"4 ராஜாக்கள்".. ஆட்டத்தை கலைத்தாடுகிறார் எடப்பாடி.. இனிதான் இறங்கியடிக்க போகுது பாஜக.. பலே பலே
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் முன்பு உள்ள சவால்கள் என்னென்ன தெரியுமா
சென்னை: அதிமுகவை கிட்டத்தட்ட தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அடுத்து என்ன செய்ய போகிறார்? எடப்பாடியின் வெற்றியை வைத்து பாஜக என்ன செய்ய போகிறது? ஓபிஎஸ் முடிவு என்ன? என்பன போன்ற சந்தேகங்கள் தமிழக அரசியலை கடந்த 2 நாட்களாகவே சூழ்ந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள நீதிமன்றம் வழங்கிய இந்த வெற்றி நிரந்தரமில்லை என்று டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வரும்நிலையில், ஒருவரின் உண்மையான செல்வாக்கு என்ன என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும் என்றும் அரசியல் விமர்சகர்களும் கருத்து சொல்லி வருகிறார்கள்..
எடப்பாடியின் ஆளுமை நிரூபணமாகி உள்ள நிலையில், அவருக்கான பலம் கூடி வரும் நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு அடுத்தடுத்த பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆப்ஷன்கள்
எனவே, அடுத்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. அந்தவகையில், புதிதாக ஒரு கட்சியை துவக்க போகிறாரா? என்ற கேள்விதான் முதல் ஆப்ஷனாக கிளம்பி உள்ளது.. அல்லது பாஜகவுடன் இணைய போகிறாரா? ஒதுங்கியிருந்து பாஜகவுக்கு ஆதரவு தந்து தேர்தல்களை சந்திக்க போகிறாரா? இப்படியான கேள்விகளும் வலம்வருகின்றன.. மற்றொருபக்கம், சட்டப்போராட்டத்தையும் தீவிரப்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை அதிமுக இன்று நாட உள்ளது.

லாஸ்ட் சான்ஸ்
சுப்ரீம்கோர்ட்டும் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்க வேண்டும்... அத்துடன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என்றும் முறையிட உள்ளனர். இதற்காக சிவி சண்முகம் உட்பட அதிமுக வக்கீல்கள் டெல்லி சென்றுள்ளனர்... எனவே, ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் கடைசி சான்ஸ் தேர்தல் ஆணையம் ஒன்று மட்டும் தான் என்பது தெரியவருகிறது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், ஓபிஎஸ் அரசியல் முடிவுக்கு வரக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

கடுகடுத்த தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை பொறுத்தவரை, அளவுக்கு அதிகமாக குழம்பி உள்ளதாக தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு இது தற்காலிக வெற்றி என்று சொன்னாலும், ஓபிஎஸ்ஸே கவிழ்ந்துவிட்டாரே என்ற அதிர்ச்சியும், பாஜக எடப்பாடியை தொடர்ந்து ஆதரித்து வரும் போக்கும் அமமுக தரப்புக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.. எனினும், தென்மண்டல வாக்குகளை தவிர்த்துவிட்டு பாஜகவால் தேர்தலை சந்திக்க முடியாத நிலைமை உள்ளதால், எப்படியும் தனக்கான ஆதரவு விரைவில் கூடும் என்றும் அமமுக மேலிடம் நம்பியிருப்பதாக சொல்கிறார்கள்.

புஸ்வானம் சசி
பாஜகவை பொறுத்தவரை, அதிமுகவின் வாக்கு வங்கி மீது மட்டுமே பிரதான குறியை வைத்துள்ளது.. திமுகவைவிட அதிக வாக்கு வங்கியை அதிமுக காலம்காலமாக தக்க வைத்து வருகிறது. இந்த வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் அள்ள, ஒருங்கிணைந்த அதிமுக என்பது தேவையாக இருக்கிறது.. இந்த விஷயத்தைதான் இனி பாஜக கையில் எடுக்கும் என்கிறார்கள்.. அப்படியானால் மீண்டும் ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + சசிகலா என்ற புள்ளிக்குள் பாஜக எடப்பாடியை கொண்டுவந்து இணைக்கும் முயற்சியை இனி தொடங்கவும் வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அதற்கு எடப்பாடியின் பதிலடி எப்படி இருக்க போகிறது? என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக எகிறி வருகிறது.

