கையோடு கையாக "கைமாறுது" பொறுப்பு.. அசைந்தது அறிவாலயம்.. அப்படியே விழிக்கும் பாஜக.. இதுதான் ஸ்டாலின்
சென்னை: தேர்தல் நெருங்கிவரும்நிலையில், திமுகவில் சில முக்கிய மாற்றங்கள் விரைவில் நிகழக்கூடும் என்கிறார்கள்.. இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் சில கூடுதல் பொறுப்புகளை உதயநிதிக்கு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தரப்பு நினைக்கிறதாம். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை செய்திகள் கசிந்தன.

அதாவது, ஆட்சி நிர்வாகம், கட்சி நிர்வாகம் என இரண்டையுமே கவனித்து வருகிறார்.. அதனால்தர்ன, அதிகாரிகளுடனான முக்கிய சந்திப்புகளும், ஆலோசனைகளும் "குறிஞ்சி இல்லத்தில்" நடந்து வருகின்றன..
குறிஞ்சி இல்லம்: எனினும் தேர்தல் நெருங்கிவிட்டதால், கட்சி தொடர்பான முழு பணிகளையும், பிரச்சனைகளையும் சேர்த்து கவனிக்கும்படி, உதயநிதியை, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம். அதனால், "குறிஞ்சி இல்லம்" போலவே, "அறிவாலயத்துக்கும்" வந்து, அதிகாரபூர்வமற்ற செயல் தலைவராக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னாராம்.
இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. உதயநிதி மீது மொத்த கவனத்தையும் மேலிட பாஜக குவித்து வருகிறது.. அதிலும் உதயநிதியின் "சனாதன தர்மம்", டெல்லி பாஜகவையே கடுப்பாக்கிவிட்டதால், இதற்கு சரியான பதிலடியை தர தயாராகி வருகிறார்கள். அவைகளை எதிர்கொள்ள, உதயநிதியால் மட்டுமே முடியும் என்றும், அறிவாலய தரப்பு நம்புகிறதாம். அதனால், இந்த முறை தேர்தலில், உதயநிதியின் செயல்பாடுகளும், முக்கியத்துவமும் சற்று அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
இளைஞரணி: இப்படிப்பட்ட சூழலில்தான், நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல்கள் கிடைத்துள்ளன.. அதாவது, சேலத்தில் வருகிற டிசம்பர் 17ந் தேதி நடைபெற உள்ள 2-வது இளைஞர் அணி மாநாட்டையொட்டி, மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி தொடங்க உள்ளது. இதனை இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்துள்ளார்..
தமிழகம் முழுவதும் 8,647 கிலோ மீட்டர் பயணித்து சுமார் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை திமுக இளைஞரணி செய்திருக்கிறது.
ஸ்டாலின் பிளான்: இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலை உதயநிதி தலைமையில் நடத்தவும் திமுக தலைமை ஆலோசிக்கிறது. முதல்வரின் வயதை கருத்தில் கொண்டு, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் ஆலோசனையில் பங்கெடுப்பது, சீட் ஷேரிங் முடிவெடுப்பது, முக்கிய தலைவர்களை சந்தித்து விவாதிப்பது உள்ளிட்ட விஷயங்களை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் கவனித்துக் கொள்ளட்டும் என்று திமுக தலைமை நினைக்கிறதாம்.
தேர்தலையொட்டி, திமுகவினருடன் விவாதிப்பது, திமுகவின் வேட்பாளர்களை தேர்வு செய்வது, தேர்தல் செலவு விவகாரங்கள், பிரச்சார வியூகங்கள் என கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் கவனித்து கொள்ளும் பொறுப்புகளை உதயநிதியிடமே வழங்கலாம் என்றும் திமுக தலைமை ஆலோசிக்கிறதாம்..
மும்முரம் திமுக: ஆக, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை, உதயநிதி தலைமையில் எதிர்கொள்ள ஜரூராக தயாராகி கொண்டிருக்கிறது திராவிடர் முன்னேற்ற கழகம்..!!!
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா?












Click it and Unblock the Notifications