"நில்லுங்கப்பா".. டபுள் ஷாக் தந்த எடப்பாடி.. "அச்சாரத்தை" அசத்தலா போட்ட தாமரை.. சமாச்சாரமே இனிமேதான்
மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கான முயற்சியை பாஜக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை: அதிமுக இடைத்தேர்தலில் மண்ணை கவ்வி உள்ள நிலையில், பாஜக அடுத்தக்கட்ட நகர்வை தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.. அதற்கான அச்சாரமும் இப்போதே போடப்பட்டுவிட்டதாக கருதப்படுகிறது.. என்ன நடக்கிறது அதிமுக கூட்டணியில்?
நேற்றைய தினம் வாக்குகள் எண்ண தொடங்கிய முதல் சுற்றிலேயே இளங்கோவன் முன்னணியில் இருந்தார்.. 3வது ரவுண்டு வாக்குகளை எண்ண ஆரம்பித்ததுமே அதிமுகவினர் ஒருத்தர்கூட வாக்குச்சாவடிகளில் காணோம்.
எந்த தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு வித்தியாசம் இப்படி உயர்ந்தது கிடையாது.. இந்த சறுக்கலுக்கு காரணம், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார யுக்திதான் என்கிறது ஒரு தரப்பு.. அதிமுகவுக்காக பாஜக பிரச்சாரம் செய்திருக்க கூடாது, அதனால்தான் இந்த சறுக்கல் என்று இன்னொரு தரப்பும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளன..

ப்ளான் 3
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த பின்னடைவு, வேறு சில அதிர்வுகளையும் அரசியல் களத்தில் இனி ஏற்படுத்த போவதாக கூறப்படுகிறது... எப்படியும் ஆளும்கட்சிதான் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற போகிறது என்பதால், எடப்பாடி மண்ணை கவ்வ நேரிடும்போது, இதை வலியுறுத்தியே, இரட்டை தலைமை விவகாரத்தை மீண்டும் கிளப்பலாம் என்பதே பாஜகவின் பிளானாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.. இதுவே கட்சி ஒன்றாக இருந்திருந்தால், திமுகவை வீழ்த்தியிருக்கலாமே, அதானால், ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால்தான், திமுகவை வீழ்த்த முடியும் என்ற முழக்கத்தை தமிழக பாஜகவும் இனி கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அந்தவகையில், விழுப்புரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தந்த பேட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது..

ஸ்ட்ரைட் அட்டாக்
அண்ணாமலை பேசும்போது, "2024ல் நடைபெறும் எம்பி தேர்தல்தான் எங்களுக்கான தேர்தல்.. அதுக்காக காத்திருக்கிறோம். அதிமுகவில் பிரிந்து நிற்கக்கூடாது.. சின்னத்தில் நிற்க வேண்டுமா? சுயேட்சையாக நிற்க வேண்டுமா? என்று தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஒரு குழப்பம் இருக்கத்தான் செய்தது. பலமாக ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டும். கட்சி சின்னத்தில் நிற்கவேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். அப்போது எங்கள் மீது பலர் (எடப்பாடி டீம்) கோபம் அடைந்தார்கள். எந்தளவுக்கு பலமாக நிற்க வேண்டும் என்பதை இந்த தேர்தல் உணர்த்தி உள்ளது.. பாஜகவின் மகிமை திருமாவளவனுக்கு தெரியவில்லை... இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும், அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும்" என்று கூறியிருந்தார்.

கூல் தலைவர்
இந்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக அண்ணாமலை விமர்சித்திருந்தது பலராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. இந்த இடைத்தேர்தல் விவகாரத்தில், அண்ணாமலை தங்களை நடத்திய விதம் மிகுந்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்ததாக ஓபிஎஸ் தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. அதனால்தான், அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானத்தையும் ஓபிஎஸ் டீம் நிறைவேற்றியிருந்தது.. அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்த்து டிடிவி தினகரனும் அதிர்ந்தே போனார்.. இலைக்காக வேட்பாளரை வாபஸ் பெற்றும்கூட, கடைசிவரை தங்களை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் போன்றோர் நொந்துபோனதாகவும் தகவல்கள் வந்தன.

பிக் அச்சாரம்
அந்த அளவுக்கு எடப்பாடிக்கான முக்கியத்துவத்தை அண்ணாமலை தந்திருந்த நிலையில், நேற்றைய தினம் எடப்பாடி டீமை விமர்சித்திருந்ததும், தற்போது மீண்டும் அதிமுக ஒற்றுமைக்கான அச்சாரத்தை தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்தி உள்ளதும், பல கட்சிகளின் கவனத்தை திருப்ப வைத்துள்ளது.. இந்த 6 மாத காலங்கள் இல்லாமல், திடுதிப்பென்று, சில தினங்களுக்கு முன்பு 2 தரப்பையும் சமாதானப்படுத்த போவதாக களமிறங்கியது தமிழக பாஜக.. ஒரே நாளில் 2 தரப்பையும் அடுத்தடுத்து சந்தித்து, ஒற்றுமையையும் வலியுறுத்தியது.. ஆனால், எடப்பாடி டீம் உஷாராகிவிட்டது.

செங்கோட்டையன்
அதனால்தான், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், "நாங்கள் பலமாகத்தான்" இருக்கிறோம் என்று உடனடியாக பதிலடி தந்தார்.. எடப்பாடியை பாஜக தலைவர்கள் சந்தித்துவிட்டு கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே, பொன்னையனும் காட்டமான பேட்டி தந்திருந்தார்.. "பாஜக வட இந்தியாவில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்" என்று வெளிப்படையாகவே சொல்லி இருந்தார்.. இத்தனைக்கும், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி டீமில் ஆரம்பத்தில் யாருமே முன்வராமல் இருந்திருக்கிறார்கள்.. "யாராவது நில்லுங்கப்பா, செலவை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று உத்தரவாதம் தரப்பட்டும்கூட, களமிறங்க ஒருவித தயக்கம் நிர்வாகிகளிடம் இருந்திருக்கிறது.

மூத்த தலைகள்
இப்படி வேட்பாளர் விஷயம் முதல் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த சிரமப்பட்டுதான் எடப்பாடி வியூகங்களை வகுத்திருந்தார்.. அப்படி இருந்தும்கூட, ஒருங்கிணைந்த அதிமுகவை அவர் ஏற்கவேயில்லை.. அதுகுறித்து தமிழக பாஜக வலியுறுத்தியும் அதை காதிலேயே வாங்காமல், அடுத்த சில நிமிடங்களிலேயே மூத்த தலைவர்களை வைத்து பதிலடிகளை தர செய்திருந்தார்.. சீனியர் தலைவர்கள் தங்களை இப்படி பேசியிருந்தது, தமிழக பாஜக மேலிடத்துக்கு அதிருப்தியை தந்தபோதிலும்கூட, இடைத்தேர்தல் முடியட்டும் என்று பொறுமையுடன் இருந்துவிட்டதாம்..

முனுசாமி ஷாக்
இப்போது எடப்பாடி டீம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை மீண்டும் வலியுறுத்த தொடங்கி உள்ளார் தமிழக பாஜக தலைவர்.. ஆனால், இது எங்களுக்கு தோல்வி இல்லை என்று எடப்பாடி டீம் சொல்லி வருகிறது.. அதிமுக துணை பொதுசெயலாளர் முனுசாமி, காவேரிப்பட்டணத்தில் ஒரு பேட்டி தந்திருக்கிறார்.. அதில், இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளருக்கு தோல்வி என்றாலும், அரசியல் ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.. 2ம் இடத்தை பிடித்துள்ளதால், தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்...

டபுள் ஷாக்
இந்த தேர்தலில் ஓபிஎஸ்ஸூக்கு எந்த வேலையும் இல்லை. அண்ணாமலை சொல்லியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து.. இனி அடுத்த தேர்தலில், அதிமுக தலைமையில்தான், கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றார்.. அதாவது, எப்போதுமே ஒற்றை தலைமையே என்பதை உரக்க சொல்லி உள்ளதுடன், அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி பாஜகவுக்கு டபுள் ஷாக் தந்துள்ளது எடப்பாடி டீம்.. இனி என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications