"2 பிளான்".. சுக்குநூறாக சிதறிய திமுக கணக்கு.. கோட்டையில் என்ன நடக்கிறது.. எடப்பாடி பழனிசாமி குஷி
: எடப்பாடி பழனிசாமி படுகுஷியில் இருக்க 2 காரணங்கள் உள்ளன
சென்னை: எடப்பாடி பழனிசாமி தற்போது உச்சக்கட்ட ஹேப்பியில் இருக்கிறாராம்.. அதற்கு 2 விதமான காரணங்களும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சசிகலாவிடம் சமீபத்தில் விசாரணை நடத்தியது தனிப்படை போலீஸ்.
அதில், எடப்பாடிக்கு எதிராக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "ஆட்சி அதிகாரம் அவரிடம் இருந்ததால் அவருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை" என்று சொல்லியிருந்தார் சசிகலா (இதனை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம்).

சசிகலா தகவல்
இந்த சூழலில், தனக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலம் சசிகலாவின் ஸ்டேட்மெண்டை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த முயற்சியில், எடப்பாடியை நேரடியாக குற்றம்சாட்டி சசிகலா எதுவும் பேசவில்லை என்பதை அறிந்து தற்காலிக நிம்மதியில் அவர் இருந்து வருகிறார். இதனை தனது வலதுகரமான சேலம் இளங்கோவனிடம் பகிர்ந்துக் கொண்டார் (இதனையும் நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்).

எடப்பாடி பழனிசாமி கிலி
இந்த நிலையில், எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலம் தற்போது சிலதகவல்கள் எடப்பாடிக்கு பாஸ் ஆகியிருப்பதாக அவரது தரப்பில் பரவியுள்ளது. அதாவது, கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியை விசாரிப்பதில்தான் அவரது இமேஜ் சரியும் என்று திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அவருக்கு சம்மன் அனுப்புவதற்கு முன்பு, இந்த விவகாரத்தில் எடப்பாடியை நேரடியாக சிக்க வைக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள உயரதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் விசாரித்ததாகவும் கோட்டை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அந்த வகையில், வழக்கை விசாரித்து வரும் தனிப்படையினர், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பது வாக்கு மூலங்கள் மட்டுமே. நேரடியாக தொடர்புபடுத்தும் ஆதாரங்கள், சந்திப்புகள், ஆடியோ-வீடியோ காட்சிகள் எதுவும் கிடையாது. நம்மிடம் இருப்பதெல்லாம் குற்றவாளிகள் தரப்பிலிருந்து கிடைத்த வாக்குமூலங்கள்தான். இதனை வைத்து எடப்பாடி மீது வழக்குப் போட்டால் அவர் எளிதில் நிரபராதி என வெளியே வந்து விடவே வாய்ப்புகள் அதிகம் என்றே மேலிடத்துக்கு தெரிவித்திருக்கிறார்கள்.

குஷியோ குஷி
இதனால் எடப்பாடிக்கு சம்மன் அனுப்புவது சந்தேகம் என்கிறது போலீஸ் தரப்பு. இந்த தகவல்களை எடப்பாடிக்கு பாஸ் செய்திருக்கிறார்கள். இதனால் முன்பைவிட உற்சாகமாக இருக்கிறாராம் எடப்பாடி. வழக்கு போட்டாலும் அரசியல் ரீதியாக நல்ல பெயர் எடுக்க முடியும். வழக்கு போடவிட்டாலும் நல்லப் பெயர் எடுக்க முடியும் என்பதே அவரது உற்சாகத்துக்கு காரணம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications