பெரிய "விக்கெட்" விழுந்தாச்சு போல.. தட்டிதூக்கும் வாரிசு.. ரகசிய டீலிங் ஓவர்.. திணறும் எடப்பாடி டீம்

ஜெயபிரதீப், ஓபிஆர் இருவருமே எடப்பாடி டீமில் முக்குலத்தோருக்கு குறி வைத்துள்ளார்களாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி கூடாரத்தில் இருந்து, மேலும் சில முக்கிய புள்ளிகள், ஓபிஎஸ் பக்கம் வர போகிறார்களாம்.. ஐயப்பன் அணி மாறிய நிலையில், மேலும் சிலரும் வரக்கூடும் என்றும், அவர்கள் யார் என்ற லிஸ்ட் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் அரசியலில் நேரடி தொடர்பின்றி ஆன்மிகம், சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர்..
ஆனால், எப்போது தேர்தல் வந்தாலும், அப்பாவுக்கு ஆதரவாக களப்பணிகளில் இறங்கிவிடுவார்.. இந்நிலையில், கடந்த முறை தேர்தலில், கம்பத்தில் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவின..

 ஜெயபிரதீப்

ஜெயபிரதீப்

ஆனால், வாரிசு அரசியல் உள்ளிட்ட எதிர்விளைவு ஏற்படும் என்பதால் இவர் விலகிக் கொண்டதாகக் கூறப்பட்டது.. அதுமட்டுமல்ல, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் கம்பம் தொகுதி சவாலாக இருந்தது.. அந்த தொகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் அதிகம்.. மேலும், வன்னியர் உள் இடஒதுக்கீட்டினால் அதிருப்தியில் இருந்ததால், போட்டி கடுமையாக இருக்கும் என்பதாலேயே ஜெயபிரதீப் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதாக சொல்லப்பட்டது.. இதற்கு பிறகு அவர் சீனிலேயே வரவில்லை.. தற்போது ஒற்றை தலைமை விவகாரம், வெடித்ததும்தான் லைட்டாக தலையை காட்ட துவங்கி உள்ளார்.

 ஜெய + லலிதா + ஐயா

ஜெய + லலிதா + ஐயா

ஹைகோர்ட்டில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வந்த அன்றைய தினம், ஜெயபிரதீப் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. இதயதெய்வம் புரட்சிதலைவி [[ஜெய]]லலிதா அம்மா, இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ராமச்[[சந்திரன்]] ஐயா ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா ஏதோ ஒரு ரூபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும் அதன் உண்மை தொண்டர்களையும் கண் இமை போல காப்பாற்றி, வழி நடத்தும் என்பதற்கு இன்று உயர் நீதிமன்ற நீதியரசர் ஐயா உயர்திரு. ஜெயச்சந்திரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினால் நிரூபணம் ஆகியுள்ளது. வெற்றி நமதே!" என்று பதிவிட்டிருந்தது, அதிமுகவையே திரும்பி பார்க்க வைத்தது.

 நத்தம் + செல்லூர்

நத்தம் + செல்லூர்

இப்போது, ஓபிஎஸ் பக்கம் அதிமுக மெல்ல மெல்ல சாய்ந்து வரும் சூழலில், மிக முக்கிய பணியில் ஜெய்பிரதீப் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. அதன்படி, எடப்பாடி பக்கம் இருக்கும் சில முக்குலத்தோர் புள்ளிகளை, தங்கள் பக்கம் இழுக்கும் அசைன்மென்ட்தான் ஜெய்பிரதீப் மற்றும் ஓபிஆரிடம் தரப்பட்டுள்ளதாம்.. ஏனென்றால், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு போன்றோர், எடப்பாடி பக்கமே இப்போது வரை உள்ளனர்.. இவர்கள் எல்லாம் தங்கள் தென்மண்டலத்துக்காக நிற்காமல், கொங்குவை தாங்கி பிடிக்கும் எடப்பாடியுடன் சேர்ந்து கொண்டுள்ளதுதான், அச்சமுதாய மக்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

