ஃபுல் ஃபோர்ஸில் தமிழக காவல்துறை.. மேலே பார்த்தீங்களா.. "இனி ஒருத்தரும் தப்ப முடியாது".. சபாஷ் போலீஸ்
சென்னை: தமிழகத்தில் குற்றவாளிகள் இனி ஒருத்தரும் தப்ப முடியாது.. அந்த அளவுக்கு காவல்துறையில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.. ட்ரோன்களை வைத்து குற்றவாளிகளுக்கு செக் வைக்க போகிறது போலீஸ்..!!
மிகவும் மென்மையான பொருட்கள் மூலம் இந்த ட்ரோன்கள் வடிவமைக்கப்படுகிறது.. இதன் எடையும் குறைவாக இருக்கும். ட்ரோன்கள் என்றால், சிறிய ஆளில்லாத விமான தொழில்நுட்பம் ரிமோட் உதவியுடன் சென்சார் மூலம் இயக்கப்பட்டு வருகிறது...

இந்த ட்ரோன் பறக்கும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் சத்தத்தை குறைக்க தேவையான பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.. அதனால்தான், விமானம் பறக்கும் போது வரும் சத்தம் ட்ரோன்கள் பறக்கும் போது வருவது கிடையாது.. நீண்ட தூரத்திற்கு பறக்கவிட முடியும். மனிதர்கள் செல்ல சவாலாக உள்ள இடங்களுக்கு ட்ரோன்கள் எளிதாக செல்ல முடியும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
3 டிரோன்கள்: அந்தவகையில், காவல்துறையிலும் இந்த ட்ரோன்களை முழுவீச்சில் கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. சென்னை காவல் துறை, "ஏவிரோனிக்ஸ்" என்ற ட்ரோன்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மொத்தம் 3 விதமான ட்ரோன்கள் தயாரித்து வருகிறது.. பேஸ் ரெகக்னேஷன், லைப் சேவர் ட்ரோன் என்பது அந்த டிரோன்களின் பெயர்களாகும்-
"பேஸ் ரெகக்னேஷன்" என்ற இந்த ட்ரோன் வடிவமைப்பே வித்தியாசமாக இருக்கிறதாம்.. காரணம், குற்றவாளிகளின் முக அடையாளத்தை கண்காணிக்கும் வகையில் பிரத்யேகமாக இந்த டிரோன் தயாரிக்கப்படுகிறதாம்.. சென்னையில் மெரினா, தி.நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், முதற்கட்டமாக இந்த ட்ரோனை களமிறக்குகிறது தமிழக போலீஸ்..
குற்றவாளிகள்: கூட்டத்தில் திருடுபவர்கள், கும்பலில் ஆட்டைய போடுபவர்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் என ஒருத்தரும் இனி தப்பமுடியாது.. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் குற்றவாளிகளின் முகத்தை துல்லியமாக கண்டறிந்து, போலீசாருக்கு உடனடி தகவலை இந்த டிரோன் அனுப்பிவிடும்.. இதனால் குற்றச்செயல்கள் தடுக்கப்படுவதுடன் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய உதவும்...
ஒருவேளை, குற்றச்செயல் செய்துவிட்டு, தப்பிஓடினாலும்கூட, இந்த டிரோன் விடாது.. ஓடி ஒளிந்து நடப்போரை கண்டறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுமாம்.
தத்தளிப்பு: அடுத்தது, "லைப் சேவர் ட்ரோன்" என்ற இந்த டிரோன் மக்களுக்கானது.. மக்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படுத்தப்பட உள்ளது. சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில், இந்த வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதாவது கடற்கரை பகுதிகளில் கண்காணிக்குபோது, கடல் அலையில் சிக்கி தத்தளிப்போரின் அருகாமையில், லைப் சேவர் பலுான் போடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.. இதனால், கடல் தண்ணீரில் போட்டவுடனேயே இந்த பலூன் விரிந்து கொள்ளுமாம்.. அவற்றை பிடித்து உயிர் பிழைத்துக்கொள்ள முடியும். அதுவும் இல்லாமல், பணியில் இருக்கும் போலீசாருக்கும் உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற முடியும்.
பேரிடர்: மூன்றாவதாக உள்ள ட்ரோன், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், இடர்பாடுகளில் சிக்கி தத்தளிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.. இந்த மூன்று வித 'ட்ரோன்'களும் விரைவில், சென்னை காவல்துறையின் பயன்பாட்டிற்கு வரப்போகிறது..
இது குறித்து, 'ஏவிரோனிக்ஸ்' நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, "போலீசாரிடம் உள்ள குற்றவாளிகளின் லிஸ்ட்கள் ட்ரோன்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் வாயிலாக, குற்றவாளிகளை அவரது பெயருடன் கண்டறிய முடியும்... இதில், மக்களின் எண்ணிக்கை கணக்கிடுவது, வாகன எண்ணை துல்லியமாக படம் பிடிப்பது, தனி நபரை அடையாளம் காண்பது என, அனைத்தும் சோதனையும் செய்து காண்பிக்கப்பட்டது. விரைவில், காவல் துறை பயன்பாட்டிற்கும் வர உள்ளது" என்றனர்.












Click it and Unblock the Notifications