சென்னையே குலுங்குது.. அவசர அவசரமா அவர் கிளம்பி வர்றாரு.. எடப்பாடி பழனிசாமியிடம் "தாவும்" புள்ளிகள்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம்.. அவரைப்போலவே, அவரது ஆதரவாளர்களும் உச்சக்கட்ட விரக்திக்கு ஆளாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் தரப்பில், பயன்படுத்துவதால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள், தேர்தல் நெருங்குவதால் அதிமுக சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் நீதிமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டன.
அவகாசம்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நம்பர் ஆகிவிட்டது, அதனால் பதில்மனு தாக்கல் செய்ய குறுகிய அவகாசம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு பதிலுக்கு வாதத்தை முன்வைத்தது.

இதைக்கேட்ட நீதிபதி, இப்படியே சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் என்று மாறி, மாறி வழக்கு தொடர்ந்து, எத்தனை முறைதான் அவகாசம் கேட்பீர்கள்? அங்கும், இங்கும் ஒரே வாதத்தை திரும்ப திரும்ப எத்தனை முறை வைக்கப்போகிறீர்கள்? பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை.. அதனால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, ஓபிஎஸ் தரப்பில் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டார்.
கடும் ஷாக்: நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது, ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.. அவரது ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியையும் உண்டுபண்ணியிருக்கிறதாம்.. ஏற்கனவே பலமுறை, நீதிமன்ற உத்தரவுகளால் சோர்ந்து போயிருந்த நிலையில், நேற்றைய உத்தரவும், அவர்களை சோர்வடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் வெளிநாடு சென்றிருந்த ஓபிஎஸ், நாளை மறுநாள் அதாவது 10-ந்தேதி தான், சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவைத் தொடர்ந்து, அவசரம் அவசரமாக இன்றே சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியதுமே, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட சீனியர்களிடம் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
வைத்திலிங்கம்: இதற்கிடையே, ஓபிஎஸ்சால் நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் உச்சக்கட்ட சோகத்துக்கு போய்விட்டார்களாம்.. நேற்று கோர்ட் உத்தரவு வந்ததிலிருந்தே, வைத்தியலிங்கத்திடம் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்களாம்..
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களிலிருந்து பேசும் மாவட்ட செயலாளர்கள், "என்னதாங்க நடக்கிறது? எந்த இடத்திலும் சட்டப்படியாக நமக்கு சாதகமான விஷயங்கள் நடக்காதா? உச்சநீதிமன்றத்தில் நாம் போட்ட மேல்முறையீட்டு வழக்கு இருக்கும் வரை, எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நமக்கு நல்லது நடக்கும். இல்லைன்னா, மீண்டும் இரட்டை இலை சின்னம் முடங்கும். கட்சி நம்மை விட்டு எங்கும் போகாது" இப்படியெல்லாம் சொல்லிசொல்லித்தானே, எங்களுக்கு நம்பிக்கை தந்தீங்க.. ஆனா, இப்போ, பாருங்க..." என்று ஹைகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி ஆதங்கப்பட்டார்களாம்.
தடுமாற்றம்: இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தடுமாறிய வைத்தியலிங்கம், "ஓபிஎஸ் வெளிநாட்டுக்கு போயிருக்கிறார். வரட்டும். பேசுவோம்" என்று மட்டும் பொத்தாம் பொதுவாக பதில் சொல்லி சமாளித்து வருகிறாராம்.
சமீபத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் தனக்கான செல்வாக்கை பார்த்து, ஓபிஎஸ் தெம்பாகியநிலையில்தான், கொங்கு மண்டலத்தில் மாநாட்டை நடத்துவதற்கு ஜரூர் ஏற்பாடுகளை செய்து வருகிறார். திருச்சி மாநாட்டை போலவே, இந்த மாநாட்டிலும், அதிமுக சின்னங்களை வைத்து "பவர்" காட்டக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகிவிட்டதை ஓபிஎஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். ஏகப்பட்ட நெருக்கடியில் தற்போது ஓபிஎஸ் சிக்கி உள்ளதை, அமமுகவின் தினகரன் தரப்பும் கவனிக்காமல் இல்லை..
எடப்பாடி பழனிசாமி: அத்துடன், சோர்வடைந்துபோயிருக்கும் நிர்வாகிகளுக்கு, அதிமுக தரப்பு வலையை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய சூழலில், உடனடியாக நிர்வாகிகளை தக்கவைக்க வேண்டிய நெருக்கடியும் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ளதாம். ஒருவேளை ஓபிஎஸ் அவர்களை தக்க வைக்காமல் போனால், எடப்பாடி பழனிசாமி கூடாரம் பக்கம், அதிருப்தியாளர்கள் மெல்ல மெல்ல நகரக்கூடும் என்றும் கணிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
எடப்பாடி பழனிசாமி: எனினும், இப்போது ஓபிஎஸ்சை ஆதரித்து, ஒருவேளை கூட்டணியில் அவரை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால், அமமுக வாங்கும் ஓட்டுகள் என்னால் தான் கிடைத்ததுன்னு தேர்தலுக்கு பிறகு, ஓபிஎஸ் க்ளைம் பண்ணினால் அப்போது குழப்பம்தானே வரும்?" என்று யோசிக்கிறதாம் தினகரன் தரப்பு. அதனால்தான், சில விஷயங்களில் ஓபிஎஸ்ஸுடன் காம்ப்ரமைஸ் ஆகக்கூடாது என்ற முடிவில், இப்போதே ஒதுங்க துவங்கிவிட்டதாம்.
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று ஓபிஎஸ் சென்னையில் அவசர கூட்டம் நடத்துகிறார்.. இந்த கூட்டத்தில் சில அதிரடி முடிவுகளை எடுத்தே ஆகவேண்டிய நிலைமை வந்துள்ளது..
நெருக்கடிகள்: அத்துடன், சோர்வடைந்துபோயிருக்கும் நிர்வாகிகளுக்கு, அதிமுக தரப்பு வலையை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய சூழலில், உடனடியாக நிர்வாகிகளை தக்கவைக்க வேண்டிய நெருக்கடியும் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ளதாம். ஒருவேளை ஓபிஎஸ் அவர்களை தக்க வைக்காமல் போனால், எடப்பாடி பழனிசாமி கூடாரம் பக்கம், அதிருப்தியாளர்கள் மெல்ல மெல்ல நகரக்கூடும் என்றும் கணிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications