"நோ சாய்ஸ், நோ சான்ஸ்".. எடப்பாடி தலைக்கு மேல் தொங்கும் "கத்திகள்".. கூலாக ரசிக்கும் திமுக, பாஜக?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கேள்விக் கணைகள் அவரை நோக்கி பாய துவங்கிவிட்டன

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் கண்டன அம்புகள் பாய்ந்து விழுந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் தூத்துக்குடி சம்பவ அறிக்கைதான் முக்கிய காரணம்.

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில், கடந்த 2018-ம் ஆண்டு ஜுன் 4-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது அருணா ஜெகதீசன் குழு.

கடந்த 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்புதான் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

 வெங்கடேசன்

வெங்கடேசன்

அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள்தான், தற்போது, தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி விட்டு வருகின்றன.. அந்த அறிக்கையில், "போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல் என்று கூறப்பட்டுள்ளது. தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்தியதாகவும் கூறப்பட்டுள்ளது

குருவிகள்

குருவிகள்

அதுமட்டுமல்ல, பூங்காவுக்குள் மறைந்திருந்த போலீசார் போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தினர், எங்கிருந்து துப்பாக்கி குண்டு வருகிறது என்பதை அறியாத மக்கள் தலைதெறிக்க அங்குமிங்குமாக ஓடினார்கள்... போராட்டக்காரர்களை போலீசார் மறைந்திருந்து சுட்டுள்ளனர்.. ஆட்சியர் வெங்கடேசன் தன்னுடய பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட்டு, கோவில்பட்டியில் இருந்திருக்கிறார்.. காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி இது, குருவிகளை போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்" என்பது உட்பட அந்த அறிக்கையில் விலாவரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அணுகுமுறை + செயல்பாடு

அணுகுமுறை + செயல்பாடு

இந்த அறிக்கை ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்குமே அதிர்ச்சியை உண்டுபண்ணி உள்ளது.. இந்த சம்பவம் நடந்து முடிந்து 2 நாட்கள் ஆகியும், எடப்பாடி எந்தவிதமான விளக்கத்தையும் அப்போது தரவில்லை.. சம்பவ இடத்திற்கும் நேரில் சென்றும் பார்க்கவில்லை... யாருக்கும் ஆறுதல் சொல்லவில்லை.. சிகிச்சையில் இருந்தவர்களையும் சென்று சந்திக்கவில்லை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்தும், அதிலும் கனிமொழி, ஸ்பாட்டுக்கே சென்று போராட்டத்தை முன்னெடுத்தபோதிலும், எடப்பாடி அமைதியாகவே இருந்தார்.. 2 நாள் கழித்துதான் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போதுகூட, திமுகவை குற்றஞ்சாட்டி கொண்டிருந்தாரே தவிர, போராட்டத்தைதான் விமர்சித்தாரே தவிர, சுருண்டு விழுந்து இறந்த அப்பாவிகளின் உயிர்களை பற்றி அல்ல.

பழனிச்சாமி

பழனிச்சாமி

செய்தியாளர்களே இதை பற்றி கேட்டபிறகுதான் விஷயத்துக்கு வந்தார். "அதாவது, தற்காப்புக்காகத்தான் போலீசார் சுட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. வன்முறை அதிகரித்துவிட்டதற்கு காரணம் சமூக விரோதிகள் இதில் ஊடுருவியதுதான்.. இப்படி ஒரு துப்பாக்கி சூடு நடந்ததையே, டிவியில் பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன், நான் அப்போது சென்னையில்தான் இருந்தேன்" என்று அசால்ட்டான பதில்களை எடப்பாடி பழனிசாமி அடுக்கிக் கொண்டே போனார்.. ஒரு மாநில முதல்வர், அதிலும், உளவுத்துறை, போலீஸை தன் பிடியில் வைத்திருப்பவரின் பதிலை கேட்டு தமிகமேழ உறைந்து போனது.

 கேள்விகளும் + முரண்களும்

கேள்விகளும் + முரண்களும்

அன்று எடப்பாடி சொன்ன ஒவ்வொரு அலட்சியமான பதிலும், இன்று அவருக்கு எதிராக திரும்பி, அவரது ஒட்டுமொத்த அரசியலையும் துளைக்க ஆரம்பித்துவிட்டது.. மாநில முதல்வராக இருந்தும், அப்போது சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாளவில்லையே ஏன்? சொந்த மக்கள் மீது ஏன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது? டிவியை பார்த்து தான் தெரிந்துகொண்டேன், எனக்கே விஷயம் தெரியாது என்று சொன்னால், யாருடைய கைப்பாவையாக இருந்தீர்கள்? யாரோ ஒருவருக்கு கைப்பாவையாக செயல்பட்ட ஒருவரால், எப்படி சொந்த கட்சியை கையில் வைத்து கொள்ள முடியும்? எப்படி கட்சியை தலைமையேற்று நடத்த முடியும்? ஒருவேளை உங்கள் கட்சியை சிறப்பாகவே நடத்தி கொண்டு செல்ல முடியும் என்றால், அன்றைக்கு ஏன் போராட்டக்காரர்கள், பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது? என பல்முனை கண்டன தாக்குதல்கள் எடப்பாடியை நோய்க்கு பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் ஓபிஎஸ் டீமும் இணைந்து கேள்விகளை எழுப்ப துவங்கி உள்ளது என்பது கூடுதல் தகவல்.

 +4800 கோடி

+4800 கோடி

இதற்கு நடுவில், "ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கும், அப்போதைய அதிமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று திருமாவளவன் முக்கிய கேள்வியை ஒன்றை கேட்டுள்ளார்.. அன்று என்ன நடந்தது என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும்.. அதனால், விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் அமமுகவின் டிடிவி தினகரனும் கேட்டுள்ளார். இப்படி பல கேள்விகள் எடப்பாடியை நோக்கி விழுந்தாலும், "ஆமா.. விசாரணை ரகசிய அறிக்கை எப்படி லீக் ஆனது" என்று ஜெயக்குமார் அதிரடி கேள்வியை எழுப்பி உள்ளார்.

"நோ சாய்ஸ்.. நோ சான்ஸ்"

ஏற்கனவே, ரெய்டுகள், விசாரணைகள் என எடப்பாடிக்கு விழிபிதுங்கி வருகிறது.. மற்றொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பில் குடைச்சல்கள் கிளம்பி உள்ளன.. இதற்கு நடுவில் நீதிமன்ற உத்தரவுகள் அழுத்தம் தந்து வருகின்றன.. போதாக்குறைக்கு, 4800 கோடி ரூபாய் சம்மந்திக்கு கொடுக்கப்பட்ட வழக்கு மாநில அரசின் பிடியில் உள்ளது.. முடிவுகள் இப்படி எக்கச்சக்கமாக எடப்பாடி பழனிசாமி சிக்கி உள்ள நிலையில், அவருக்கு இனி கடினமான தருணம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இன்னும் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை அறிக்கை வந்தால், அதில் என்ன முடிவுகள் வரப்போகிறதோ தெரியவில்லையாம்.. எப்படி பார்த்தாலும் எடப்பாடிக்கு இனி "நோ சாய்ஸ்.. நோ சான்ஸ்" என்கிறார்கள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+