மொத்தமாக "ரிட்டையர்" ஆகும் டாப் தலைகள்.. அதிமுகவில் வீசும் சூறாவளி.. இது புது தகவலா இருக்கே.. போச்சு
சென்னை: அதிமுகவில் உள்ள சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கின்றனர். சிலர் அவரை எதிர்க்கலாம்.. சிலர் அரசியலே வேண்டாம்.. வயதாகிவிட்டது.. இனி அரசியலில் தொடர வேண்டாம், ரிட்டையர் ஆகலாம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுக கட்சி பிரச்சனை உள்ள கட்சியாக மாறிடும். இதனால் அதிமுக உள்ளே எடப்பாடி மீது பலரும் பொறுமலுடன் இருக்கின்றனர். அதிமுகவில் உள்ள சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கின்றனர். அவருக்கு எதிராக கடுமையாக பொறுமிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் லோக்சபா தேர்தலுக்கு பின் சிலர் அவரை எதிர்க்கலாம். சிலர் அரசியலே வேண்டாம்.. வயதாகிவிட்டது.. இனி அரசியலில் தொடர வேண்டாம் என்று ரிட்டையர் ஆகலாம்.
அதிமுகவில் ஒரு காலத்தில் உதயகுமார் ஓ பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க தீவிரமாக முயன்றார். 5 பன்னீர்செல்வத்தை நிற்க வைக்க ஏற்பாடு செய்தது அவர்தான். ஆனால் கடைசியில் அந்த சாதியின் சங்கங்களே உதயகுமாரிடம் போய் பேசி உள்ளனர். நம்ம ஆட்களுக்கு எதிராக நீ ஏன் வேலை பார்க்கிறாய் என்று புகார் வைத்துள்ளனர். நீ ஏன் நம்ம ஜாதி ஆட்களுக்கு எதிராகவே பணிகளை செய்து கொண்டு இருக்கிறாய்.
அவர்கள் இதை கொங்கு மண்டல கட்சியாக மாற்றிக்கொண்டு இருக்கின்றனர் . அப்படி இருக்க.. நீங்கள் நமக்கு ஏன் எதிராக செயல்படுகிறீர்கள் என்று பேசி உள்ளனர். அப்படி இருக்க.. உதயகுமார் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக வேலை செய்யாமல் நிறுத்தி உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இதனால் ஜெயிப்பார் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் அதிமுகவை விட அதிக வாக்குகள் எடுத்தால் சிக்கல் ஆகும்.
அதை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிலர் காய்களை நகர்த்தும் வாய்ப்புகள் உள்ளன. கட்சி கொங்கு மண்டல டீமிடம் மாட்டிக்கொண்டது. இவர்களிடம் இருந்து கட்சியை மீட்பது என்பது கஷ்டம். மற்ற பிரிவினர் ஒன்றுபட்டு எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது கஷ்டம். ஓ பன்னீர்செல்வம் வென்றால் கூட எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த முடியாது. 2026ல் தொண்டர்களை ஒன்று திரட்டி எடப்பாடியை பல இடங்களில் ஓ பன்னீர்செல்வம் வீழ்த்த வேண்டும்.
அப்படி வீழ்த்தினால் மட்டுமே அதிமுகவை எடப்பாடி கையில் இருந்து எடுக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகளும் குறைவு. லோக்சபா முடிவு வந்தால் அதிமுகவில் பிரச்சனை வரும். ஆனால் அதிமுகவில் இதனால் பெரிய மாற்றம் கிடையாது. எடப்பாடிக்கு எதிராக இருப்பவர்களிடம் ஒற்றுமை இல்லை. அதிமுக வடக்கு, அதிமுக தெற்கு தொகுதிகளில் இருப்பவர்கள் இடையே ஒற்றுமை இல்லை.
ஓ பன்னீர்செல்வம் தலைமை, சசிகலா தலைமையை ஏற்க யாரும் ரெடியாக இல்லை. அப்படி யாரும் ரெடியாக இல்லாத காரணத்தால் நிலைமை மோசமாகலாம். அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன் போன்ற சிலர் பாஜகவில் சேரலாம். ஆனால் இவர்களுக்கு எல்லாம் பலம் இருக்காது. செங்கோட்டையன் எல்லாம் பல வருடமாக அரசியலில் இருந்து சக்திகளை இழந்த நபர். அவர் எல்லாம் ஒரு கட்சிக்கு சென்று இனி அந்த கட்சிகளை வளர்க்கும் அளவிற்கு பலம் கொண்டவராக இருப்பாரா என்பது சந்தேகம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications