Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முக்கோண இடி".. வீசும் எடப்பாடி புயல்.. சுழட்டியடிக்கும் சூறாவளி திமுக.. பாஜக டோட்டலா சேஞ்ச் ஆகுதே?

ஓபிஎஸ், எடப்பாடி இருவரில் பாஜக யாருக்கு ஆதரவை தர போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் இடைத்தேர்தல் களம் சூடாகி வரும்நிலையில், பாஜகவின் நிலைப்பாடும், அதையொட்டி, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் எடுக்க போகும் முடிவுகளும் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது.. இதனால் களம் சூடுபிடித்துள்ளது.. இதில், படுமும்முரத்தில் உள்ளது திமுக கூட்டணி கட்சிதான்.

ஆனால், அதிமுகவோ தடுமாறி வருவதாக தெரிகிறது.. வேட்பாளரை நிறுத்த முடியாமலும் குழம்பி உள்ளனர்.. அதேபோல, ஓபிஎஸ்ஸும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

 ஏசி சண்முகம்

ஏசி சண்முகம்

இந்த விவகாரத்தில் பாஜகவின் ரோல் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. யாருக்கு பாஜக ஆதரவு என்பதில், எத்தனையோ அனுமானங்களும், வதந்திகளும், தகவல்களும், வியூகங்களும் இணையத்தில் ரவுண்டு கட்டி வருகின்றன.. எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில், அவருக்கு ஆதரவு தரலாம் என்று பாஜக கணக்கு போட்டுவந்த நிலையில், தற்போது சிக்கலாகி உள்ளது.. காரணம், பாஜக போட்டியிட்டால், ஆதரவு தரத்தயார் என்று ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துவிட்டார்.. உடனே, பாஜவுக்கு எங்கள் ஆதரவு என்று புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக்கழகம் போன்ற கட்சிகளும் அறிவித்தது, இந்த விவகாரத்தில் ட்விஸ்ட்டாக மாறி உள்ளது.

 3 ஆப்ஷன்

3 ஆப்ஷன்

இதற்கு பிறகுதான், குழப்பங்களும் மெல்ல வெடிக்க ஆரம்பித்த நிலையில், எடப்பாடிக்கு ஆதரவு என்ற நிலையை பாஜக மறுபரிசீலனை செய்ய துவங்கியது.. ஓபிஎஸ் களத்தில் இறங்கினால், எடப்பாடி டீமுக்கு இலை கிடைக்காது என்ற சூழலும் ஏற்பட்டுவிட்டது.. இதன்காரணமாகவே, எடப்பாடி டீமில் போட்டியிட பலரும் தயங்குவதாக சொல்கிறார்கள்.. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் என 3 பேர் ஆப்ஷனில் இருந்தாலும், இவர்களுக்கு யார் மக்களின் ஆதரவு உள்ளது என்ற ஆராய்ச்சியும் நடந்து வரும் நிலையில், அநேகமாக இன்றைய தினம் வேட்பாளரை எடப்பாடி டீம் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 கெடு வெச்சாச்சு

கெடு வெச்சாச்சு

ஆனால் பாஜகவின் நிலைப்பாடு என்னவாக இருக்க போகிறது என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. இது தொடர்பாக ஒருவேளை, 2 அணிக்குமே ஆதரவு தராமல், நடுநிலை வகிக்கப்போகிறோம் என்று முடிவு எடுக்க உள்ளதாம்.. ஆனால், இது தெரிந்து அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, அதுதான் முடிவென்றால், அதையாவது சீக்கிரம் அறிவியுங்கள்... நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டு பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று பாஜக தரப்பை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.. அதேபோல, ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை தயார் செய்துவிட்டு, பாஜவின் முடிவுக்காக காத்திருக்கிறார்..

ஆப்ஷன்கள்

ஆப்ஷன்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜக நிலைப்பாடு குறித்த பலவிதமான அலசல்களும், விவாதங்களும் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டிருக்கின்றன.. பாஜகவை பொறுத்தவரை, எம்பி தேர்தலை மனதில் முன்னிறுத்தியே காய்களை நகர்த்தி வருகிறது. இவர்கள் 2 பேரில் யாராவது ஒருவருக்கு ஆதரவை வழங்கினால், அது எம்பி தேர்தல் களத்தை அசைத்து பார்த்துவிடும் என்பதால், நடுநிலை நிலைப்பாட்டை எடுக்கவே வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அப்படி நடுநிலை ஆதரவை முன்னெடுப்பது ஒருவகையில், எடப்பாடிக்கு சாதகமான சூழலை களத்தில் பெற்றுத்தரும் என்றும், இதனால் அதிர்ச்சி அடைய போவது ஓபிஎஸ் தரப்பாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

