"லாஸ்ட் மினிட்ல" எல்லாமே மாறிடுச்சே.. முஸ்லிம் ஓட்டுக்கள் யாருக்கு? எடப்பாடியை முந்திட்டாரா சீமான்?
நாம் தமிழர் மற்றும் அதிமுக கூட்டணி பிரச்சாரங்களில் ஏற்பட போகும் தாக்கங்கள் என்னென்ன
சென்னை: தேர்தல் கணிப்புகள் பல வெளியான நிலையில், இன்றைய தினம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது.. அந்தவகையில் எல்லாவித கணிப்புகளும், யூகங்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் நொறுங்கி விழுந்துள்ளன.
ஈரோடு கிழக்கில் எப்படியும் 6 முனைப்போட்டி, 5 முனைப்போட்டி ஏற்பட போவதாக கணிப்புகள் வலம் வந்த நிலையில், இறுதியில் 4 முனைப்போட்டியே இறுதியாகி விட்டது.
திமுக கூட்டணி, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி கவனம் பெற்றது.. இதற்கு முக்கிய காரணம் சீமானின் அரசியல் வியூகமும், அவர் முன்னெடுத்து வரும் பேச்சுக்கள்தான்.

சீமான் சிங்கம்
சீமானை பொறுத்தவரை, வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்கவும் செய்யாமல், அதேசமயம் யாருடனும் கூட்டணிக்கும் இணங்காமல், "சிங்கிள் சிங்கமாக" களமாடி வருவது பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. தமிழ் தேசியத்தை முன்வைப்பது ஒருபக்கம், திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது மறுபக்கம் என இரு துருவங்களில் அவர் அரசியல் விடாமல் பயணப்பட்டு வருவதையும் மறுக்க முடியாது.. அந்தவகையில்தான், ஈரோட்டிலும் களம் இறங்கினார்.. சாலை வசதி, குடிநீர் வசதி, டாஸ்மாக் அகற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்ற மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயங்களை கையில் எடுத்து, பிரச்சாம் செய்து, எளிமையாக ஓட்டுக்களை கேட்க துவங்கினார்.

வெல்கம்
ஆனால், இந்த முறை சீமான் பிரச்சாரத்தில் சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்தே அதிகம் பேசியதாக கருதப்பட்டது.. ஒருமுறை பிரச்சாரத்தில், ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, எப்ப பார்த்தாலும், "சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும், சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்"-ன்னு ஒவ்வொரு முறையும் இவங்க சொல்லிட்டே இருக்காங்க.. பிஜேபிக்கு போடாதே என்று தைரியமாக சொல்ல முடியாத நீங்கள், சீமானுக்கு போட்டால் பிஜேபி வந்துடும் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? எனக்கு ஓட்டுப்போட்டால், நான்தானே வருவேன்? என் வீட்டில் ஸ்விட்ச் போட்டால், என் வீட்டிலதானே விளக்கு எரியும்? உன் வீட்லயா எரியும்? ஒரு குடையை உங்களால கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்"? ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கம்"??" என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.

பல்ப் எரியுமா
பாஜகவின் பி டீம் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை இதுநாள்வரை கண்டுகொள்ளாமல் இருந்த வந்த சீமான், இந்த ஈரோடு கிழக்கில் அதை இப்படியான பிரச்சாரத்தால் நொறுக்க முயன்றதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் வரவேற்புகள் அதிகமாக உள்ளதாகவே எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சிறுபான்மையினர் வாக்குகளை சீமான் பெற முயல்வதுடன், பாஜக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை, அதிமுக பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சிக்கே அறுவடை செய்யும் முயற்சியாகவும் அவரது பேச்சுக்கள் பார்க்கப்பட்டன.. சீமான் நினைத்தால், இடைத்தேர்தலில் 2ம் இடத்தைகூட எட்டிப்பிடித்துவிட முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து சொல்லும் அளவுக்கு பிரச்சாரம் வீரியம் நிறைந்ததாக அமைந்தது.

முனுசாமி சுருக்
அதேபோல, அதிமுகவை பொறுத்தவரை, இந்த முறை சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக பெற்றுவிட வேண்டும் என்றே தீவிரமாக களப்பணியாற்றினர்.. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழக்க நேரிட்டது என்பதை சிவி சண்முகம் முதல் முனுசாமி வரை வெளிப்படையாகவே புலம்பி வருவதை மறுக்க முடியாது.. அதனால்தான், இடைத்தேர்தல் தொகுதியின் பணிமனை பேனர் விஷயத்தை எடப்பாடி தரப்பு கையில் எடுத்தது.. பிரச்சாரங்களில் பெரிதாக பாஜக நிர்வாகிகளை இணைத்து கொள்ளாமல், முக்கிய இடங்களில் பாஜக நிர்வாகிகளை தவிர்த்துவிட்டும், வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் இறங்கியதாகவும் சொல்லப்பட்டது.

மீனிங் கிடையாதே
இதற்காகவே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் முக்கிய இஸ்லாமிய பிரமுகர்களை, ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் தீவிர முயற்சிகளை கையில் எடுத்திருந்தனர். போதாக்குறைக்கு எடப்பாடி பிரச்சாரம் செய்யும்போது, "எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள்.. கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நினைக்காதீங்க. அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டோம் என்றும் அர்த்தம் கிடையாது. யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது" என்று தெளிவுபடுத்தியிருந்தார்..

டர்னிங் பாயிண்ட்
இதன்மூலம், சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என்ற மெசேஜ்ஜை கூட்டணி பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி தெரியப்படுத்தி உள்ளார் என்பதுடன், சிறுபான்மையினர் ஓட்டுக்களும் பிரதானமாக அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், கடைசி நேரத்தில் சீமான் + எடப்பாடியின் நம்பிக்கை எல்லாம் குறையும் விதமாக அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தன.. அதிமுகவுக்காக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. இத்தனைக்கும் அண்ணாமலை பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாது என்று எடப்பாடி அறிவித்திருந்தபோதிலும், அண்ணாமலையின் பிரச்சாரம், எந்த அளவுக்கு சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுகவுக்கான பெற்றுத்தரும் என்ற சந்தேகத்தை கிளப்பியது.

சீமானா? எடப்பாடியா?
அதேபோல, அருந்ததியினர் சமூகத்தை பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசிவிட்டதாக புகார்கள் வெடித்தன.. திமுக தொண்டர்களுடனும் கைகலப்பு ஏற்பட்டு, மண்டை உடைந்தது.. கடைசி நேரம்வரை மருத்துவமனை, வழக்கு, விசாரணை, புகார்கள் என நாம் தமிழர் கட்சி டென்ஷனில் சிக்கியது.. இந்த சூழலில்தான் சில கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தன.. எதிர்பார்த்ததைபோலவே, 2வது இடத்தில் எடப்பாடியும், இளைஞர்களின் ஓட்டுக்களை சீமானும் பெற்றிருந்தாலும், இன்றைய தினம் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சிறுபான்மையினர், இளைஞர்களின் வாக்குகளை அள்ள போவது யார்? எடப்பாடியா? சீமானா? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது. என்ன நடக்க போகிறது? ..!!

கணிப்புகள்
முன்னதாக, பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலில் மக்கள் ஆய்வு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தது.. அதில், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 9.5 முதல் 17 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும், முதல் வாக்காளர் உள்ளிட்ட 21 வயதுக்குப்பட்ட இளம் வாக்காளர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு அமோக ஆதரவு வெளிப்படுவதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது, 21 வயதிற்குள்ளான வாக்காளர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சி 29.5 சதவிகிதம் ஆதரவும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 28.5 சதவிகித ஆதரவும் கிடைத்திருந்தது.

சீமானா? எடப்பாடியா?
அதேபோல, அருந்ததியினர் சமூகத்தை பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசிவிட்டதாக புகார்கள் வெடித்தன.. திமுக தொண்டர்களுடனும் கைகலப்பு ஏற்பட்டு, மண்டை உடைந்தது.. கடைசி நேரம்வரை மருத்துவமனை, வழக்கு, விசாரணை, புகார்கள் என நாம் தமிழர் கட்சி டென்ஷனில் சிக்கியது.. இந்த சூழலில்தான் சில கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தன.. எதிர்பார்த்ததைபோலவே, 2வது இடத்தில் எடப்பாடியும், இளைஞர்களின் ஓட்டுக்களை சீமானும் பெற்றிருந்தாலும், இன்றைய தினம் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சிறுபான்மையினர், இளைஞர்களின் வாக்குகளை அள்ள போவது யார்? எடப்பாடியா? சீமானா? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது.

பல்ப் எரியுமா
ஆனால், எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் கட்சி முன்னிலையை வகிக்க தொடங்கிவிட்டது.. இரண்டாம் இடத்தில் அதிமுக பின்தொடர்ந்தது.. தேமுதிகவை 4வது இடத்திற்குத் தள்ளி, மூன்றாவது இடத்தை பிடித்துவிட்டது நாம் தமிழர் கட்சி. அதாவது, நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்லலாம். காரணம், ஒன்பது சுற்றுகள் முடிவின்போது, நாம் தமிழர் கட்சி 4,162 வாக்குகளையும், தேமுதிக 606 வாக்குகளையும் பெற்றிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. ஆனால், கடந்த முறை போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 11,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்த நிலையில், அதே 3வது இடத்தைதான் இந்த முறையும் நாம்தமிழர் கட்சி பெற்றுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications