Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலியில் ஆச்சரியம்.. "பொருநை" மியூசியத்தின் சிறப்பு.. தீர்கிறது குறை.. ஒளிர்கிறது தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் அமைய உள்ள, பொருநை அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, இந்த அடிக்கல் நாட்டும் பணிகளை துவக்கி வைக்கிறார்.. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

மனித நாகரிகம் வளர்ந்ததே, ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் தான். அதற்கு சாட்சியாகத்தான், தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள "ஆதிச்சநல்லூர்" மனித நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. இதை மத்திய அரசின் தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

இந்த ஆதிச்சநல்லூரில், அகழாய்வு நடத்தப்பட்டது.. அதில், பண்டை கால மனிதர்கள் பயன்படுத்திய ஓடுகள், இரும்பு பொருட்கள், காதணிகள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இதே போல பழங்கால இயற்கை துறைமுகமாக இருந்த கொற்கையிலும் அகழாய்வு நடத்தப்பட்டு, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.

Are there so many special features in the borunai museum and borunai makes Nellai proud

பொருநை : சிவகளையில் நடத்திய அகழாய்வில் பண்டை கால மனிதர்கள் வாழ்வில் பயன்படுத்திய பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையிலும், இப்போதைய சமுதாயத்தினரும் பார்த்து பயன் பெறும் வகையிலும், மனித நாகரிகம் தோன்றிய இடம் ஆற்றங்கரை என்பதை பெருமைப்படுத்தும் வகையிலும், முதல்வர் ஸ்டாலின் ரூ33 கோடியில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதற்காக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில், இதற்காகவே 15 ஏக்கர் இடத்தையும் ஒதுக்கீடு செய்தது.. இங்குதான், பொருநை அருங்காட்சியகம் அமைய உள்ளது.. இதை இன்றைய தினம் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்..

சிறப்பு அம்சங்கள்: உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.. இதைத்தவிர, 106 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன...

வளையல்கள்: மேலும், 3 இடங்களில் கிடைத்துள்ள வளையல்கள், பாசிமணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரத்தாலான பொருட்கள், நாணயங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாடுகளுடன் தமிழர்களின் தொடர்புகள் குறித்த பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது... அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலாத் தலமாக பயன்படுத்தும் வகையிலும் இது அமைய இருக்கிறது...

இதனருகில், உயரமான பகுதியில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'வியூ பாயிண்ட்' அமைக்க போகிறார்களாம்.. இங்குள்ள தொலைநோக்கி மூலம் நெல்லையின் அழகை பார்க்கும் வசதியும் கிடைக்கும்.

நெல்லை அடையாளம்: அதனால், பொருட்களை மட்டும் வைக்கும் இடமாக இல்லாமல், எல்லாருமே வந்து செல்லும் இடமாக அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு மூலிகை தோட்டங்கள், கைவினைப் பொருட்கள், கலை, கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மையங்கள், திறந்தவெளி திரையரங்கு என்று பல்வேறு அம்சங்களுடன் அருங்காட்சியக வளாகம் அமைக்கப்பட உள்ளதாம்.

ஏற்கெனவே நெல்லையில் பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் எதுவும் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது... அந்தவகையில், சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாகவும், சுற்றுலா பயணிகளுக்கு அதுகுறித்து விளக்கம் அளிக்கவும் தொல்லியல் துறை சார்பில் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தத்தில், நெல்லையின் அடையாளமாக இந்த அருங்காட்சியகம் திகழ போவது நிச்சயம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+