Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோட்டையன் முதல்ல.. அடுத்து ராவணன்.. எடப்பாடி பழனிசாமி "ரகசியம்" அப்பப்போ வரும்: ஓபிஎஸ் டீம்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான திட்டத்தை ஓபிஎஸ் டீம் கையில் எடுக்க போகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி குறித்த ரகசியங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் வரும் 11ம் தேதிக்கு பிறகு பதவியில்லாத பழனிசாமியாக மாறிவிடுவார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள்.. இது எடப்பாடி தரப்பை அதிர வைத்து வருகிறது.

நேற்றுமுன்தினம், ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.. "எடப்பாடிக்கு முதல்வர் பதவியை யார் கொடுத்தது சசிகலாதான்.. பதவி தந்தவருக்கே துரோகம் செய்யலாமா? தவழ்ந்து வந்த இவரை சசிகலா தட்டி கொடுத்து முதல்வராக்கினாரே.. அப்படிப்பட்ட சசிகலாவுக்கே இவர் துரோகம் செய்தவர்தானே? என்று கேட்டார்..

ஓபிஎஸ் கேட்ட இந்த கேள்வி, நியாயம்தானே? எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்வது உண்மைதானே? என்ற சலசலப்பும் அதிமுக தொண்டர்களிடமும் கிளம்பி உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி குறித்த ரகசியங்களை வெளியிடப்போவதாக ஓபிஎஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகின்றன.

கண்ணன்ஜி

கண்ணன்ஜி

அந்தவகையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன்ஜி, ஒரு டிவி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.. அந்த பேட்டியிலும், எடப்பாடியின் ரகசியங்கள் குறித்த தகவல்களையே பகிர்ந்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது: "கட்சிக்காக எத்தனையோ விஷயங்களை ஓபிஎஸ் தரப்பில் கொண்டார்.. கட்சிக்காக எத்தனையோ ரகசியங்களையும் பொறுமையுடன் கட்டிக்காத்து வருகிறார்.. ஓராயிரம் ரகசியங்கள் இன்னமும் இருக்கு.. பழனிசாமியின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றும் அளவுக்கு ரகசியங்கள் பல இருக்கின்றன.. பழனிசாமி என்ற நபர், இந்த இயக்கத்தை குழிதோண்டி புதைத்தற்கான அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார். இந்த ரகசியங்கள் எல்லாம் அப்பப்போ, அப்பப்போ அவிழ்த்து விடப்படும்..

சிலுவம்பாளையம்

சிலுவம்பாளையம்

இதைதான் ஓபிஎஸ் நேற்றைய தினம் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த ரகசியம் ஒவ்வொன்றையும் சொல்லும்போது, பழனிசாமி இந்த அளவுக்கு சுயநலவாதியா? பழனிசாமி இந்த அளவுக்கு துரோகியா? அப்படின்னு இந்த நாடும், நாட்டு மக்களும் நன்றாகவே அறிந்து கொள்வார்கள்.. கட்சிக்காக மட்டுமே அத்தனை ரகசியங்களையும், பொத்தி பொத்தி வைத்து வருகிறார் ஓபிஎஸ்.. ஆனால், இந்த கட்சிக்கே ஒரு அழிவு என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.. அதிமுக மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க போவது உண்மைதான்..

 போஸ்டிங்கில்லா பழனிசாமி

போஸ்டிங்கில்லா பழனிசாமி

ஆனால், அதில் பழனிசாமி இருப்பாரா? என்பதுதான் கேள்வியே.. என் தலைமையில் கூட்டணி என்று பழனிசாமி சொல்லவில்லையே.. அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்கிறார்.. அது சரிதானே? காரணம், அதிமுகவின் தலைவர் ஒருங்கிணைப்பாளர்தானே.. நவம்பர் 11ம் தேதியுடன் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் முடிந்துவிடும்.. அந்த பதவியும் செல்லாததாகிவிடும்.. அதிமுக கூட்டணி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று அண்ணாமலை சொல்வதும் உண்மையே.. அண்ணாமலை ஒன்றும் எடப்பாடி தலைமையில் கூட்டணி என்று சொல்லவில்லையே.. பதவியில்லாத பழனிசாமியாக 11ம் தேதிக்கு பிறகு மாறிவிடும். 21ம் தேதி விசாரணை முடிவின்போது எடப்பாடி அரசியல் தெரிந்துவிடும்..

 இலை + தலை

இலை + தலை

பிளவில்லாத இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஓபிஎஸ் பொறுமை காத்து வருகிறார்.. ஆனால், அதைநோக்கிய பயணத்தில் பழனிசாமி தள்ளினார் என்றால், பொதுக்குழுவும், பொதுக்கூட்டமும் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலோடு நிச்சயமாக கூட்டப்படும்.. கழகத்தின் சின்னம் முடக்கப்படாமல் இருப்பதற்கான வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.. சின்னத்தையும், கழகத்தையும் முடக்கி, அதில் குளிர்காயலாம் என்று பழனிசாமி பயணித்து கொண்டிருக்கிறார்.. பொதுக்குழுவா? ஆனால், பொதுக்கூட்டமா என்பதை நவம்பர் 21 அன்று, சுப்ரீம்கோர்ட் வழக்கின் முடிவுகள் வரும்போது, ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்.

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்


தான்தோன்றித்தனமாக, தலைகால் புரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்.. முதல் துரோகம் செங்கொட்டையன் அண்ணனுக்கு செய்தார் பழனிசாமி.. அடுத்த துரோகம் அமைச்சர் ஈரோடு முத்துசாமி அண்ணனுக்கு செய்தார்.. அடுத்த துரோகம் சேலம் கண்ணனுக்கு செய்தார்.. ராவணன் வீட்டு நாயை, குளிப்பாட்டி கொண்டிருந்தார் பழனிசாமி.. அந்த நாய்க்கு காவல் காத்தவர்தான் பழனிசாமி.. அதற்கு பிறகு, டிடிவி தினகரனின், காருக்கு காவல் காத்தார்.. அதற்கு பிறகு சின்னம்மா வீட்டில் எடுபிடியாக இருந்தார்.. அதற்கு பிறகு, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று சொன்ன ஓபிஎஸ் அண்ணனுக்கு ஒத்து ஊதியவர்.. ஆனால், இவர்கள் அனைவருக்குமே துரோகத்தை செய்துவிட்டார் பழனிசாமி.. துரோகம் என்றால் பழனிசாமி என்றே அர்த்தம்.. விரைவில் அவர் முகத்திரையை கிழிப்போம்" என்றார்.

ஒரேகுடை

ஒரேகுடை

தொடர்ந்து அவர் பேசும்போது, "கழகத்தின் சட்டவிதிகளைத்தான் நாங்கள் பார்ப்போமே ஒழிய, கட்சிக்குள் மெஜாரிட்டி இருக்கிறதா என்பதை பார்க்க மாட்டோம்" என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே சொல்லி உள்ளது.. அதன்படி, சட்டவிதிகளின்படி உச்சநீதிமன்றத்தில் 21ம் தேதி வழக்கு விசாரணை வரும்போது, எம்ஜிஆர் வகுத்துக்கொடுத்த விதிகளின்படியும், அதிமுக சட்ட விதிகளுக்கும், முரணான வகையில், பழனிசாமியும் அந்த கம்பெனியும் செயல்பட்டது உறுதியானால், அந்த கூட்டமும், அவர்கள் இயற்றிய தீர்மானமும் செல்லாது என்று தீர்ப்பு வரும்.. இறுதியில், ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவருவார்.. ஆக, இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும் இல்லை, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் அந்த பொறுப்பும் இல்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+