"ஒருங்கிணைப்பாளர்"

தமிழக பாஜக நினைத்திருந்தால், அன்றே களமிறங்கி, வேட்பாளரை நிறுத்தியிருக்ககூடும்.. அதேபோல, தேமுதிக, டிடிவி தினகரன், போன்றோர்களின் ஆதரவை பெற்று வேட்பாளர்களை நிறுத்தி, எடப்பாடிக்கே டஃப் தந்திருக்கக்கூடும்.. ஆனால், அப்படி எந்த முடிவையும் பாஜக எடுக்காமல் இருப்பதே, எடப்பாடிக்கான மறைமுக ஆதரவுதான் என்கிறார்கள் ஒருசிலர்.. இன்னமும்கூட, "இடைக்கால பொதுச்செயலாளர்" என்று எடப்பாடியை தமிழக பாஜக குறிப்பிட்டு வருகிறதே தவிர, ஓபிஎஸ்ஸை "ஒருங்கிணைப்பாளர்" என்று குறிப்பிட்டு பேசுவதில்லையே என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

காய்நகர்த்தல்

காய்நகர்த்தல்

அதனால், எப்படி பார்த்தாலும், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாமல் போனாலேயே, அது எடப்பாடிக்கான ஆதரவு என்றே அர்த்தமாக கொள்ளப்படும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் டீம் களத்தில் இறங்கி போட்டியிடும்போது, அவர்களுக்கான வாக்குபலம் என்ன என்பதும் தெரிந்துவிடும்.. அந்த பலத்தை வைத்து, எம்பி தேர்தலின்போது, காய்நகர்த்த பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இப்படி ஒரு சலசலப்புகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தால், மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலை மிக சீரியஸாகவே அணுகி வருகிறாராம்.

 பெரிய சான்ஸ்

பெரிய சான்ஸ்

திமுக வெற்றி பெற்றாலும் இரண்டாம் இடம் நமக்கு வரவேண்டும் என்று எடப்பாடி முடிவு செய்துள்ளதுடன், ஓபிஎஸ் போட்டியிட்டு டெபாசிட் இழந்தால் அதிமுக தொண்டர்கள், பொது மக்களின் ஆதரவு தனக்கே இருக்கிறது என்பதை காட்டுவதற்கும் இந்த தேர்தல் நல்ல சான்ஸ் என்று நினைக்கிறாராம். எப்படி பார்த்தாலும், இந்த இடைத்தேர்தலோடு ஓபிஎஸ் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றால், அதற்காக எவ்வளவும் தொகுதியில் "தாராளம்" காட்ட தயார் என்ற முடிவிலும் எடப்பாடி உள்ளதாக தெரிகிறது.. ஓபிஎஸ்ஸூக்கு எடப்பாடி செக் வைக்க இப்படி ஒரு வியூகத்தை முன்னெடுத்தால், திமுக வேறு ஒரு வியூகத்தை நகர்த்தி வருகிறது.

 சந்தோஷம்

சந்தோஷம்

திமுகவின் தேர்தல் செலவினங்களை நேரு, செந்தில்பாலாஜி இருவரையும் தொடர்பு கொண்டு, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் விவாதித்துள்ளதாக தெரிகிறது.. அப்போது, "இடைத்தேர்தலின் வெற்றி நம் கட்சிக்கான வெற்றியாகவும், நம் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையாகவும் தான் பார்க்கப்படும். தொகுதியில் நாம் வெற்றிப்பெறுவோம் என்பதில் சந்தேகம் எனக்கில்லை. ஆனால், அது போதாது... எதிர்த்து நிற்கிற அதிமுக அணியும், மற்ற கட்சிகளும் டெபாசிட் போக வேண்டும். டெபாசிட் இழந்தால் தான் நான் சந்தோஷப்படுவேன்.. திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கிற எல்லோருக்கும் டெபாசிட் போக வேண்டும். அதற்கேற்ப தேர்தல் பணி செய்யுங்கள்'' என்று உத்தரவிட்டாராம் ஸ்டாலின்.

 குழப்ப முடிச்சுகள்

குழப்ப முடிச்சுகள்

ஆக, பாஜக ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு + ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க எடப்பாடியின் மூவ் + எடப்பாடி உட்பட திமுகவை எதிர்க்கும் எல்லாருக்குமே டெபாசிட் இழப்பு + என பலகட்ட பரபரப்புகள் தொகுதியில் சுற்றி சுழன்றி கொண்டிருக்கின்றன.. அநேகமாக இன்றைய தினம் பெரும்பாலான குழப்பங்களுக்கும், எதிப்பார்ப்புகளுக்கும் ஒரு விடை கிடைத்துவிடும் என்றே நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+