குலை நடுங்க வைக்கும் குரங்கு அம்மை.. ஓரின சேர்க்கையாளர்களுக்கு அதிக பாதிப்பு?அலற வைக்கும் ஆய்வு..!
சென்னை: உலக அளவில் மீண்டும் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பலருடன் உடலுறவு கொள்ளும் நபர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
கொரோனாவுக்கு பிறகு தற்போது உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலை குரங்கு அம்மை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 116 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது.

காங்கோவில் பரவத் தொடங்கிய பாதிப்பில் தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதுவரை 15,000 மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
பாக்ஸ்விரிடே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் காரணமாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இதில் இரு பிரிவு வைரஸ்கள் உள்ளது,. காங்கோவை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகளில் முதல் பிரிவும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இரண்டாவது பிரிவு வைரஸும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் வேறு சில நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் கூட குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. குரங்கு அம்மை பாதிப்பு காற்றின் மூலம் பரவாது என்றாலும் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் நபருடன் உடல் ரீதியான தொடர்பு, இரண்டு மீட்டருக்குள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்போது நீர்த்துளிகள் மூலமாக இந்த தொற்று ஏற்படுகிறது.
குறிப்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், பல ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கும் ஆண்களிடையே இந்த பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குரங்கம்மை பாதிப்பு பாலியல் ரீதியாக பரவும் தன்மை கொண்டது இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். குரங்கு அம்மை பாலியல் ரீதியாக பரவும் செக்ஸுவல் டிரான்ஸ்மிட்டட் டிசிஸ் வகையைச் சார்ந்தது அல்ல எனவும் அதே நேரத்தில் ஆண்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுக்கும் தோல் தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.
எனவே இதனை முழுமையாக பால்வினை நோயாக வகைப்படுத்த முடியாது என்கின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட 90% கிட்டத்தட்ட ஆண்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் என்றும், 10 சதவீத பெண்கள் மட்டுமே இந்த பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இந்த பாதிப்பு குரங்கிலிருந்து மனிதனுக்கு பரவி இருக்கலாம் அல்லது அணில் போன்ற கொறித்துண்ணிகள், குரங்கு போன்ற விலங்கு இறைச்சி ஆகியவை மூலம் பரவி இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு தொடர்ந்து மூன்று முதல் நான்கு வாரம் வரை உடலில் கொப்பளங்கள் தோன்றி அரிப்பும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். நமது ஊரில் இருக்கும் சின்னம்மை பெரியம்மை போன்று தான் இந்த நோய் என்றாலும். இதன் வீரியமும் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொப்புளங்களில் இருந்து வெளியேறும் நீர் மூலமாக பாதிப்பு மற்றொரு நபருக்கு ஏற்படுத்தும் என்பதால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications