Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் சத்யா..ஜெயிலில் சதீஷ்! ’வாங்க பழகலாம்’ சூப்பர் ஸ்டார் டூ ’அடிடா அவள’ தனுஷ்! சினிமா காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் காதலித்து பிரிந்து சென்றதால் இளம்பெண் சத்யா ரயிலில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட நிலையில், விருப்பமில்லாமல் துரத்திக் துரத்திக் காதலிப்பது காதல் இல்லை.. பெண்ணுக்கு அன்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவது தான் உண்மையான காதல் எனவும், வயதான காலத்தில் ரஜினி முதல் தற்போதைய பெரும்பாலான நாயகர்கள் இதையே இளைஞர்களுக்கு போதித்து வருவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் உலாவுகின்றன.

சென்னை பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு மாணவி சத்யாவை அவரது முன்னாள் காதலனான சதீஷ் அங்கு வந்த முன் தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செய்ததோடு, மகளின் இறப்பு செய்தியைக் கேட்டு அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

கொலை செய்து விட்டு அங்கிருந்து சதீஷ் தப்பியோடிய நிலையில், போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகு கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் பாதுகாப்பு

இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என பெயர் வாங்கிய சென்னையில் அதுவும் ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில் பட்டப் பகலில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு மரணத்திற்கு காரணமான கொலை குற்றவாளி சதீஷ் கடுமையாக தண்டிக்கபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில் இது போன்ற கொலைகளுக்கு சினிமாவும் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

திரைப்பட பாணி

திரைப்பட பாணி

காதலை ஏற்க மறுக்கும் பெண்களை திரைப்பட பாணியில் மக்கள் கூடும் பொது வெளியிலேயே கொடூரமாக கொலை செய்யும் மோசமான கலாச்சாரத்தை திரைப்படங்களை கொண்டாடும் இளைஞர்கள் மத்தியில் தற்போது பரவிவிட்டது. அதன் வெளிப்பாடு தான் சுவாதி, ஸ்வேதா என கொலைகள் தொடர்ந்து நடைபெற்றதோடு இன்று ஒரு சத்யாவும் பலியாகிவிட்டார் என தொடர் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. 60, 70 வயதைக் கடந்து விட்ட கதநாயகர்கள் கூட இன்னும் பெண்களை துரத்தி கொண்டும், டார்ச்சர் செய்து கொண்டும் 'சூட்டிங்கில்' இருப்பார்கள்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அந்த வகையில் உலக நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என தற்கால நடிகர்கள் வரை எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு இளைஞரையும் கவர்ந்திருக்கின்றனர். சிங்காரவேலனில் நடிகை குஷ்புவை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்து காதலிக்க வைத்து விடுவார் நடிகர் கமலஹாசன். சிவாஜி படத்தில் காதலே வேண்டாம் என ஓடி ஒதுங்கும் ஒரு குடும்பப் பெண்ணை வாங்க பழகலாம் வாங்க பழகலாம் என வீடு வீடாகச் சென்று டார்ச்சர் செய்து அவரையும் காதலிக்க வைத்து விடுவார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அடிடா அவள.. நியாயமா?

அடிடா அவள.. நியாயமா?

ஏதோ ஒரு வகையில் பெண்ணை தொடர்ந்து பாலோ செய்தாலோ அல்லது டார்ச்சர் செய்தாலோ ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும் நிச்சயம் நாயகர்களை காதலித்து விடுவார் என்பதுதான் தமிழ் திரைப்பட இயக்குனர்களின் எண்ணமாக இருக்கிறது. அதையே தங்கள் படங்களில் காட்சிகளாகவும் வைக்கின்றனர். தங்கள் ஆஷ்தான கதாநாயகனுக்கே இது போன்ற காதல் அமையும் போது தங்களுக்கு அமையாதா என நினைக்கும் இளைஞர்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது பார்க்கும் பெண்களை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என நினைக்கின்றனர்.

காக்க காக்க சூர்யாக்கள்

காக்க காக்க சூர்யாக்கள்

தங்கள் காதலிக்கும் அல்லது பார்க்கும் பெண்களை பாலோ செய்வது, மிரட்டுவது, டார்ச்சர் செய்வது ஆரம்பிக்கின்றனர். காதலிக்காவிட்டால் என்ன "அடிடா அவள.. வெட்றா அவள. உதடா அவள..." என பாடல் பாடி உசுப்பேத்தி விடுகின்றனர். விழிப்புணர்வுக்காக எடுக்கிறேன் அப்படி யாரும் முயற்சிக்கக் கூடாது என டைட்டில் காடுகள் போட்டாலும் காதலிக்கும் பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிப்பேன் என காக்க காக்க படத்தில் கூல் சுரேஷ் செய்வார். அதை நாயகன் சூர்யா தடுப்பது போல் இருந்தாலும். அதிகமாக இது போன்ற சைக்கோக்கள் உலாவும் தமிழகத்தில் எல்லா இடங்களும் 'காக்க காக்க சூர்யாக்கள்' நிரம்பி இருக்க முடியாது.

விபரீதங்கள்

விபரீதங்கள்

ஆசிட் அடித்து விட்டால் என்ன? சிங்கப்பெண்ணே எழுந்து வா என நடிகர் விஜய் பாடல் பாடலாம் .ஆனால் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படும் என்பதை விட 'ஒரு பெண் உன்னை காதலிக்கலைன்னா அவளை நீ தங்கையா நினைச்சு விலகிப் போய் விடனும் ' என எந்த சினிமாவும் சொல்லித் தருவதில்லை. ஏதோ ஒரு தருணத்தில் ஒரு கொடூரம் மனம் படைத்த சிலர் இது போன்ற காட்சிகளை திரைப்படத்தில் வைப்பதால் அதனை பார்த்தோ.. பழகியோ.. கேட்டோ இது போன்ற விபரீதங்கள் ஈடுபடுகின்றனர்.

பொறுப்பு வேண்டும்

பொறுப்பு வேண்டும்

தமிழ் சினிமா எத்தனையோ திறமையான இயக்குனர்களை நடிகர்களை இந்த உலகிற்கு தந்திருக்கிறது. அதே நேரத்தில் புகைபிடித்தல், மது அருந்துதல், பெண்களை கேலி செய்தல் போன்ற அத்துமீறல்களையும் தமிழ் சினிமா தான் கற்றுக் கொடுத்திருக்கிறது. இனிமேலாவது நாயகர்கள் கெட்ட வார்த்தை பேசுபவர்கள் ஆகவும். வில்லன்கள் ஆசிட் அடிப்பவர்களாகவும் இல்லாமல் தமிழ் சினிமா தமிழில் பாரம்பரியத்தை காக்க வேண்டும். இந்த பொறுப்பு இயக்குனர்களுக்கு மட்டுமல்ல நாயகர்களுக்கு உண்டு என்பதை உணர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+