"விட்ருங்க" அவரை.. "தூக்குங்க" இவரை.. எடப்பாடி அப்படி சொன்னதுமே சடார்னு பார்த்த திமுக..கேம் ஸ்டார்ட்
ஓபிஎஸ் தரப்பில் சில முக்கிய புள்ளிகளை திமுக, எடப்பாடி தரப்பு பக்கம் செல்லக்கூடும் என்கிறார்கள்
சென்னை: அடுத்தடுத்த சறுக்கல்களை ஓபிஎஸ் சந்தித்துவரும் நிலையில், திமுக ஒருபக்கம், எடப்பாடி தரப்பு மறுபக்கம் என வியூகங்களை கூட்டி வருகிறதாம்.. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பு குறையாமல் காணப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், உற்சாகம் கூடியுள்ள நிலையில், அடுத்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது..
ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ் உள்ளிட்ட சீனியர்கள் மட்டுமே உள்ள நிலையில், மெல்ல மெல்ல ஓபிஎஸ்ஸின் கூடாரமும் கலைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

சசி அதிரடி
இதில், வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் கொண்டுவர, திமுக முயற்சிப்பதாக சொல்கிறார்கள்.. காரணம், முக்குலத்தோர் வாக்குகளை, டெல்டா பகுதிகளில் இன்னும் பலப்படுத்தவே இப்படி ஒரு முயற்சியை திமுக எடுக்க நினைக்கிறதாம்.. சசிகலா சிறைக்கு சென்றபோதும், எடப்பாடி பழனிசாமி முதல்வரானதற்கு பிறகும், அதிமுகவில் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் அவ்வளவாக என்ற பேச்சு உள்ளது.. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தபோதும்கூட, அவரால் எடப்பாடியை மீறி பெரிதாக செய்ய முடியவில்லை.. தவிர, கவுண்டர் சமூகத்துக்கான முக்கியத்துவமே அதிகமாகி கொண்டு வந்தது.

பலே பலே ப்ளான்
இதனால், முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு வெகுவாக குறையவும், இந்த நேரத்தில்தான், திமுக பலே தந்திரத்துடன் உள்ளே நுழைந்தது.. டெல்டாவில் உள்ள அச்சமூக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள முயன்றது.. இப்போதைக்கு தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் போன்றோர்களுக்கு அமைச்சர் பதவி தந்து முன்னுரிமை தரப்பட்டாலும், டெல்டா புள்ளி வைத்திலிங்கமும் திமுக பக்கம் வந்தால் அதிமுக இன்னும் பலவீனமடையும், தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியையும் பலப்படுத்தலாம் என்று திட்டமிடுகிறதாம் திமுக..

ராஜதந்திரங்கள்
அதனால்தான் வைத்திலிங்கத்தை திமுகவுக்கு கொண்டு வருவதற்கான அசைண்ட்மெண்ட், வழக்கம்போல் "செயல்புயல்" செந்தில் பாலாஜியிடம் தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர் என்பதால், அனைவரிடமும் அரசிலையும் தாண்டி நல்ல நட்பில் இருந்து வருகிறார் செந்தில்பாலாஜி.. மாற்று கட்சியினரை திமுகவுக்கு அள்ளி கொண்டுவருவதில் கைதேர்ந்தவரான செந்தில்பாலாஜி, வைத்திலிங்கத்தையும் கொண்டுவருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த எடப்பாடி தரப்பு, வேறு ஒரு அசைன்மென்ட்டை முக்கிய நிர்வாகிகளுக்கு தந்துள்ளதாம்.

ஆணித்தர நம்பிக்கை
இதே வைத்திலிங்கத்தை, தங்கள் கூடாரத்துக்கு கொண்டுவர கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி டீம் முயன்ற நிலையில், ஓபிஎஸ், சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக அவர் இருப்பதை பார்த்து, அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டதாம். அதனால்தான், வைத்திலிங்கத்தை இழுக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, வைத்திலிங்கத்தை தவிர அவரின் அணியிலிருந்து யாரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் என்ற உத்தரவு பறந்திருக்கிறது.. இதையடுத்து மனோஜ் பாண்டியன், ஐயப்பனிடம் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறார்களாம் கட்சியின் முக்கிய புள்ளிகள்..

சடுகுடு சடுகுடு
அதேநேரம், ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள், யாரும் தங்களை அதிமுக உறுப்பினர்கள் என சொல்லிக்கொள்ள எந்த காரணத்தைக்கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறதாம்.. சபாநாயகர் அதை ஏற்கவில்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் உத்தேசித்திருக்கிறதாம் எடப்பாடி டீம்.. இப்படி ஆளுக்கு ஒருபக்கம் வியூகங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் எகிறி வருகிறது.

ஹைஜாக்
இதெல்லாம் ஒருபக்கமிருந்தாலும், ஓபிஎஸ் தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை விரைவில் துவங்க போவதாக தெரிகிறது.. அந்தவகையில், விரைவில் முப்பெரும் விழா ஒன்றை நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. அதிமுக தொடங்கிய ஐம்பதாவது ஆண்டு + ஜெயலலிதா பிறந்தநாள் + எம்ஜிஆர் பிறந்தநாள் ஆகியவையை உள்ளடக்கி முப்பெரும் விழாவை, மாநாடாக நடத்த திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.. அடுத்த மாதம் திருச்சியில் நடத்த போகிறாராம்.. ஆனால், இன்னும் தேதி முடிவாகவில்லை.. மற்றபடி, அனைத்து ஏற்பாடுகளையும், ஓபிஎஸ் டீம் செய்ய தயாராகி வருகிறது.. இந்த மாநாட்டில் முக்கிய முடிவினை ஓபிஎஸ் எடுக்கக்கூடும் என்கிறார்கள்.. அதேபோல, இந்த மாநாட்டிற்கு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓபிஎஸ் நிச்சயம் அழைக்கக்கூடும் என்றும், ஓரணியாக இவர்கள் அனைவரும் திரள இந்த மாநாடு அச்சாரம் போடுவதாக அமையும் என்றும் பெரிதாக நம்பப்பட்டு வருகிறதாம்..!!

ஹைஜாக்
இதெல்லாம் ஒருபக்கமிருந்தாலும், ஓபிஎஸ் தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை விரைவில் துவங்க போவதாக தெரிகிறது.. அந்தவகையில், விரைவில் முப்பெரும் விழா ஒன்றை நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. அதிமுக தொடங்கிய ஐம்பதாவது ஆண்டு + ஜெயலலிதா பிறந்தநாள் + எம்ஜிஆர் பிறந்தநாள் ஆகியவையை உள்ளடக்கி முப்பெரும் விழாவை, மாநாடாக நடத்த திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.. அடுத்த மாதம் திருச்சியில் நடத்த போகிறாராம்.. ஆனால், இன்னும் தேதி முடிவாகவில்லை.. மற்றபடி, அனைத்து ஏற்பாடுகளையும், ஓபிஎஸ் டீம் செய்ய தயாராகி வருகிறது.. இந்த மாநாட்டில் முக்கிய முடிவினை ஓபிஎஸ் எடுக்கக்கூடும் என்கிறார்கள்.. அதேபோல, இந்த மாநாட்டிற்கு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓபிஎஸ் நிச்சயம் அழைக்கக்கூடும் என்றும், ஓரணியாக இவர்கள் அனைவரும் திரள இந்த மாநாடு அச்சாரம் போடுவதாக அமையும் என்றும் பெரிதாக நம்பப்பட்டு வருகிறதாம்..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications