அண்ணாமலையால் தமிழ்நாடு இழந்த 2 விஷயம் இதுதான்.. ஈர்த்த பாஜக பிரபலங்கள்.. விறுவிறுப்பு
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள், தமிழக பாஜக எதிர்பாராத ஒன்று என்றாலும், பாஜகவுக்குள் நிறைய தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியிருக்கின்றன..!! குறிப்பாக ஸ்டார் வேட்பாளர்கள் தந்திருக்கும் ரிசல்ட் என்ன?
வழக்கம்போல் திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து தேர்தலை சந்திக்கும் தமிழக பாஜக, இந்த முறை தனித்தே போட்டியிட்டு, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கும் மலைப்பை தந்திருந்தது. தங்களை முழுமையாக நம்பிய கட்சிகளை இணைத்து கூட்டணியிட்டு, களம் கண்டது.

அதேசமயம், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு இணையான பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவும் முடிவு செய்தது. இதற்காக நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்க வேண்டிய கட்டாயம் ஏறபட்டது.
இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர்கள் நீலகிரியில் எல்.முருகன், கோவையில் அண்ணாமலை, தருமபுரியில் சவுமியா அன்புமணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், நெல்லை நயினார் நாகேந்திரன் போன்றோர்தான்.
சாதி ஓட்டுக்கள்: சொந்த சாதீய ஓட்டுக்கள் கை கொடுக்கும் என்று பெரிதாக நம்பப்பட்ட ஓபிஎஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வியை தழுவியிருக்கிறார். பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே 5 வேட்பாளர்கள் போட்டியிட்டு குழப்பியிருந்த நிலையில், அவர்கள் அனைவருமே நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறார்கள். ஓபிஎஸ் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறார் என்றாலும், பாஜகவே எதிர்பார்க்காத தோல்வி இதுவாகும்.
நீலகிரி தொகுதியை பொறுத்தவரை, ஆ.ராசாவை எதிர்த்து, எல்.முருகன் போட்டியிட்டார்.. இந்த தொகுதியில் போட்டியிட எல்.முருகன் கடந்த 2 வருடமாகவே ஆசைப்பட்டார்.. அதற்காகவே அடிக்கடி நீலகிரி நிகழ்வுகளில் பங்கேற்றும் வந்தார். இதற்கு காரணம், எப்படியாவது அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துவிட்டால், ஆ.ராசாவை எளிதாக வீழ்த்தலாம் என்று கணக்கு போட்டார். முருகன் நினைத்தது சரியான வியூகம் என்றாலும், எடப்பாடியின் பிடிவாதத்தின் முன்பு அது எடுபடவில்லை.
திமுக நெருக்கடி: ஒருவேளை, அதிமுக - பாஜக இணைந்திருந்தால், திமுகவுக்கு நெருக்கடியை நிறையவே ஏற்படுத்தியிருக்கலாம். காரணம், எல்.முருகன் 2,32,627 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 2,20,230 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள்.. இருவரது வாக்குகளையும் சேர்த்து பார்த்தால், ஆ,ராசா பெற்ற 4,73,212 வாக்குகளை எளிதாக வென்றிருக்க முடியும் என்கிறார்கள்.
இதில் கவுரவமான தோல்வி என்று தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்திரராஜனை சொல்லலாம். தமிழிசையும் சரி, தருமபுரி பாமக சவுமியாவும் சரி, குறிப்பிட்ட வாக்குகளை பெற்று பாஜகவின் மானத்தை ஓரளவு காப்பாற்றியிருக்கிறார்கள்.
நயினார் நாகேந்திரன்: இதில், நெல்லை நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு அதிர்ச்சி தோல்வியை தந்துள்ளது.. நெல்லையை யார் கேட்டாலும் தரவே மாட்டேன் என்று நயினார் பிடித்த பிடிவாதத்தை டெல்லி நன்கறியும்..
தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது முதல் பல சர்ச்சைகளில் நயினார் சிக்கியது உட்பட அனைத்துமே நெல்லை பாஜகவுக்கு அதிர்ச்சிதான்.. கடந்த 2 வருடமாகவே நெல்லையில் களப்பணிகளை நயினார் மேற்கொண்டு வந்த நிலையில், பலத்த தோல்வியை பெற்றுள்ளார்.
ராதிகா: இதில் விருதுநகரில் நடிகை ராதிகாவுக்காக, பாஜக மேலிடம் சார்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள் மிகவும் குறைவுதான்.. சரத்குமாரை பாஜகவுக்குள் கொண்டுவந்தால், திமுகவின் நாடார் ஓட்டுக்களை அள்ளலாம் என்று கணக்கு போட்டும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது. நெல்லை தொகுதி வேண்டும் என்று சரத்குமார் ஆரம்பத்திலிருந்தே கேட்டு வந்தாராம். ஒருவேளை நெல்லையை தந்திருந்தால், கூடுதல் வாக்குகள் சமகவுக்கு போயிருக்குமோ என்னமோ?
அதேபோல, கோவையில் தேர்தலின்போது வாக்காளர்களில் யாரைக்கேட்டாலும், அண்ணாமலைக்கு ஓட்டு போட்டதாகவும், அவருக்கே வெற்றி வாய்ப்பு என்றும் சொல்லி வந்தனர்.. நடைபயணமும், மோடியின் பிரத்யேக வருகையும் அண்ணாமலைக்கு பலம் சேர்க்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனாலும், பெருத்த தோல்வி கிடைத்திருக்கிறது.
கணிப்புகள்: பாஜகவிடமிருந்த கோவை தெற்கு தொகுதியில், கணிசமாகவுள்ள இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கு கிடைத்திருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது.
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமையவிருக்கும் சூழலில், கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற்றிருந்தால், அவருக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்திருக்கும்.. அதேபோல, கோவைக்கும் பல திட்டங்கள் கிடைக்கும் என்கிறார்கள் தொழில் அமைப்பினர்.. அந்தவகையில், அண்ணாமலையின் தோல்வி 2 விதமான தாக்கத்தை தமிழகத்துக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபலங்கள்: இங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.. ஒருவர், "பிரபலமாக" இருப்பது மட்டுமே கட்சிக்கு வெற்றியை தந்துவிடாது.. அதையும் தாண்டி, வெகுஜன மக்களிடம் நெருங்க வேண்டியிருக்கிறது.. அவர்களின் துன்ப துயரங்களை களைய வேண்டியிருக்கிறது.
அவர்களின் மனதில் இடம்பிடிக்க செய்யும் வகையில், அன்பையும், நன்மதிப்பையும் கூடுதலாக பெற வேண்டியிருக்கிறது. இது பாஜகவுக்கு மட்டுமல்ல, வெறும் "பிரபலங்களை" அரசியல் களத்தில் இறக்கிவிட்டு, ஏமாறும் அனைத்து கட்சிகளுக்குமே பொருந்தும் உண்மையாகும்..!!
கோவையை பொறுத்தவரை, அருந்ததியர் வீட்டில் உணவு அருந்தியது, நள்ளிரவில் கோவை ரோட்டில் போராட்டம் நடத்தியது என கடைசிவரை பரபரப்புடனேயே தொகுதியை வைத்திருந்தார் அண்ணாமலை என்றாலும், மண்ணை கவ்வியிருக்கிறது.. அதேசமயம், அண்ணாமலைக்கு இருந்த செல்வாக்கு, பிரதமர் மோடியின் பிரச்சாரம் போன்றவை காரணமாக, தற்போது தமிழக அரசியலில் முக்கிய இடம் கிடைத்திருப்பதை மறுக்க முடியாது.
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா?












Click it and Unblock the Notifications