சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டபுள் ஷாக்".. புரிஞ்சுதா, 7 நாள் பேசாதே.. திருச்சி சூர்யா கெட்ட வார்த்தை பேசல.. ஒரே போடு காந்தராஜ்

சைதை சாதிக் பேசியதும், திருச்சி சூர்யா பேசியதும் ஒன்றல்ல என்கிறார் டாக்டர் காந்தராஜ்

Google Oneindia Tamil News

சென்னை: சைதை சாதிக் பேசியதும், திருச்சி சூர்யா பேசியதும் ஒன்றல்ல, இரண்டையும் சமமாக பார்க்க முடியாது என்று, மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுகவின் சைதை சாதிக் ஆபாசமாக பேசினார்.

அதேபோல, பாஜக நிர்வாகி டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய வீடியோவும் வெளியாகியது.. சைதை சாதிக், குஷ்புவை ஆபாசமாக பேசிவிட்டார் என்பதற்காக தமிழக பாஜக கொந்தளித்திருந்தது.. திமுகவை கண்டித்து போராட்டமும் நடத்தியது.

கணபதி ஐயர் “பேக்கரி”.. சூர்யா சிவா - டெய்சி அக்கா தம்பி “டீலிங்”.. வடிவேலு காமெடியை இழுத்த கஸ்தூரி கணபதி ஐயர் “பேக்கரி”.. சூர்யா சிவா - டெய்சி அக்கா தம்பி “டீலிங்”.. வடிவேலு காமெடியை இழுத்த கஸ்தூரி

 2 சம்பவம்

2 சம்பவம்

எனினும், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டு இணையத்தில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு தரப்புமே பேசியது தவறு என்றாலும், சாதிக் பேசியது போலத்தானே திருச்சி சூர்யாவும் பேசியுள்ளார் என்றும் பொதுமைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.. இந்நிலையில், இதுகுறித்து, மூத்த அரசியல் விமர்சகரும், டாக்டருமான காந்தராஜிடம் இதுகுறித்த கேள்வியை நாம் முன்வைத்தோம்.. நம் ஒன் இந்தியா தமிழுக்கு காந்தராஜ், தெரிவித்த கருத்துக்கள்தான் இவை:

 கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

"பாஜகவில் இப்படி நடப்பதெல்லாம் சகஜமானதுதான்.. காயத்ரி ரகுராம் ஏன் கோபித்து கொண்டார் என தெரியவில்லை.. கேடி ராகவன் வீடியோ விவகாரம் வந்தபோதே இதெல்லாம் பெரிய பிரச்சனையாக வெடித்திருக்க வேண்டும்.. காயத்ரி விவகாரத்தில், ஆடியோவை வைத்துதான் விவகாரம் நடக்கிறது.. ஆனால், கேடி ராகவன், "செயல்வீரராகவே" இருந்தார்.. கட்சிக்குள்ளே சகஜமாக நடப்பதை, பிரச்சனையாக்கிவிட்டதால்தான், காயத்ரியை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்கள்..

 செயல்வீரர்

செயல்வீரர்

ஆண்கள் இப்படித்தான் பெண்களிடம் நடந்துகொள்வோம், இதை போய் வெளியே சொல்லிவிட்டாயே என்று காயத்ரி மீது கோபம் வந்தள்ளது.. அதனால்தான் நீக்கிவிட்டார்கள்.. பாஜககாரர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் திருச்சி சூர்யாவும் நடந்து கொண்டுள்ளார்.. அதனால்தான் அவரை மன்னித்து, எந்த நடவடிக்கையும் இல்லாமல் வைத்துள்ளனர்.. இந்த விஷயத்தை ஆஃப் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஒருவாரம் தடை விதித்துள்ளார்கள்..

 கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

திருச்சி சூர்யா அந்த பெண்ணை திட்டினாரே, அந்த பெண் ஏதாவது வருத்தப்பட்டாங்களா? யாரிடமாவது சென்று புகார் சொன்னாங்களா? முறையிட்டார்களா? அவரே அமைதியாக இருக்கும்போது, மற்றவர்கள் எல்லாம் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள், அவரை தவிர, மற்றவர்கள் எல்லாம் ஏன் இப்படி துடிக்கிறார்கள்? என தெரியவில்லை.. திருச்சிசூர்யா கெட்ட வார்த்தை பேசிட்டார் என்று நீங்க சொல்றீங்க.. ஆனால் அது அவங்களுக்கு புனிதமான வார்த்தையாக கூட இருக்கலாம்.. அந்தம்மாவும்தான் பேசறாங்க.. ஆனால், திட்டும்போதெல்லாம், தன் சாதி பற்றி அதிகமாக குறிப்பிடுகிறார் திருச்சி சூர்யா.

 வாய்மூடி மவுனம்

வாய்மூடி மவுனம்

என்னதான் பெரியார் மண் என்று பேசினாலும், ஜாதி என்பது மனித உடம்பில் ஊறிப்போய்விட்டது.. இன்றைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சாதிப்பெயரை சொல்லிக் கொண்டுதான வருகிறார்கள்.. கொள்கை அடிப்படையில் இவர்களிடம் என்ன இருக்கு? என் சாதிக்கு நான் செய்கிறேன் என்று சொல்லியே அரசியலுக்கு வருகிறார்கள்.. சைதை சாதிக் அன்று பேசியது அரசியல் ரீதியான விமர்சனம்.. ஆனால் திருச்சி சூர்யா பேசினது வேற வகையானது.. எச்.ராஜா அன்றைக்கு, "கோர்ட்டாவது, அது ஆவது" என்றாரே.. அந்த வார்த்தையை சொல்லக்கூட நாம தயங்குகிறோம்.. ஆனால், பாஜகவில் சுலபமாக அதை பேசுகிறார்கள்..

 7 நாள் சைலண்ட்

7 நாள் சைலண்ட்

சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்களே? ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தார்களே? இவங்க கட்சிக்குள்ளேயே இப்படி நடந்திருக்கிறதே? அதற்கு என்ன நடவடிக்கை? 7 நாள் பேசாதே என்பது ஒரு நடவடிக்கையா? உடனே அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எல்லாம் புனிதமாகிவிட்டதா? இதுதான் இவர்கள் நடவடிக்கை என்றால், சைதை சாதிக் மீதும் இதே நடவடிக்கையை எடுத்திருக்கலாமே.. சைதை சாதிக்கை பேசாதே என்று சொல்லி இருக்கலாமே.. அதனால், இரு பேச்சையும் ஒன்றாக்க முயற்சி செய்ய கூடாது" என்றார் காந்தராஜ்.

English summary
Are Saidai Sadiq's speech and Trichy Surya's speech the same, explains Dr Kantharaj: Specials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X