கொங்கு சான்ஸ்
எடப்பாடியை பொறுத்தவரை, கிட்டத்தட்ட முழுக்கட்சியுமே தன்கையில் கொண்டுவந்துவிட்டதாகவே தெரிகிறது.. நேற்றைய தின தீர்ப்பானது, வரப்போகும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரக்கூடும்.. மேலும், தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி தரப்பு உற்சாகத்துடன் முன்னெடுத்துச்செல்லவும் இந்த தீர்ப்பு உதவக்கூடும். கொங்குவில் பலம் இன்னும் கூடக்கூடும்.. இனி மேலிடத்தில் கிடைக்கக்கூடிய அத்தனை அங்கீகாரங்களையும், இனி அதிமுகவுக்கே தர வேண்டிய நிர்ப்பந்தத்தையும் இந்த தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளது.. தாங்கள் மட்டுமே தமிழகத்தின் எதிர்க்கட்சி என்ற பலத்தையும் தக்கவைக்க நேர்ந்துள்ளது.

விஸ்வரூப வளர்ச்சி
ஆனால், இவை அனைத்துமே கட்சிக்கு பலம் என்றாலும், தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.. ஒரு தலைவரின் ஆளுமையை தீர்மானிப்பது, அவர் நேரடியாக எதிர்கொள்ளும் தேர்தல் முடிவுகள்தான் என்பதால், எடப்பாடியின் ஆளுமையும் இனி அடுத்தடுத்து நடக்க போகும் தேர்தல்களின் முடிவுகளில்தான் வெளிப்பட போகிறது என்கிறார்கள். பலம்பொருந்திய திமுகவை சமாளித்து, விஸ்வரூப பாஜகவையும் பகைத்து கொள்ளாமல், எடப்பாடி மேற்கொள்ள போகும் அரசியல் இனிதான் அவருக்கு சவாலாக இருக்க போவதாகவும் சொல்கிறார்கள்.

3 முதலைகள்
அதுமட்டுமல்ல, கொங்குவில் பலத்தை கூட்டியுள்ள எடப்பாடியால், தென்மண்டலங்களில் இதுவரை தன் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை.. முக்கியமாக முக்குலத்தோர் வாக்குவங்கியை எடப்பாடியால் பெற முடியாத சூழலில், ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு போன்றோரையும் நம்பி உள்ளதால், ஒட்டுமொத்த சமுதாய வாக்குகளையும் எடப்பாடியால் பெற்றுவிட முடியுமா? என்பதும் சவாலாக உள்ளது.. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவை எடப்பாடியால் முழுமையாக பெற முடியுமா? அல்லது ஓபிஎஸ் தனித்து செயல்பட்டால் மட்டும் இந்த வாக்குகளை பெற்றுவிடுவாரா? என்பதும் சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பண்ருட்டி
இதனிடையே, ஓபிஎஸ் தரப்பில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ் உள்ளிட்ட சீனியர்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்போதைக்கு எடப்பாடி பக்கம் வெற்றி கிடைத்துள்ளதை மறுக்க முடியாது.. இதில் வைத்திலிங்கத்துக்கு எடப்பாடி தரப்பு வலையை வீசுவதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பே சில செய்திகள் கசிந்து, அந்த விஷயம், அமுங்கியும் போய்விட்டன.. எனினும், தற்போது எடப்பாடி பழனிசாமி முன்புள்ள சவால்களை அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற ஆர்வமும் தமிழக மக்களிடம் கவ்வி உள்ளது.. அடுத்து என்ன நடக்கபோகிறது? பார்ப்போம்..!!

கனவுக்கோட்டைகள்
இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்புக்காக, தமிழக பாஜக ஆதரவு தந்திருந்த நிலையில், ஈரோட்டிற்கே சென்று பிரச்சாரமும் மேற்கொண்டிருந்த நிலையில் எடப்பாடியுடன் நல்ல புரிதலிலேயே அண்ணாமலை தரப்பு உள்ளதை மறுக்க முடியாது.. இந்த இடைத்தேர்தலில் தங்களை நடத்திய விதத்தை கண்டு, ஓபிஎஸ் டீமே கடுப்பாகி, அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் போடும் அளவுக்கு, எடப்பாடியிடம் ஆதரவு அலை பாஜகவுக்கு கூடியிருப்பதையும் மறுக்க முடியாது.. எனினும், ஓபிஎஸ்ஸையும் கூல் செய்து, தினகரனையும் அரவணைத்து, எடப்பாடியுயம் எப்படி பாஜக சமாளிக்க போகிறது என்பதுதான் ட்விஸ்ட்டே..!!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications