த ஒரு வருட காலமாகவே மேலிடம் வரை பறந்து கொண்டிருக்கிறது.. சீனியர்கள் சிலரும், இதே புகாரை டெல்லி வரை கொண்டு சென்றுள்ளள்ளனர்.. காயத்ரி உள்ளிட்ட எத்தனையோ பேர் தமிழக பாஜகவில் இருந்தும் விலகி வரும் அல்லது நீக்கப்பட்டு வரும் நிலையிலும், அண்ணாமலை மீதே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.. ஒருபக்கம் எடப்பாடி தரப்பு, இன்னொரு பக்கம் தமிழக பாஜக தரப்பு, மற்றொரு பக்கம், அதிருப்தியாளர்கள் என அத்தனை பேரும் அண்ணாமலை மாற்றுங்கள் என்றே கோரிக்கையை டெல்லிக்கு விடுத்து வந்தநிலையில், அண்ணாமலை பதவி பறிக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.

 ஒன் ஹவர்

ஒன் ஹவர்

இதற்கு காரணம், மேலிடத்தின் ஆசீர்வாதம் பெற்றவர் அண்ணாமலை.. குறிப்பாக, அமித்ஷாவின் 100 சதவீத நம்பிக்கையை பெற்றவர்.. மதுரை டூ திண்டுக்கல்லில் பிரதமருடன் ஒரு மணி நேரம் காரில் பயணித்தவர்.. பலருக்கும் கிடைக்காத உச்சபட்ச கவுரம் இது.. அதனால்தான், இப்போதுவரை அவர்களது குட்புக்கில் இடம்பெற்று வருகிறார்.. அப்படி ஒரு பெருமிதம் அண்ணாமலைக்கு கிடைத்துள்ள நிலையில், அவரை மாற்றும்படி முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் எடுபடுமா? என்று தெரியவில்லை.. டெல்லி மேலிடத்தின் நம்பிக்கைக்கு காரணம், "எதையாவது" செய்து தமிழக பாஜகவை, இந்த ஒரு வருடத்தில் நிமிர வைத்த பெருமை அண்ணாமலைக்கு உண்டு என்று நிரூபணம் ஆகி உள்ளதுதான்.

 பெட்டிஷன்ஸ்

பெட்டிஷன்ஸ்

இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் வட்டமடிக்க துவங்கி உள்ளது.. சமீபத்தில் கோவை வந்திருந்த பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவிடம் அண்ணாமலை குறித்து சில சீனியர்கள் நேரடியாகவே புகார்களை அடுக்கினார்களாம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட நட்டா, "நீங்கள் என்ன சொன்னாலும் சரி, 2026 வரை அண்ணாமலை தான் தலைவராக இருப்பார். எம்பி தேர்தலில் போட்டியிட்டு அவர் மத்திய அமைச்சரே ஆனாலும், அவரே மாநில தலைவராகவும் நீடிப்பார். அதனால், இனிமேல் யாரும் அண்ணாமலையை மாற்றச் சொல்லி டெல்லிக்கு பெட்டிஷன் போடாதீர்கள் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.. இதனால் அண்ணாமலை தரப்பு இன்னும் குஷியாகி உள்ள நிலையில், சீனியர்களும் எடப்பாடி டீமும் அப்செட்டாகிவிட்டதாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+