சொன்னபடியே செய்யும் அருண்.. தினமும் 2 ரவுடிகள்.. ஒரே வாரத்தில் சென்னை கமிஷனரின் அதிரடிகள்.. சபாஷ்
சென்னை: சென்னை கமிஷனர், மிக முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றினை காவல்துறையினருக்கு விடுத்திருக்கிறார்.. அது என்ன?
ஆர்ம்ஸ்டாங் படுகொலையால் சென்னையே கதிகலங்கிவிட்டது.. இதையடுத்து, கடந்த வாரம் சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றார்.. அன்றைய தினமே செய்தியாளர்களையும் சந்தித்து பேசியிருந்தார்.

சட்டம், ஒழுங்கு: அப்போது, "சென்னை எனக்கு புதிதல்ல.. இங்கு பல்வேறு பகுதிகளில் நான் பணியாற்றி இருக்கிறேன். இப்போது சென்னையில் இருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்னை, குற்ற தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் இருக்கும் சிக்கல்கள், ரவுடிசத்தை கட்டுக்குள் வைப்பது, போலிஸில் இருக்கும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, இவற்றை கண்ட்ரோல் செய்வது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பேன்.
ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரிகின்ற மொழியில் சொல்லி தருவேன். தினமும் ஒரு திட்டத்தை கொண்டுவருவது தேவையில்லை, காவல்துறை அதிகாரிகளும் போலிசார்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே குற்றங்கள் குறையும்.. தமிழகம் நல்லபெயர் எடுக்கும் விதமாக சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
வார்னிங்: ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் அருண் விடுத்திருந்த எச்சரிக்கையானது, பொதுமக்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் காவல் ஆணையர் அருண், காவல் துறையினருக்கு புதிய உத்தரவு ஒன்றை விடுத்துள்ளார். அந்த உத்தரவில் உள்ளதாவது:
- சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் தினமும் இரண்டு ரவுடிகள் என்ற அடிப்படையில், ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.
- தற்போது சரித்திரப் பதிவேட்டில் இருக்கும் ரவுடிகளை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், ரவுடிகளின் உறவினர்களுக்கு அறிவுரை தர வேண்டும்.
- ரவுடிகள் சட்டவிரோதச் தற்போது சரித்திரப் பதிவேட்டில் இருக்கும் ரவுடிகளை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், ரவுடிகளின் உறவினர்களுக்கு அறிவுரை தர வேண்டும்.
- ரவுடிகள் சட்டவிரோதசெயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும்.
- நிபந்தனை ஜாமினில் இருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், நிபந்தனைகளை மீறி செயல்பட்டாலோ, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தாலோ அவர்களின் ஜாமின் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்..
அட்வைஸ்: நேற்றைய தினம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் துறையினருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.. அதில் சில அறிவுறுத்தல்களையும் வலியுறுத்தியிருந்தார்.. குறிப்பாக, "அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுடன் மரியாதையான மற்றும் பயனுள்ள தகவல்தொடர்புகளை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களிடம் பேசும்போது மிஸ்டர், மிஸ்ஸஸ், சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஒருமையில் பேச வேண்டாம். பொதுமக்களின் குறைகளை கவனமாக கேளுங்கள். உங்கள் உடல்மொழி அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. பொதுமக்கள் புரிந்து கொள்ளாத வாசகங்கள் அல்லது தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்" என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தார்.
கவனம்: இந்நிலையில், ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வழங்கியுள்ள இந்த அறிவுறுத்தல்களும் மக்களை கவனிக்க செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications