கேம் ஓவர்.. உச்சத்திலுள்ள டாப் புள்ளிக்கு பதில் ஸ்டாலின் இறக்கிய மாஸ்டர் மைண்ட்! அடுத்த மாஸ் மாற்றம்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் முடிந்துள்ள நிலையில் டாப் லெவல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்று பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

ஐஏஎஸ்: அமைச்சரவை மாற்றத்தின் போதே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் இருக்கும் என்று ஒன்இந்தியா தமிழ் சார்பாக முன்பே செய்தி வெளியிட்டு இருந்தோம்.
பல ஐஏஎஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும், அமைச்சர்களுக்கு ஏற்ற அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக அதிகாரிகள் மாற்றம் குறித்து அமைச்சர்களிடன் கருத்தை சமீபத்தில் கேட்டறிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சர் ஒரு உத்தரவு போட அது நடைமுறைக்கு வர தாமதமும் ஆகிறதாம். அதிகாரிகள் சிலர் அமைச்சரிடம் ஆலோசனையே செய்யாமல் தான் போன போக்கில் முடிவுகளை எடுக்கிறார்களாம். சில அதிகாரிகள் தாங்கள்தான் அரசு என்பது போல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்களாம்.
சில அதிகாரிங்கள் தான்தோன்றி தனமாக செயல்படுகிறார்கள். அவர்கள் அமைச்சர்களிடம் தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்கிறார்கள்.

20 ஐஏஎஸ் அதிகாரிகள்: அதில் 20-க்கும் மேற்பட்ட துறைகளில் அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. அமைச்சர்களுக்கு தெரியாமலேயே பல விசயங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இது ஒரு கட்டத்தில் அமைச்சர்களுக்கு தெரியவரும் போது அவர்களுக்கு கோபம் வருகிறது.
உடனே தனது துறையின் உயரதிகாரிகளிடம் அமைச்சர்கள் கோபம் காட்டும் போது, முதல்வரின் செயலாளரை கேட்டுக்கோங்க சார் என்று பதில் வருகிறதாம். எங்களுக்கு எதுவும் தெரியாது.. முதல்வரிடம் பேசுங்கள் என்று அதிகாரிகள் கூலாக சொல்லிவிடுகிறார்களாம். இதனால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பல துறைகளில் சின்க் இல்லாமல் செல்கிறதாம்.
இதனால் என்ன செய்வதென தெரியாமல் மனம் புழுங்கிய அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து அமைச்சரவை மாற்றத்தோடு சேர்ந்து அதிகாரிகள் மாற்றமும் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
நிதித்துறை: முக்கியமாக நிதி துறைக்கும், ஐடி துறைக்கும் புதிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அங்கே மொத்தமாக புதிய டீம் களமிறக்கப்பட உள்ளது.
நிதி துறைக்கு உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் ஐடி துறைக்கு பிடிஆர் கேட்கும் அதிகாரிகளை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்து இருக்கிறாராம்.
அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் டீமிற்கும் புதிய ஐஏஎஸ் அதிகாரி செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.

உதயசந்திரன்: அதன்படி முதல்வரின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து உதயசந்திரன் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் முதல்வருக்கு மிகவும் நெருக்கம். அதிகாரிகள் முதல்வரை பார்க்க கூட இவரின் அனுமதி தேவைப்படுவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரின் கட்டுப்பாடுகள் காரணமாக சில அமைச்சர்களும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். சில சமயங்களில் இவர் செயல்படும் விதம் கட்சியின் டாப் தலைவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குவதாக கூறப்படுகிறது.
இவர்தான் முதல்வரின் நம்பர் 1 முதன்மை செயலாளர் என்பதால் பல்வேறு விஷயங்களை ஆட்சி ரீதியாக இவர்தான் "கண்ட்ரோல்" செய்து வருகிறார். இவர்தான் முதல்வரின் டேஷ் போர்டை கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் உதயசந்திரன் தற்போது நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றல் வேண்டும் என்று கேட்டு இருக்கிறாராம். அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.
கூடுதல் தலைமை செயலாளர் அதிகாரத்தில் உள்ள முருகானந்தம் இந்த இடத்திற்கு முதல்வரின் புதிய மாஸ்டர்மைண்டாக வர வாய்ப்பு உள்ளது. உமாநாத் முதல்வரின் நம்பர் 1 முதன்மை செயலாளராக மாற வாய்ப்பு உள்ளது. முருகானந்தம் கூடுதலாக இந்த 5 பேர் டீமில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications