"சூழ்நிலைக்கைதி".. காரணமே "அவங்க"தான்.. உயிருடன் இருக்கும் அண்ணாவின் லெட்டர்.. சீறும் நாஞ்சில்சம்பத்

நாஞ்சில் சம்பத் தமிழக பாஜகவை சரமாரியாக கேள்விகளை எழுப்பி விமர்சித்து பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளும் அனைத்து மாநில முதல்வர்களும் சூழ்நிலைக் கைதிதான் என்றும், பாஜகவுக்கு எதிராக போராட மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றும் மூத்த தலைவர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை என்றெல்லாம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

 நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

இந்நிலையில், மூத்த தலைவரும், தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இவைதான்: "திமுக பாஜகவுக்கு பதில் சொல்கிறது என்றால், அதற்கு காரணம், பாஜககாரர்கள் ஆபத்தானவர்கள்.. நாட்டின் கட்டமைப்பை சிதைப்பவர்கள்.. இந்தியாவின் பன்னெடுங்கால பெருமையை பாழ்படுத்தியவர்கள், இந்தியாவின் பெருமையை குட்டிச்சுவராக்கியவர்கள்.. இந்தியாவின் ஆன்மாவை சூறையாடியவர்கள்.. இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மனிதநேயமுள்ள எல்லா கட்சிகளுக்கும் உள்ள கடமையாகும்.. அதைதானே திமுக செய்கிறது? தவறில்லையே..

 அசிங்க அசிங்கமாய்

அசிங்க அசிங்கமாய்

செய்தியாளர்களை சந்திக்க முடியாமல் திணறிட்டு இருக்காரே அண்ணாமலை.. எந்த கேள்விக்காவது அவரிடம் பதில் இருக்கா? இப்போ எதுக்கு போலீஸை பாராட்டுறாரு? ஏன் பாராட்டுறே? அண்ணாமலையை பார்த்து திமுகவோ, கூட்டணி கட்சிகளோ திணறிபோவதாக சொல்வதே தவறு.. அண்ணாமலையெல்லாம் திமுகவுக்கு ஒரு பொருட்டே கிடையாது.. அரசியல் கோமாளி என்பதில் தவறே இல்லை.. அரசியல் கோமாளி என்பதைவிட இன்னும் அசிங்கமான வார்த்தை இருந்தால் சொல்லுங்கள், அதை அவருக்கு பொருத்தணும்.. இன்னைக்கு போலீஸை பாராட்டுறாரே, அன்னைக்கு பாராட்டியிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்குமா?

கோமாளி

கோமாளி

இங்கே போட்டி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று ஆளுநர் விரும்புகிறார்.. அதை அவர் வெளிக்காட்டுகிறார்.. அதற்காக வாங்கியும் கட்டிக் கொள்கிறார்.. பாஜகயை ஆதரித்து வாக்களிக்க வேண்டிய மனநிலையில் இனி ஒரு வாக்காளன் வர முடியாத அளவுக்கு நாட்டு மக்களின் மீது அறிவிக்கப்படாத போரை, பாஜக தொடுத்துக் கொண்டேயிருக்கிறது.. மார்பி தொங்குபாலம் ஏன் கீழே விழுந்துச்சு? ஒரு வருஷத்தில் முடிக்கப்பட வேண்டிய வேலையை, 6 மாசத்திலேயே முடித்துவிட்டு ஏன் திறந்து வைத்தாய்? பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காகத்தான் என்று சொல்லி கொண்டு வந்து, இந்த நாட்டின் வங்கியின் வாசலில் செத்து விழுந்தானே குடிமகன்.. அந்த திட்டத்தினாலே என்ன பலன்?

 ட்ரெயின் டிக்கெட்

ட்ரெயின் டிக்கெட்

எதிர்க்கட்சிகளின் பலவீனங்களால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக வெற்றி பெறுகிறதே தவிர, ஆளும் கட்சிகளின் பலம் கிடையாது.. அதற்கான வேள்விகளைதான் எதிர்க்கட்சிகள் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள்.. நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது அதன் அடிப்படையில்தான்.. இதோ வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் அடிவாங்கும், குஜராத்தில் அடிவாங்கும், இமாச்சல பிரதேசத்தில் அடிவாங்கும்.. மக்கள் பாஜகவுக்கு பதிலடி தருவார்கள்.. நான் இன்னைக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னை வர்றதுக்கு 1565 ரூபாய் டிக்கெட்.. 960 ரூபாய் டிக்கெட் 1565 ரூபாய் இன்னைக்கு ஆகியிருக்கிறது என்றால், நான் எப்படி ஓட்டுப்போடுவேன்?

 அண்ணா லெட்டர்

அண்ணா லெட்டர்

என்னைபோலவே எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எப்படி மறுபடியும் பாஜகவுக்கு ஓட்டுப்போடுவேன்? அதனால்தான் சொல்கிறேன், பாஜகவுக்கு எதிரான வேள்வி தொடங்கிவிட்டது.. அண்ணா அன்றைக்கு எழுதிய இன்னைக்கும் உயிருடன் இருக்கிறது.. மாநிலங்கள் மாநிலங்களாக இருக்கிற வரையில், இந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.. நான் சூழ்நிலைக்கைதி என்றார்.. அதே நிலைமைதான் இன்றைக்கும்.. பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளும் அனைத்து மாநில முதல்வர்களும் சூழ்நிலைக் கைதிதான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+