 ரகசிய பேச்சு

ரகசிய பேச்சு

அதனால்தான், எடப்பாடி பக்கம் உள்ள முக்குலத்தோர் சமூகத்து தலைகளை, சைஸாக பேசி வலையை விரித்து வருகிறார்களாம்.. முக்குலத்தோர் மட்டுமல்லாமல், பதவி எதுவும் தரப்படாமல் அதிருப்தியில் இருப்பவர்களுக்கும் கொக்கி போட்டு வருகின்றனர்.. அய்யப்பன் விவகாரத்தை சக்ஸஸ் செய்து முடித்ததுபோலவே, சிலரை ரகசியமாக சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.. அந்தவகையில், மேலும் சில தலைகள் சிக்கி விட்டார்களாம்.. அந்த முக்குலத்தோர் புள்ளிகள் யார் என்பது குறித்த லிஸ்ட், விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.. இதில் ஒரு மாஜியும் அடக்கம் என்கிறார்கள்.

 சசிகலா + டிடிவி

சசிகலா + டிடிவி

ஓபிஎஸ்ஸுக்காக இயங்குபவர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பும் நடக்கிறதாம்.. இதெல்லாம் தேவர் ஜெயந்திக்குள் சிறப்பாக செய்து முடித்துவிட வேண்டும் என்பதால் முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த தேவர்ஜெயந்தி ஓபிஎஸ் டீமுக்கு மிக மிக முக்கியமான நாளாகும்..அன்றைய தினம், சசிகலா, தினகரனை நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பும் அமையலாம் என்கிறார்கள்.. மேலும், முக்குலத்தோரிடம் தனக்கான செல்வாக்கை நிரூபிக்கவும் சான்ஸ் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது..

 செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

இந்த எதிர்பார்ப்பு எடப்பாடி தரப்பிலும் ஏற்பட்டுள்ளது.. காரணம், அதிமுக மாஜிக்கள், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு போன்றோர் மீது முக்குலத்தோர் மக்கள் ஏற்கனவே அப்செட்டில் உள்ளபோது, தேவர் ஜெயந்திக்குள், எடப்பாடி பலத்தை தென்மண்டலத்தில் காட்டிவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இறங்கி உள்ளார்களாம்.. முக்குலத்தோர் இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் எதிர்ப்பை அவர்களிடம் காட்டுவார்களா? அல்லது அதே ஆதரவு எடப்பாடி டீமுக்கு நீடிக்குமா என்பதும் அன்றைய நாளில் தெரிந்துவிடுமாம். பார்ப்போம்..!

100 கோடி

100 கோடி

இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.. வெறும் முக்குலத்தோர் சமுதாயத்தை மட்டும் குறி வைத்தால், ஒட்டுமொத்த கட்சிக்கு அதன்மூலம் சறுக்கலாகிவிடும் என்பதால், மற்றொரு பிளானையும் ஓபிஎஸ் டீம் கையில் எடுத்துள்ளதாம்.. அதன்படி, ஓபிஎஸ் + சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அந்த திட்டத்தை வகுத்து, ரகசிய ஒப்பந்தமும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.. முதலில், அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களை இழுப்பதற்காக, ரூ.100 கோடி பிளானை போட்டு சசிகலா ஓபிஎஸ்சிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மனோஜ் பாண்டியன்

மனோஜ் பாண்டியன்

அதாவது, இத்தனை வருடமாக டிடிவி தினகரன் பணம் கேட்டபோது கொடுக்காத சசிகலா, ஓபிஎஸ் கேட்டவுடனேயே பணத்தை வாரி வழங்கியதும் மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. இந்த முதல்கட்ட ஆபரேஷனில் தென்மாவட்ட நிர்வாகிகள், குறிப்பிட்ட சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பிளான் ஆரம்பமாகி உள்ளது.. குறிப்பாக, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓபிஆர், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் நேரடியாகவே களம் இறக்கியுள்ளார்களாம். இதுவும் எடப்பாடி & கோ-விற்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+