மீண்டும் கோயம்பேடு.. அதென்ன மூணாவது கண்.. கோயம்பேட்டில் அடுத்தடுத்த அதிரடியால் திக்குமுக்காடிய ஜனம்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் புது புது அதிரடிகள் தவறாமல் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், இப்போதும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய சென்னை கோயம்போடு மார்க்கெட்டானது, ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான சந்தை என்ற பெருமைக்குரியது.. அந்தவகையில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் தினமும் வந்து குவிகின்றன.

மார்க்கெட்: அதற்கேற்றவாறு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சிஎம்டிஏ) நிர்மாணிக்கப்பட்ட கோயம்பேடு மொத்தவிற்பனை அங்காடி வளாகம், அங்காடி நிர்வாகக் குழுவால் சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள், போன்றவைகளில் அதிகாரிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள்.
கடந்தவாரம்கூட, மதுரவாயல், பூந்தமல்லி பிரதான சாலைகள், கோயம்பேடு மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல, ஒழுங்குமுறைகளை மீறுவோர் மீதும் அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்மேற்கொண்டு வருகின்றனர்.. கோயம்பேடு காய்கறி, பூ மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காமல் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருவதால், அந்த கடைகளுக்கு அங்காடி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இப்போதும் இன்னொரு அதிரடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செல்போன்கள்: மார்க்கெட் பகுதியில், பகல் மற்றும் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் சிலா் வாகன திருட்டில் ஈடுபடுவதுடன், தனியாக சிக்கும் வியாபாரிகள், பொதுமக்களை மிரட்டி அவா்களிடமிருந்து பணம், செல்போன்களை பறித்துச்செல்லும் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டுவிடுகிறார்கள்..
எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் பாதுகாப்பு நலன் கருதியும், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்டறியவும், சந்தை வளாக பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என வியாபாரிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த கோரிக்கையை ஏற்ற கோயம்பேடு அங்காடி நிா்வாகம், சந்தை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்து, அந்த பணிகளிலும் தற்போது ஈடுபட்டு வருகிறது.
மிகுந்த நம்பிக்கை: அந்தவகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொத்தம் 200 கண்காணிப்பு கேமராக்களை முதல் கட்டமாக பொருத்தி வருகிறது... இதற்கான கட்டுப்பாட்டு அறை அங்காடி நிா்வாக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, குற்ற செயல்களை தடுக்க முடியும் என்று அங்காடி நிா்வாக அதிகாரிகள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications