இரவோடு இரவாக.. வேலையை காட்டுதா பாஜக? மீண்டும் ஓபிஎஸ் அதே முடிவு? பண்ருட்டியார் இருந்துமா இப்படி?
சென்னை: பாஜகவுக்கு ஓபிஎஸ் நிபந்தனையற்ற ஆதரவு தரப்போவதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இதைக்கேட்டு பன்னீர்செல்வம் தொண்டர்கள் அதிர்ந்து போய் உள்ளார்களாம்.
விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாஜகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தி வந்தனர். ஆனால், 2 தொகுதிகள் மட்டுமே வழங்க பாஜக முன்வந்ததாகவும், அந்த 2 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

ஓபிஎஸ்: ஆனால் இதனை ஓபிஎஸ் மறுத்து, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று தொடர்ந்து கூறி வந்தார்.. இப்படிப்பட்ட சூழலில் எம்பி தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வரப்போகும் தேர்தலை பாஜவுடன் இணைந்து சந்திக்கப்போவதாக அறிவித்திருந்த, அதற்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்தித்ததால் தேர்தலில் இருந்து ஓபிஎஸ் அணி விலகுவதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனை: சென்னையில் இன்றைய தினம் ஆலோசனை நடைபெறும்நிலையில், கூட்டத்துக்கு பிறகு இப்படி ஒரு முடிவை ஓபிஎஸ் அணி அறிவிக்க போகிறதாம். என்ன நடக்கிறது ஓபிஎஸ் அணியில்?உண்மைக்காரணங்கள் என்ன?
கடந்த ஒரு மாத காலமாகவே, பாஜகவுடன் கூட்டணி, சீட் விவகாரங்களை ஓபிஎஸ் மேற்கொண்டு வருவதாக சொன்னர்கள்.. தேனி தொகுதியை ஓபிஎஸ் மகனுக்கு ஒதுக்க போவதாக சொன்னார்கள்.. பிறகு, ஓபிஆர் மீது பாலியல் உட்பட பல்வேறு புகார்கள் உள்ளதால் ஓபிஎஸ்ஸையே நேரடியாக தேனியில் களமிறங்க சொன்னதாம் பாஜக.
சின்னம்: இதற்கு பிறகு, திடீரென சின்னம் பிரச்சனை எழுந்தது.. தேனியில் போட்டியிட்டாலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது என்றும், தாமரை சின்னத்திலேயே தேர்தலை ஓபிஎஸ் சந்திக்க வேண்டிவரும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தனர்..
அதற்கேற்றவாறு, தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று பாஜகவும் வலியுறுத்தி வந்தததாக தெரிகிறது. ஆனால், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் சொல்லியும், அதற்கு மேலிட பாஜக ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்கள்.. தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது என்பதால் போட்டியிட வேண்டாம் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் தரப்பு வந்துள்ளதாம்.
ஓபிஎஸ் டீம்: அதேபோல, 15 சீட்களை ஓபிஎஸ் தரப்பு கேட்டு வருவதாகவும், இதற்கு பாஜக மறுப்பு 2 சீட்களை மட்டுமே ஒதுக்க போவதாகவும் கூறப்பட்டன.. இதுவும் ஓபிஎஸ் டீமுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.
அதேபோல, சமீபத்தில் பாஜக கூட்டணிக்காக சென்ற சரத்குமார், தன்னுடைய கட்சியையே பாஜவுடன் இணைத்து விட்டார்.. அதுபோலவே, ஓபிஎஸ் அணியையும் முழுமையாக பாஜவுடன் இணைப்பதற்காகவே, இப்படியான நெருக்கடிகளை பாஜக கொடுத்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற முடிவை ஓபிஎஸ் தரப்பு எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.
பாஜக டீம்: பாஜகவில் குறைவான சீட் ஒதுக்கீடு? அல்லது சின்னம் பிரச்சனை? அல்லது பாஜகவுடன் அணியை இணைப்பது? என பல்வேறு குழப்பங்கள்தான் ஓபிஎஸ் எடுக்க போகும் முடிவுக்கு காரணமா என்று தெரியவில்லை. கடந்த வாரம்தான், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்களும் பெறப்பட்டிருந்தன..
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், இந்த தேர்தலில் போட்டியிட, மொத்தம் 414 பேர் விருப்ப மனு அளித்திருந்தார்களாம்.. "ஓபிஎஸ் டீமில் நிர்வாகிகள் அவ்வளவாக கிடையாது, தேர்தலில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை" என்றெல்லாம் தகவல்கள் கிளம்பிய நிலையில், ஒரேநாளில் 414 பேர் விருப்ப மனு தந்திருந்தது உண்மையிலேயே ஆச்சரியத்தை தந்தது. ஆனால், இப்போது தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவெடுப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.
ஓபிஎஸ் பேட்டி: சமீபத்தில் ஓபிஎஸ் பேசும்போது, "பாஜகவே எங்களை வெளியே அனுப்பும்வரை, நாங்கள் வெளியே போக மாட்டோம், பாஜகவுடன்தான் இருப்போம்" என்று கூறியிருந்தார்..
ஓபிஎஸ் இப்படி சொன்னதுமே, நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒரு பேட்டி தந்திருந்தார். நம்மிடம் அவர் சொன்ன வரிகளை, இங்கே மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்த வேண்டியதிருக்கிறது.
கேவலமா இருக்கு: "பாஜகவே எங்களை வெளியே அனுப்பும்வரை, போக மாட்டோம் என்று ஓபிஎஸ் சொன்னதே, ரொம்ப கேவலமா இருக்கு. கழுத்தை புடிச்சு பாஜக வெளியே தள்ளினால்தான்போவீங்களா? ஒன்று, எடப்பாடியுடன் இணக்கமாக செயல்படுவேன் என்று சொல்ல வேண்டும். அல்லது தனக்கான மக்கள் ஆதரவு உள்ளது என்பதை ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும்.
இதற்காக நேரடியாக எடப்பாடியுடன் போட்டியிருக்க வேண்டுமே தவிர, வேறு ஒரு கட்சியை நம்பக்கூடாது. மதிக்காத கட்சியுடன் ஏன் ஓபிஎஸ் சேர வேண்டும்? அப்படியென்ன அவசியம் வந்தது? தினகரன்தான் உங்களுடன் இருக்கிறாரே, தனித்து போட்டியிடுங்களேன். எடப்பாடி அதிமுகவை தோற்கடிக்க பாருங்களேன். அதைவிட்டுட்டு, கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினால்தான் போவேன் என்பது சரியா? அப்படின்னா பாஜகவை விட்டால் உங்களுக்கு வேற கதி இல்லையா? பாஜகவை நம்பித்தான் பொழப்பு ஓடுது என்று நினைப்பது தவறு.
பாஜக ஆதரவு: பாஜகவுடன் எடப்பாடியே இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, எடப்பாடிக்கு சவால் விட வேண்டும். மக்கள் ஆதரவை நிரூபிக்க வேண்டும். இப்படியெல்லாம் பாஜக பக்கம் சாய்ந்து கொண்டிருந்தால், ஓபிஎஸ்ஸும், அதிமுகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற பிம்பத்தை எதிர்காலத்தில் உருவாக்கிவிடும்" என்கிறார் ப்ரியன்..
ப்ரியன் அன்று நம்மிடம் சொன்னது எவ்வளவு சத்தியமான வரிகள்?? ஈரோடு இடைத்தேர்தலின்போதுகூட, வேட்பாளரை அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் ஓபிஎஸ் வாபஸ் பெற்றார். பாஜக கேட்டுக்கொண்டதால் வேட்பாளரை வாபஸ் பெற்றதாக காரணமும் அப்போது ஓபிஎஸ் கூறியிருந்தார்.
இதைக்கேட்டதும் ஓபிஎஸ்ஸின் ஈரோடு வேட்பாளர், உச்சக்கட்ட கடுப்பாகி நேராக சேலத்துக்கு போயி எடப்பாடியிடம் சேர்ந்துவிட்டார்.
அதிர்ச்சி: அன்று ஈரோடு தேர்தலின்போதும்கூட, கடைசிவரை போட்டியிடாமல் இழுத்தடித்து, ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி தந்தது பாஜகதான் என்றார்கள்.. இப்போதும் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி தந்து, போட்டியிடாமல் பின்வாங்க செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது பாஜகதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..!!
ஆனால், அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், நிறைந்த மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் உடனிருந்தும்கூட, ஓபிஎஸ் இப்படி ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்றால், அது மிகுந்த அதிர்ச்சியையே ஓபிஎஸ் தொண்டர்களிடமே உண்டுபண்ணிவிடும் என்றும் அலர்ட் செய்கிறார்கள் அரசியல் விமர்சர்கள்.
ஆக மொத்தம், ஓபிஎஸ்ஸின் ஒவ்வொரு முடிவும், பாஜகவுக்கு நன்மை தருகிறதோ இல்லையோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கே பலமாகி விடும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications