உயில் எழுத ஆவணங்கள் தேவை? மனைவி பெயரில் சொத்து எழுதும்போது, இதை கவனியுங்க.. உயிலின் முக்கியத்துவம்
சென்னை: உயில் எழுதும்போது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன? வாரிசுகளுக்கு உயில் எழுதி வைத்தால் மனைவிக்கும் அதில் பங்கு கிடைத்துவிடுமா? எத்தனை முறை உயில்களை எழுதி வைக்கலாம்? இதன் நடைமுறைகள் என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
உயில் எழுதும்போது, ஒருவர் தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே பிறருக்கு எழுதி வைக்கலாம்.. மற்றபடி பூர்வீக சொத்துக்களை யாருக்குமே உயிலாக எழுதி வைக்க முடியாது... அதை பிரித்து எழுதி வைக்கவும் முடியாது.. வேண்டுமானால், பூர்வீக சொத்துக்களை அனுபவித்து கொள்ளலாம்.

அதேபோல, தாத்தா, பாட்டி இருந்தாலும்கூட, சொத்துக்களை பிரித்து வாரிசுகளுக்கு தர முடியாது. உயில் எழுதி வைக்காவிட்டாலும்கூட, அவர்களின் நேரடியாக வாரிசு அடிப்படையில் பிள்ளைக்கு வந்துவிடும்... தவிர்க்க முடியாத காரணத்தினால், பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க வேண்டுமானால், தங்களின் பெயருக்கு சொத்துக்களை மாற்றி, அதன்பிறகே உயிலாக எழுதி வைக்க முடியும்..
மனைவி பங்கு: வாரிசுகளுக்கு உயில் எழுதி வைத்தால், மனைவிக்கும் அதில் பங்கு கிடைத்துவிடும் என்று கருத முடியாது... அந்த சொத்துக்கு மனைவி எந்த வகையிலும் உரிமை கோரவும் முடியாது.. எனவே, ஒருவர் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு உயில் எழுதி வைப்பதாக இருந்தால், மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதலாம்.
அதேபோல் தன்னுடைய சுய சம்பாத்திய சொத்துக்களை மனைவி பெயரில் மட்டுமே எழுதி வைப்பதும், சிக்கலை தந்துவிடும். காரணம், உயிலில் மனைவி பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டால், வாரிசுகளால் உரிமை கொண்டாட முடியாது. மனைவி பெயர் மட்டுமே உயிலில் இருந்தால், அது அவருக்கு மட்டுமே உரிய சொத்தாக மாறிவிடும்.. அதன்பிறகு மனைவி, அந்த சொத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ அவருக்குதான் அது போய்ச்சேரும்.
வாரிசுகள்: அதேபோல, வாரிசுகளில் ஒருவருக்கு அதிகமாக சொத்துக்கள் கிடைத்தால், மற்றவர் அதை எதிர்க்க முடியாது. உதாரணத்துக்கு வாரிசுகளில் 4 பேர் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.. இதில், 3 பேருக்கு மட்டுமே சொத்தை பங்கிட்டு தந்துவிட்டால், அது செல்லுபடியாகும். 4வது வாரிசு, தனக்கு பாகம் பிரித்து தரவில்லை என்று எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது... வாரிசுகளுக்கும் சம அளவில்தான் சொத்து பிரிக்கப்பட வேண்டும் என்று நிர்பந்திக்கவும் முடியாது...
மனைவி வாரிசுகளை தவிர மற்ற வேறு யாருக்கு வேண்டுமானாலும் சொத்தை பிரித்து கொடுக்கலாம். எனவே, உயில் எழுதும்போது யார் யாருக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக எழுதிவிடுவது நல்லது.
ஆவணங்கள்: உயில் எழுதுவதற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. ஆனால், உயில் எழுதப்படும் சொத்தின் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். சாதாரண வெள்ளை தாள், பத்திர தாள் என எதில் வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம்.. எனினும், முறைப்படி உயில் எழுதுவதாக இருந்தால் பேப்பரில் ஸ்டாம்ப் ஒட்டி உயிலை எழுதி 2 பேர் சாட்சி கையெழுத்து போட்டு அதை ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்து கொள்வது நல்லது.
உயில்களை வாரிசுகளுக்கு மட்டுமல்லாமல் விருப்பமானவர்களுக்கும் எழுதி வைக்கலாம்.. டிரஸ்ட்களுக்கும் எழுதி வைக்கலாம். இன்னும் பிறக்காத குழந்தைக்குகூட உயில் எழுதலாம்., பிறக்கப்போகும் பேரக்குழந்தைக்கும் உயில் எழுதலாம்.. ஆனால், 18 வயது நிரம்பாத நபருக்கு உயில் எழுதப்பட்டால், அதற்கு கார்டியனாக ஒருவரை நியமிக்க வேண்டும். உயில் எழுதியவர் இறந்துவிட நேர்ந்தால், அந்த உயிலை கோர்ட்டில் மெய்ப்பிக்க வேண்டும். 3 வருடத்துக்குள் உயிலை மெய்ப்பிக்காவிட்டால், தாமதத்துக்கான காரணங்களை கோர்ட்டில் சொல்ல வேண்டியிருக்கும் என்பது விதியாகும்.
அதேபோல, உயில் எழுதும்போது பேனாவிலும் எழுதலாம். கம்ப்யூட்டரில் டைப் செய்து கொள்ளலாம்.. ஒருவர் தன்னுடைய பெயரில் உள்ள அசையும் பொருள்கள், அசையாத பொருள்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே எழுதி தயாராக வைத்து கொள்ள வேண்டும். எந்த சொத்தை, யாருக்கு, எவ்வளவு தருவது என்றும் தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். 2 சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உயில் எழுதுவதற்கென முத்திரைத்தாள் எதுவும் தேவைப்படாது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications