தமிழக அரசியலில் எதிர்பார்க்காத திருப்பம்.. அதுவும் ஒன்றல்ல ரெண்டு.. முடிவு யாருக்கு சாதகம்னு பாருங்க
சென்னை: தமிழ்நாடு அரசியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. அதுவும் ஒன்றல்ல இரண்டு திருப்பங்கள். அதிகாரபூர்வமாக வெளியாகாத இந்த தகவல்கள் வரும் நாட்களில் அரசியல் உலகில் பூகம்பங்களை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்
தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டு உள்ள அந்த இரண்டு முக்கியமான மாற்றங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். முதல் மாற்றம் எடப்பாடி பழனிசாமி தொடர்புடையது.

அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே கட்சியில் நெருக்கடி உள்ளது எல்லோர்க்கும் தெரிந்ததுதான். அதாவது கட்சியில் மீண்டும் ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க வேண்டும் என்று ஒரு சாரர் கோரிக்கை வைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட 12 தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வாருங்கள். கட்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அதிமுக சரிய காரணம் நாம் எல்லோரும் பிரிந்து கிடப்பதுதான். போனவர்கள் திரும்பி வந்தால் கட்சியில் மீண்டும் சூழ்நிலை சரியாகிவிடும். கட்சி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று ஒருசாரார் கருத்து சொகின்றனர். இதற்கு பின் பாஜகவின் அழுத்தம் இருக்கலாம் என்றும் சில செய்திகள் வருகின்றன.
திருப்பம் 1: இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக உடன் எடப்பாடி கூட்டணி வைக்கும் திட்டத்தை கையில் எடுத்து உள்ளாராம்.
அதன்படி எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லும் திட்டத்தில் இருக்கிறாராம். அவர் விரைவில் அமித் ஷாவை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமையலாம். பாஜக - அதிமுக கூட்டணி வந்தால்.. சசிகலா,ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க வேண்டிய பிரஷர் இருக்காது .
இப்போது தனக்கு வரும் பிரஷருக்கு டெல்லிதான் காரணம் என்று எடப்பாடி நினைக்கிறாராம். அந்த பிரஷர் வராது என்பதால் எடப்பாடி அமித் ஷாவுடன் ஐக்கியம் ஆக முடிவு எடுத்துள்ளாராம் .
இரண்டாவது மேட்டர்: இரண்டாவதாக சீமான் - அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதிமுக விக்கிரவாண்டி தேர்தலில் நாம் தமிழருக்கு ஆதரிக்கவில்லை. சீமான் நேரடியாக ஆதரவு கேட்டும் நாம் தமிழர் ஆதரவு கொடுக்கவில்லை. இப்படி இருக்க சீமான் கோபமாக பேசினார்.
அதிமுக - நாம் தமிழர் இடையே கூட்டணி உருவாக வேண்டிய சூழலில்.. சீமான் அந்த கூட்டணியை அடித்து உடைத்துள்ளார். பால் பொங்கும் நேரத்தில் சீமான் அடுப்பை அணைத்து உள்ளார்.
ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களை தொடர்ச்சியா ஏன் தலைவர்களை இழிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சீமான் சொன்ன பதிலில், ஜெயலலிதா இரண்டு திராவிட தலைவர்களின் சமாதிக்கு நடுவில் படுத்திருந்தா ஆமா நடுவுல படுத்திருக்கு என்று தானே சொல்ல முடியும் ? அது தப்பு என்றால் இனிமேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்குதுன்னு சொல்றேன் என்கிறார். இதனால் உருவாகாத இந்த கூட்டணி உடைந்துள்ளது.
இன்னொரு பக்கம் விஜயும் நாம் தமிழர் உடன் கூட்டணி வைக்கும் விருப்பத்தில் இல்லை என்கிறார்கள். விஜய் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம்.
ஸ்டாலினுக்கு போன தகவல்: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் சில தகவல்கள் சென்றுள்ளதாம். அதன்படி, எடப்பாடி அமித் ஷா பேச்சு விரைவில் நடக்கும். கூட்டணி இறுதி செய்யபட வாய்ப்புகள் உள்ளன என்று தகவல் சென்றுள்ளதாம்.
மேலும் 4 முனை போட்டி வரலாம்.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் , விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெரிய மோதல் வரலாம் என்றும் தகவல் சென்றுள்ளதாம். தமிழ்நாடு அரசியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. அதிகாரபூர்வமாக வெளியாகாத இந்த தகவல்கள் வரும் நாட்களில் அரசியல் உலகில் பூகம்பங்களை ஏற்படுத்தலாம் என்கிறார்கள். இவை திமுகவிற்குத்தான் சாதகமாக போகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் நம்புகிறதாம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications