Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஓடு மீன் ஓட".. பலே பாஜக.. கிளம்பும் சசிகலா.. பின்னாடியே தலைவர்.. பச்சை கலர் பார்டரில்.. சீனே மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அளவுக்கு அதிகமாகவே நொந்து போயிருக்கிறாராம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.. அதிமுக அடையாளமின்றி இன்று காணப்பட்ட தோற்றம், அவரது ஆதரவாளர்களை கடும் அப்செட்டுக்கு ஆளாக்கியிருக்கிறதாம்.
எத்தனை முறைதான், ஒரே ஒரு விவகாரத்திற்காக கோர்ட்டின் கதவை தட்டுகிறீர்கள்? என்று ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடையும் விதித்துவிட்டது.

தீர்ப்பு: இப்போதைக்கு, ஹைகோர்ட்டின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்கால தடையை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பு அப்பீலுக்கு போயுள்ளது.. இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் தெரிகிறது. எனினும், பல்வேறு சிக்கல்களில் ஓபிஎஸ் சிக்கியிருப்பதாக தெரிகிறது.

Are these Sasikalas master plans and What is OPS going to do next in AIADMK

வருது மாநாடு: காரணம், வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தாலும்கூட, இறுதி தீர்ப்பு எப்போது வரும் தெரியவில்லை.. மாநாட்டை விரைவில் நடத்த முடிவுசெய்திருப்பதால், இதற்கான ஏற்பாடுகளையும் ஓபிஎஸ் செய்ய வேண்டியிருக்கிறது.. அதற்குள் தீர்ப்பு சாதகமாக வருமா என்று தெரியவில்லை.. பேனர், போஸ்டர்கள் உட்பட, அதிமுக கொடி, இலை இல்லாமலேயே மாநாட்டை நடத்துவது சாத்தியமாகுமா? அதிமுக தொண்டர்கள் இதை எப்படி எடுத்து கொள்வார்கள்? என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

இன்றைய தினமே, ஓபிஎஸ்ஸின் காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிமுக கொடி மிஸ் ஆகியிருந்தது.. வழக்கமாக அணியும் கருப்பு - வெள்ளை - சிவப்பு அதிமுக கரை வேட்டிக்கு பதில், பச்சை கலர் பார்டர் வைத்த வேட்டியுடன் ஓபிஎஸ்ஸை பார்க்க முடிந்தது.. முதல்முறையாக, வாழ்நாளில் அதிமுக அடையாளமே இல்லாமல் ஓபிஎஸ்ஸின் தோற்றத்தையும், காரையும் பார்த்து, அவரது ஆதரவாளர்கள் நொந்து போய் உள்ளனர்.

ஓபிஎஸ் கலக்கம்: அதிமுக சின்னம் விஷயத்திலும் தன்னை பாஜக கைவிட்டுவிட்டதே என்ற கலக்கம் ஓபிஎஸ் தரப்புக்கு வந்துள்ளதாம்.. கடந்த மார்ச் மாதம், பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு வந்தபோதும் இப்படித்தான் ஓபிஎஸ் இடிந்து போய்விட்டாராம். இதுகுறித்து, நாம் பிரத்யேக செய்தியை அப்போது வெளியிட்டிருந்தோம்.

அதாவது, தீர்ப்பு வந்த தினத்தன்றே, சசிகலாவுக்கு போனை போட்டு பேசினாராம் ஓபிஎஸ்.. அப்போது சசிகலா ஓபிஎஸ்ஸிடம், "டெல்லியிலும் நீதிமன்ற வளாகத்திலும் அசைக்க முடியாத லாபியை பழனிச்சாமி (எடப்பாடி) வைத்திருக்கிறார். உங்களால் ஏன் அப்படி ஒரு லாபியை வைக்க முடியவில்லை?

சுப்ரீம்கோர்ட்: உங்களிடம் நான் பேசும்போதெல்லாம், 'பாஜக தலைவர்களிடம் நினைத்த நேரத்தில் பேசுவதற்கு நல்ல சோர்ஸை வைத்திருக்கிறேன். பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவைத்தான் (ஓபிஎஸ்சுக்கு சாதகமானவை ) சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யும்ன்னு சொன்னீங்க.. ஆனால், உங்க நம்பிக்கை தப்பா போய்டுச்சே, உங்களுக்கு சரியான சோர்ஸ் இல்லையா?" என்று கேட்டாராம் சசிகலா.

அதற்கு, ஓபிஎஸ், "பாஜக தலைமையை ரொம்பவும் நம்பினேன். கைவிட்டுட்டாங்க" என்று ஆதங்கப்பட்டுள்ளார். தினகரனிடம் பேசியபோதும் இதே ரீதியிலேயே ஓபிஎஸ்ஸின் பேச்சு இருந்ததாம்..

அதிமுக சின்னம்: அதனால்தான், இப்போதும் பாஜக தனக்கு உதவவில்லையே என்ற வருத்தம் இருப்பதாக தெகிறது. 5 மாநில தேர்தல் பிஸியில் அவர்கள் இருந்தாலும்கூட, சின்னம் விவகாரத்தில் கைகொடுக்காமல் போனது, ஓபிஎஸ் தரப்பில் அப்செட்தானாம்..

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பில் நொந்துபோயிருக்கும் அதிருப்தியாளர்களுக்கு எடப்பாடி தரப்பு வலையை விரித்து கொண்டிருக்கிறதாம்.. என்ன உத்தரவாதம் தந்து, தன்பக்கம் இவர்களை ஓபிஎஸ் தக்கவைத்து கொள்ள போகிறார் தெரியவில்லை. இப்போதைக்கு ஒரே ஆறுதலாக இருப்பது சசிகலா, தினகரன் மட்டும்தான் என்பதையும் ஓபிஎஸ் உணர்ந்துள்ளாராம்.

டெல்லி மேலிடம்: அதேபோல, சசிகலாவை பொறுத்தவரை டெல்லி மேலிடத்துடன் நல்ல இணக்கமான போக்கையே கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த முறை தென்மண்டலத்தில், தன்னுடைய ஆதரவாளர்களையும் களமிறக்க போவதாகவும், அவர்களுக்கும் சீட் வேண்டும் என்றும் கேட்டு வருகிறாராம்.

எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இல்லாத நிலையில், சசிகலாவை வைத்து தெற்கு பகுதி ஓட்டுக்களை பெற வேண்டியிருப்பதால், சசிகலாவின் இந்த வேண்டுகோள்களை பாஜக மேலிடம் நிராகரிக்காது என்றும் தெரிகிறது.

சசி அதிரடி: அதுமட்டுமல்ல, இந்த தேர்தலில் சசிகலா நேரடியாக களமிறங்கினால், அது தங்களுக்கு பலமாக இருக்கும் என்று தமிழக பாஜகவின் தென்மண்டல சீனியர்களே நினைக்கிறார்களாம். எனவே, சசிகலாவின் கோரிக்கைகளை, டெல்லி தலைவர்கள் பரிசீலிக்க நிறையவே வாய்ப்புள்ளதாம்.

இருந்தாலும், ஓபிஎஸ்ஸை இப்படி தனித்துவிட்டுவிட்டார்களே என்ற கவலையும், முக்குலத்தோர் மத்தியில் எழுந்துள்ளதாம்.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+