Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாயகன் மீண்டும் வர்றார்? பாஜகவை கதறவிட போறார்? ஆஹா, திமுகவுடன் பிளான் இப்பவே ஒர்க் அவுட் ஆயிடும் போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம்.. என்ன காரணம்? என்ன நடந்து கொண்டிருக்கிறது கமலின் ஆழ்வார்ப்பேட்டை ஆபீஸில்?

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நேரடியாக திமுகவுடன் கூட்டணி வைக்காமல், காங்கிரஸின் மூலம் கூட்ணி வைத்து சீட்டை பெறுவோம் என்று நினைத்து கணக்கு போட்டிருந்தார் கமல்ஹசன்..

Kamal Haasan DMK MNM

இதனாலேயே ராகுல் காந்தியின் நடைபயணத்துக்குகூட நேரடியாகவே டெல்லி சென்று வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டு வந்தார்.. எனினும், திமுகவிடம் 10 சீட்டையும் பெற்றுக் கொண்ட காங்கிரஸ், கமலுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை.

திமுக கூட்டணி: முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைப்பதால் தனக்குரிய கவுரவம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை... திமுக கூட்டணியில் இடம் பெற்று நிச்சயம் ஒரு பாராளுமன்ற தொகுதியில் மய்யம் போட்டியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இறுதியில் திமுக கூட்டணியில் 1 ராஜ்யசபா சீட் பெற்றிருந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்.. அதற்கு பிரதியுபகாரமாக திமுக கூட்டணியை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்திருந்தார்.. "இது மக்களுடன் ஒன்றாத அரசு" என்று பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.. ஆனாலும், லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் விலகிய அதிர்ச்சியிலிருந்து, மய்யத்தினரால் உடனடியாக மீண்டு வெளியே வரமுடியவில்லை.

அதிர்ச்சி: ஒரேயொரு ராஜ்யசபா சீட்டுக்காக, திமுகவிடம் கட்சியை கொண்டுபோய் அடகு வைத்துவிட்டாரே என்கிற கோபமும், ஏமாற்றமும் பெரும்பாலான மய்யத்தினரிடம், தேர்தல் முடியும் வரை நிலவி கொண்டேயிருந்தது.

எனினும், தனித்து போட்டியிடுவது என்கிற முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கும் கமல்ஹாசன், இனி வரும் காலங்களிலும் தி.மு.க. கூட்டணியிலேயே இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளார்.. அத்துடன், மேல்சபை எம்.பி.யாகவும் டெல்லி செல்லவும் போகிறார்..

தேர்தல்கள்: அதுமட்டுமல்ல, டிசம்பர் மாதம் நடைபெற போகும் உள்ளாட்சித்தேர்தல் மற்றும் 2026ல் நடக்க போகும் சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையுமே திமுக கூட்டணியிலிருந்தே எதிர்கொள்ள மநீம முடிவு செய்திருக்கிறதாம்..

அந்தவகையில், உள்ளாட்சி தேர்தலுக்கு, திமுகவிடம் கணிசமான இடங்களை பெற்று போட்டியிட போகிறதாம்.. குறிப்பாக மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தங்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளை, திமுகவிடம் மநீம கேட்க போவதாகவும் தெரிகிறது.. இதனால், ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆழ்வார்பேட்டையில் டீப் டிஸ்கஷனில் ஈடுட்டு வருகிறாராம்.. விரைவில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த போகிறாராம்.

நம்பிக்கை: உள்ளாட்சி தேர்தலின் பெறும் வெற்றியானது, வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்லும் மய்யத்தினர், இது தொடர்பான வேலைகளிலும், தீவிரமாக ஈடுபட துவங்கிவிட்டார்களாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+