ஓடிய "வீடியோ".. ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்.. சசிகலா பளீர் உத்தரவு! எடப்பாடிக்கு இடமே இல்லை!
சென்னை: அதிமுகவில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அழைத்து இருந்த நிலையில்தான் சசிகலா சார்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு அமைதியாக தூது ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வென்றுள்ளார். ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி ரத்தாகிறது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிறார்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நாளை இந்த வழக்கில் விசாரணை நடக்க உள்ளது.

சின்னம்மா
அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் தனது பேட்டியில், ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் பயணித்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது. அதிமுக எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றுபட்ட போது அதை வீழ்த்த இயலவில்லை என்பது நிரூபணம். சின்னம்மா, டிடிவி தினகரன் இருவரையும் சேர்த்துதான் சொல்கிறேன். எல்லோரும் அதிமுக கீழ் இருக்க வேண்டும், என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

சசிகலா
ஆனால் இதை பற்றி சசிகலா எதுவும் கமெண்ட் செய்யவில்லை. டிடிவி தினகரன் இதை பற்றி பேசினாலும் சசிகலா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இதை பற்றி டிடிவி தினகரன் செய்த கமெண்டில், தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

சசிகலா அமைதி ஏன்
இந்த நிலையில் சசிகலா வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே ஓ பன்னீர்செல்வமுடன் போனில் நன்றாகவே பேசி வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். முன்னர் "இடைத்தரகர்" ஒருவர் மூலம் பேசி வந்த சசிகலா.. இப்போதெல்லாம் நேரடியாகவே போனில் ஓ பன்னீர்செல்வமுடன் பேசி வருகிறார். அதோடு அதிமுகவில் உள்ள எடப்பாடிக்கு நெருக்கமான பலருடன் பேசி வருகிறார். சசிகலா அமைதியாக தனது மூவ்களை செய்து வருகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான மன்னார்குடி வட்டாரத்தினர்.

வீடியோ
பொதுவாக ஜெயா டிவியில் ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி செய்தி வராது. இது இளவரசி மகன் விவேக் நடத்தும் சேனல் ஆகும். ஆனால் கடந்த சில நாட்களாக இதில் ஓபிஎஸ் வீடியோக்களும் ஓடுகின்றன. ஓபிஎஸ் தொடர்பான வீடியோக்கள் சில இதில் ஓடுகின்றன. இது சசிகலா குடும்பம் ஓபிஎஸ்சை ஏற்றுக்கொண்டதற்கான கிரீன் சிக்னல் என்று கூறுகிறார்கள். இவர்கள் சமாதானமாக சென்றுவிட்டனர். இன்னும் அதிகாரபூர்வமாக மட்டுமே அறிவிக்கவில்லை.

ஓபிஎஸ் பெயர்
ஓபிஎஸ் கூட சின்னம்மா என்று வெளிப்படையாக் சொல்லிவிட்டார். விரைவில் சசிகலாவும் ஓபிஎஸ் பெயரை வெளிப்படையாக சொல்லுவார். அதற்கான காலம் வரும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர். ஆனால் இவர்கள் எல்லோரும் இணைந்து, அதிமுகவிற்குள் மீண்டும் நுழைந்தாலும் கூட இவர்கள் எடப்பாடியை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. சசிகலா ஏற்றுக்கொண்டாலும் கண்டிப்பாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடியை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை.. இப்போது ஜெயா டிவியில் எப்படி எடப்பாடி பற்றி செய்தி இல்லையோ அப்படிதான் ஒருங்கிணைத்த அதிமுகவில் எடப்பாடிக்கு இடம் இருக்காது என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான சொந்தங்ககள்.












Click it and Unblock the Notifications