சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அச்சாணி" முறிகிறது.. 4 ஜாம்பவான்களின் பதவி பறிபோகிறதா.. யார் சிலுவம்பாளையம் பழனிசாமியா.. என்னாச்சு

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் டீமை பலவீனப்படுத்த புது முயற்சி எடுத்துள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் ஒரு பிளானை கையில் எடுத்தால், அந்த டீமே வெலவெலத்து போகும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி இன்னொரு பிளானை கையில் எடுத்துவிடுகிறாராம்.. என்னவாக இருக்கும்?

அதிமுகவில் உட்கட்சி பூசல் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், அக்கட்சி மீதான அக்கறை பிற கட்சி தலைவர்களுக்கும் சூழ்ந்துள்ளது..

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிடிவாதத்தினால் கட்சியை காணாமல் போக செய்து கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு.. இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை.. ஓபிஎஸ்-ஈபிஎஸ் யார் கை ஓங்கும்? அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு.. இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை.. ஓபிஎஸ்-ஈபிஎஸ் யார் கை ஓங்கும்?

 PLAN A

PLAN A

இதற்கு நடுவில் தென்மண்டலங்களில் தன்னுடைய ஆதரவை நிலைநிறுத்தி காட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணமும் ஆரம்பித்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் அடுத்து செய்ய போகிறார்? அவருடைய திட்டம் என்ன? அமைதியாக ஒதுங்கிவிட்டாரா? என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்தபடியே உள்ளன.. அதேசமயம், ஓபிஎஸ் திட்டம் குறித்த ஒருசில யூகமான தகவல்களும் கசிய தொடங்கி உள்ளன.. பாஜக தன்னை கைவிட்டுவிட்டது என்பதை ஓபிஎஸ் உணர்ந்தாலும், தேர்தல் ஆணையம் நிச்சயம் கைவிடாது என்ற உறுதிப்பிடிப்பில் உள்ளாராம்..

 PLAN B

PLAN B

ஒருவேளை, உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று தீர்ப்பு வந்தால் நல்லது என்று நினைக்கிறாராம்.. அப்படி இல்லாவிட்டால், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக நம்பிகிறாராம்.. காரணம், ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது, தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதவி.. ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் இந்த பதவிகளை நீக்க அதிமுகவில் யாராலும் நீக்க முடியாது..

அச்சாணி

அச்சாணி

அதற்கான வழிகாட்டு முறைகளும் இல்லை.. சட்டவிதிகளும் அதிமுகவில் இல்லை.. சம்பந்தப்பட்டவர்களே தங்களை தாங்களே ராஜினாமா செய்து கொண்டால்தவிர, இந்த பதவியை வேறு யாராலும் பறிக்க முடியாது என்பதே அடிப்படை விதியாக உள்ளது. எனவேதான், ஓபிஎஸ் தெம்பாக இருக்கிறாராம்.அதுமட்டுமல்ல, ஒரு அளவுக்குதான் எடப்பாடி பழனிசாமியின் அட்டகாசத்தை சகிக்க முடியும், இப்படியே எல்லை மீறி நடந்து கொண்டிருந்தால், எடப்பாடியை தள்ளிவைத்துவிட்டு, அவருக்கும் இந்த இயக்கத்துக்கும் சம்பந்தம் இருக்க போவதில்லை என்பதை எடப்பாடியே ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்.. விரைவில் காணாமலும் போவார் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..

விதிமுறைகள்

விதிமுறைகள்

ஆனால், எடப்பாடி பழனிசாமி பக்கம் வேறு ஒரு பிளான் உள்ளதாம்.. இன்னும் சில நாட்களில் பொதுக்குழுவை கூட்டி, தன்னையே நிரந்தர பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. அப்படி கட்சி முழுமையாகவே தன்னுடைய கைக்கு வந்துவிட்டால், முதல்வேலையே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதுதானாம்.. வழக்கமாக, கட்சியில் இருந்து வெளியேறியவர்களின் அரசு பதவிகளில் இருந்து நீக்க, அக்கட்சி தலைவர் உரிமை கோரலாம் என்பது விதியில் உள்ளதாம்.. இந்த விதிமுறையைதான் அஸ்திரமாக எடப்பாடி கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..

 டிஸ்மிஸ்

டிஸ்மிஸ்

அதோவது, ஓபிஎஸ் + வைத்திலிங்கம் + மனோஜ் பாண்டியன் + அய்யப்பன் என 4 பேரின் எம்எல்ஏ பதவிகளையும் பறிப்பது என்றும் திட்டம் ஒன்று உள்ளதாம்.. இதை மாஜி உதயகுமார் கடந்த வாரம் தேனி பேச்சின்போது ஜாடைமாடையாக கூறியிருந்தார்.. இந்த தொகுதியில் இருந்த எம்எல்ஏவை காணோம்.. எங்கேயோ போய்விட்டார்.. மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு இதற்குதானா? விரைவில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.. இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவும் வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் பேசிவிட்டு போயுள்ளார்.. இதைவைத்துதான், ஓபிஎஸ் ஆதரவாளர்களை பதவிநீக்கம் செய்ய எடப்பாடி டீம் பிளான் செய்து வருவது தெரியவந்ததாம்.

 அய்யப்பன்

அய்யப்பன்

ஆனால், அந்த 4 பேரில் அய்யப்பன் வேண்டுமானால், பதவிநீக்கம் செய்துவிட்டு, அந்த தொகுதியில் இடைத்தேர்தலையும் நடத்தி எடப்பாடி டீமில் உள்ளவர்களே வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று வைத்து கொண்டாலும், மற்ற 3 தொகுதிகளில் இது சாத்தியமா? ஓபிஎஸ் + வைத்திலிங்கம் + மனோஜ் பாண்டியனை அவ்வளவு சீக்கிரம் கட்சியில் இருந்து நீக்க முடியுமா? இந்த ஜாம்பவான்களைதான் எடப்பாடி டீமில் உள்ளவர்களால் வெற்றி பெற செய்து காட்ட முடியுமா? என்று தென்மண்டல அதிமுகவில் சவால்களும் எழுகின்றன.. இப்படி ஓபிஎஸ் + எடப்பாடி என இருவர் சண்டைகளும் ஓயாமல் உள்ள நிலையில், கட்சியை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்களாம் தமிழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள்..!

 அமித் ஷா

அமித் ஷா

அதுமட்டுமல்ல, கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுமே, மீண்டும் டெல்லி சென்று மேலிட தலைவர்களின் ஆசியை பெற எடப்பாடி முனைவாராம். அப்போது, அதிமுக முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தன்னைதான் கட்சியின் தலைவராகவே அனைத்து நிர்வாகிகளும் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்பதையும் சொல்லி, அமித்ஷாவையும், பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து ஆதரவை எடப்பாடி பழனிசாமி பெறக்கூடும் என்கிறார்கள்.. அடுத்த மாத இறுதிக்குள், பதவி கைக்கு வந்துவிட வேண்டும் என்ற வேகத்தில் எடப்பாடி டீம் இறங்கி வேலை செய்து வரும் நிலையில், இந்த இடைவெளிடையை ஓபிஎஸ் டீம் எப்படி பயன்படுத்தி கொள்ளும் அல்லது பாஜக மேலிடம் என்ன மாதிரியான அணுகுமுறையை அதிமுகவிடம் வெளிப்படுத்தக்கூடும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.

கண்டிஷன்

கண்டிஷன்

இந்நிலையில், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு குறித்து விளக்கமளிக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது... இது எடப்பாடிக்கு சறுக்கலாகவும், ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட லிஸ்ட்டை தேர்தல் சமர்ப்பித்த நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம்.. காரணம், இதுவரை அதிமுக வரலாற்றில், பொதுக்குழு குறித்த விதிமுறைகள் எல்லாம் புத்தகமாக அச்சிடப்பட்டு, ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் உள்ள நிலையில், எந்த நடைமுறையையும் எடப்பாடி தரப்பு பின்பற்றவில்லை என்று சொல்லப்பட்டது.

கையெழுத்து

கையெழுத்து

எனினும், தன்னுடன் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள், மெஜாரிட்டி ஆதரவாளர்களை வைத்து, தன் பலத்தை நிரூபித்து விடலாம் என்பதே எடப்பாடியின் பிளானாக இருந்து வந்தது.. ஆனால், யாருக்கு மெஜாரிட்டி என்பதை ஆய்வுசெய்ய போவதில்லை என உச்சநீதிமன்றம் தற்போது கூறிவிட்டதால், சட்டத்தின் அடிப்படையிலேயே எடப்பாடி நடத்திய பொதுக்குழு கூட்டம் அணுக போவதால், அவருக்கான சிக்கல்கள் கூடிநிற்பதாகவே கூறப்படுகிறது.

English summary
Are OPS supporters with a new plan against Edappadi Palanisamy and Can Edappadi sack OPS and supporters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X