"லாஸ்ட் மினிட்ல" மாறுதே.. தடுமாறுதே.. அப்ப வாக்கு வங்கி எகிறுவது யாருக்கு.. பரபர "பரமபதம்" ப்ளான்கள்
நாம் தமிழர் மற்றும் அதிமுக கூட்டணி பிரச்சாரங்களில் ஏற்பட போகும் தாக்கங்கள் என்னென்ன
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளன.. நான்கு முனை போட்டிகள் களத்தில் எழுந்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் சில கட்சி தலைவர்களின் பிரச்சாரங்கள் விறுவிறுப்பை கூட்டி உள்ளன.. அதேசமயம், சில தலைவர்களின் பிரச்சார பேச்சுக்கள் அந்தந்த கட்சிகளின் வாக்கு வங்கியையே, பதம்பார்த்து விடுமோ என்ற கலக்கத்தையும் தந்துள்ளதாம்.. என்ன நடக்கிறது ஈரோடு கிழக்கில்?
ஈரோடு கிழக்கில் எப்படியும் 6 முனைப்போட்டி, 5 முனைப்போட்டி ஏற்பட போவதாக கணிப்புகள் வலம் வந்த நிலையில், இறுதியில் 4 முனைப்போட்டியே இறுதியாகி உள்ளது.
திமுக கூட்டணி, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி கவனம் பெற்றுள்ளது.. இதற்கு முக்கிய காரணம் சீமானின் அரசியல் வியூகமும், அவர் முன்னெடுத்து வரும் பேச்சுக்கள்தான்.

சீமான் சிங்கம்
சீமானை பொறுத்தவரை, வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்கவும் செய்யாமல், அதேசமயம் யாருடனும் கூட்டணிக்கும் இணங்காமல், "சிங்கிள் சிங்கமாக" களவாடி வருவது பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. தமிழ் தேசியத்தை முன்வைப்பது ஒருபக்கம், திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது மறுபக்கம் என இரு துருவங்களில் அவரது அரசியல் விடாமல் பயணப்பட்டு வருவதையும் மறுக்க முடியாது.. அதேபோல. சாலை வசதி, குடிநீர் வசதி, டாஸ்மாக் அகற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்ற மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயங்களை கையில் எடுத்து, பிரச்சாம் செய்து, எளிமையாக ஓட்டுக்களை கேட்டு வருவதும் நாம் தமிழர் கட்சிக்கு பிளஸ் ஆகி உள்ளது..

வெல்கம்
பிரச்சாரத்தில் பேசும்போது, ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, எப்ப பார்த்தாலும், "சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும், சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்"-ன்னு ஒவ்வொரு முறையும் இவங்க சொல்லிட்டே இருக்காங்க.. பிஜேபிக்கு போடாதே என்று தைரியமாக சொல்ல முடியாத நீங்கள், சீமானுக்கு போட்டால் பிஜேபி வந்துடும் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? எனக்கு ஓட்டுப்போட்டால், நான்தானே வருவேன்? என் வீட்டில் ஸ்விட்ச் போட்டால், என் வீட்டிலதானே விளக்கு எரியும்? உன் வீட்லயா எரியும்? ஒரு குடையை உங்களால கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்"? ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கம்"??" என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.

பல்ப் எரியுமா
பாஜகவின் பி டீம் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை இதுநாள்வரை கண்டுகொள்ளாமல் இருந்த வந்த சீமான், இந்த ஈரோடு கிழக்கில் அதை இப்படியான பிரச்சாரத்தால் நொறுக்க முயன்றதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் வரவேற்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிகிறது.. இதனால் சிறுபான்மையினர் வாக்குகளை சீமான் பெற முயல்வதுடன், பாஜக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை, அதிமுக பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சிக்கே அறுவடை செய்யும் முயற்சியாகவும் அவரது பேச்சுக்கள் பார்க்கப்பட்டு வருகின்றன..

மண்டை உடைப்பு
சீமான் நினைத்தால், இடைத்தேர்தலில் 2ம் இடத்தைகூட எட்டிப்பிடித்துவிட முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து சொல்லும் அளவுக்கு பிரச்சாரம் வீர்யம் நிறைந்ததாக உள்ளது. ஆனால், திடீரென அருந்ததியர்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளது, மிகப்பெரிய மைனஸாக பார்க்கப்பட்டு வருகிறதாம்.. திமுகவினரோடு மோதலில் ஏற்பட்டு மண்டை உடைப்பு விவகாரங்களும் நடந்துள்ளது, நாம் தமிழர் கட்சிக்கு சறுக்கலாக அமைந்துவிடுமோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறதாம்..

முனுசாமி சுருக்
அதேபோல, அதிமுகவை பொறுத்தவரை, இந்த முறை சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக பெற்றுவிட வேண்டும் என்றே தீவிரமாக களப்பணியாற்றினர்.. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழக்க நேரிட்டது என்பதை சிவி சண்முகம் முதல் முனுசாமி வரை வெளிப்படையாகவே புலம்பி வருவதை மறுக்க முடியாது.. அதனால்தான், இடைத்தேர்தல் தொகுதியின் பணிமனை பேனர் விஷயத்தை எடப்பாடி தரப்பு கையில் எடுத்தது.. பிரச்சாரங்களில் பெரிதாக பாஜக நிர்வாகிகளை இணைத்து கொள்ளாமல், முக்கிய இடங்களில் பாஜக நிர்வாகிகளை தவிர்த்துவிட்டும், வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் இறங்கியதாக 2 நாட்களுக்கு முன்புகூட தகவல்கள் கசிந்தன.

மீனிங் கிடையாதே
அதனாலேயே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் முக்கிய இஸ்லாமிய பிரமுகர்களை, ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் தீவிர முயற்சிகளை கையில் எடுத்ததாக தெரிகிறது. போதாக்குறைக்கு, அதிமுகவின் நிலைப்பாட்டையும் பகிரங்கமாகவே தன்னுடைய பிரச்சாரத்தில் வெளிப்படுத்தியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. "எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள்.. கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நினைக்காதீங்க. அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டோம் என்றும் அர்த்தம் கிடையாது. யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது" என்று தெளிவுபடுத்தியிருந்தார்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications