மிரண்ட "கமலாலயம்".. கவனித்த "அறிவாலயம்".. அட இவ்ளோ இருக்கா? காரணமே எடப்பாடி பழனிசாமிதான்.. என்னாச்சு?
சென்னை: இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி எதற்காக மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்ட போகிறார் என்ற ஆர்வம் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது. இதுகுறித்து சில அனுமானங்களும் கசிந்து கொண்டிருக்கின்றன.
தேர்தல் ஆணைய வெப்சைட்டில், அதிமுகவின் சட்ட விதிகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது... அத்துடன் இரட்டை இலை சின்னமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கடிதமானது, அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சின்னம் + அதிகாரம்: இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடக்கப்போவதாக சொல்லி உள்ளனர்.. அதிமுக உச்சக்கட்ட குஷியிலும், நிம்மதியிலும் உள்ள நிலையில், இன்றைய கூட்டம் எதற்காக நடத்தப்போகிறார்கள் என்ற யூகங்கள் பறந்து வருகின்றன.
விரைவில் எம்பி தேர்தல் உள்ளதால், அதற்கான பணிகளில் மா.செ.க்கள் இறங்கவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்கிறார்கள்.. அதேபோல, தென்மண்டலங்களிலோ, டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இருவரின் சமூக வாக்குகளை உடைக்க வேண்டி உள்ளது.. எனவே, அதிமுகவில் அந்தந்த மாவட்ட மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அசைன்மென்ட்களை எடப்பாடி தருவார் என்கிறார்கள்..
மதுரையில் அதிமுகவின் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதன்மூலம், தென்சமூக மக்களின் அதிருப்திகளை எல்லாம் ஆதரவாக மாற்ற முயலலாம் என்றும் தெரிகிறது.. எனவே, மாநாட்டை எங்கு நடத்துவது, என்பது என்பது உட்பட, அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை பணிகள், பூத் கமிட்டி வேலைகள், இவைகளை பற்றியெல்லாம் ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என்கிறார்கள்..
மாவட்ட செயலாளர்கள்: அதுமட்டுமல்ல, அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டச் செயலாளர்கள் இருந்தனர். ஆனால், கட்சியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கியதால் அவருக்கு ஆதரவாக 6 மாவட்டச் செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது அதிமுகவில் 69 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர்.. அதனால், மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கு செயலாளர்களை நியமிப்பது குறித்தும், ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
இப்படி பல்வேறு யூகங்கள் வலம்வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி எதற்காக இன்றைய கூட்டத்தை கூட்டியுள்ளார் என்பதற்கு, இன்னொரு முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது.
தீவிர கவனம்: கடந்த 2 வருட காலமாகவே அதிமுகவில் சூழல் சரியில்லை.. உட்கட்சிபூசல் தலைதூக்கவும் இது தொடர்பான செயல்பாடுகளிலேயே கவனத்தை அக்கட்சி செலுத்த வேண்டியதாக இருந்தது.. ஓபிஎஸ் விவகாரம், வழக்கு விசாரணைகளில் மூழ்க வேண்டியதாயிற்று.. இடைத்தேர்தலிலும் பெருத்த நன்மையை பெற முடியவில்லை.. தங்கள் விவகாரத்திலேயே பெரும்பாலான கவனத்தை அதிமுக தரப்பு செலுத்திக் கொண்டிருக்க, சைலண்ட்டாக மேலே எழுந்து வந்தது தமிழக பாஜக.. அதிமுகவின் பலவீனங்கள் பாஜகவுக்கு பலமாகி கொண்டே போனது.
தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்ற வாதத்தையும், வலுவாக முன்வைத்தது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் முன்னெடுத்தது.. அந்தவகையில், பாஜகவின் எழுச்சி கடந்த ஒரு வருடத்தில் அபரிமிதமாகவே வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது.. இது அதிமுகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. இப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும்கூட, தாங்கள்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பதை அதிமுக அழுத்தமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது..
அந்தஸ்து: விரைவில் எம்பி தேர்தலும் வரப்போகிறது. இப்போதைக்கு ஒட்டுமொத்த அதிமுகவும் கையில் கிடைத்துள்ள நிலையில், முழு அதிகாரமும் எடப்பாடி வசம் சென்றுள்ளது.. எனவே, அதிமுகவின் செல்வாக்கையும், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுகவுக்கு மட்டுமல்லாமல், பாஜகவுக்கும் சேர்த்தே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.. கடந்த 2 நாட்களாகவே, திமுக அரசை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கள்ளச்சாராய விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைத்துவிட்டார்.. இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டியுள்ள நிலையில், திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டங்களை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த குடைச்சல்: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால், திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை, அதிமுக சார்பில் போராட்டம் கையில் எடுக்கப்பட்டால், இது திமுகவுக்கு அடுத்த குடைச்சலை தருவதாக இருக்கும் என்கிறார்கள்.. என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications