ஜஸ்ட் "ஹாய்" சொல்லுங்க.. உடனே ரெடி.. வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி தெரியுமா?
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், செல்போனில் உள்ள வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டை எப்படி வாட்ஸ்அப் மூலம் பெறுவது என்ற வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் பயணத்துக்கு கவுண்டர்களில் டிக்கெட் வாங்கலாம் என்ற நடைமுறை இருந்த நிலையில், பயணிகளுக்கு அட்டை திட்டமும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ வசதி: ரூ.2,500-ல் மாத பயணம் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி நேற்றைய தினம் தொடங்கப்பட்டது. இதற்கு காரணம், தினமும் மெட்ரோவில் நிரம்பி வழிகிறது.. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், டிக்கெட் எடுக்க நீண்ட தூரம் காத்திருக்கும் நிலைமையும் ஏற்படுகிறது.
இவைகளை எல்லாம் சரிசெய்யவே, மெட்ரோ நிர்வாகம், இந்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது... அதாவது மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.. இதன்மூலம், இதன் மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் பதிவு செய்யலாம்.
டிக்கெட் பதிவு: இந்த வசதியை திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார். 83000 86000 என்ற எண்ணில் CMRL Live எனும் சாட் வழியே டிக்கெட்டை பதிவு செய்யலாம். செல்ல வேண்டிய இடத்திற்கான கட்டணத்தையும் வாட்ஸ்அப் மூலம் செலுத்தி உடனே டிக்கெட்டை பெறலாம்...
இந்த புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20 சதவீதம் தரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணர்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ புறப்படும் போது, மெட்ரோ நிர்வாகம் கொடுத்த எண்ணுக்கு புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை அனுப்பி கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம். பயணரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் 'கியூஆர்' கோடை பயணத்தின் போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.

எப்படி டிக்கெட் பெறுவது தெரியுமா?
சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் (Hi) ஹாய் என்று அனுப்ப வேண்டும்.
பின்னர், சார்ட் பாட் என்ற தகவல் வரும்.
அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ இரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ் அப், மூலமோ அல்லது ஜி-பே மூலமாகவோ பணம் செலுத்தினால் போதும்.
பயண டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துவிடும்.
இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள க்யூ-ஆர் கோடு ஸ்கேனரில் காண்பிப்பதன் மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
பயணம் முடிந்து, சென்று சேர வேண்டிய இடம் வந்ததும், அங்குள்ள மெசினில் க்யூ-ஆர் கோர் ஸ்கேனரில் டிக்கெட்டை காண்பித்தால் வெளியே செல்ல முடியும்
சிறப்பு தகவல்: இதனிடையே, மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் இதைபற்றி சொல்லும்போது, "மெட்ரோ ரெயிலில் 2-ம் கட்ட திட்ட பணியில் சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணி 2026-ம் ஆண்டு முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ ரெயிலில் தினமும் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். உலகிலேயே அதிக பயணிகள் பயணம் செய்யும் மெட்ரோவாக சென்னை உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே மெட்ரோ ரெயில் அமைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இப்போது வெயில் கொளுத்தி வருவதால், மெட்ரோ ரெயிலில் ஏ.சி.யில் பயணம் செய்ய பலர் ஆர்வத்துடன் உள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications