Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூண்டிலில் சிக்கிய 13 திமிங்கலம்.. "உலை" வைத்த புள்ளி.. அசரலையே எடப்பாடி..அணுஅணுவாக கவனிக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திமுக + ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கூடார அசைவுகளை உற்று கவனிக்க துவங்கி உள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது, ஒவ்வொரு கட்சியுமே கூடி விவாதிக்கும் மிக முக்கிய ஆலோசனை கூட்டமாகும்.. ஆனால், நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, இந்த கூட்டத்தை கூட்டப்போகிறார் என்றதுமே, அரசியல் களமே பரபரப்பானது.

Are these the plans that Edappadi Palaniswami is going to undertake and Can DMK deal with AIADMK?

புரட்சி பயணம்: காரணம், மேலிட பாஜக அல்லாமல், தமிழக பாஜக இன்னமும் அதிமுகவிடம் நெருக்கமாகவில்லை.. புரட்சி பயணத்தை ஓபிஎஸ் துவங்கியுள்ள நிலையில், "நாங்கள் தனித்து நிற்போம், திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும்" என்று குண்டை தூக்கி போட்டுள்ளார் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். கொடநாடு வழக்கு உள்ளிட்டவற்றை துரிதப்படுத்தி, கொங்குவை வசப்படுத்த திமுகவும் முயன்று வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரை மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பொதுச்செயலாளர் வழக்கிலும் சாதகமான உத்தரவை பெற்றுவிட்டு, இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.. எதிர்பார்த்ததை போலவே, திமுக மீதான குறியை வலுவாக பாய்ச்சியிருக்கிறார் எடப்பாடி..

கரண்ட் பில்: குறிப்பாக, "திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.. கரண்ட் பில் ஷாக் அடிக்கிறது.. வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, எகிறிவிட்டது.. வன்முறை அதிகரித்து வருகிறது.. உள்ளாட்சி பிரதிநிதிகளால் ஏற்படும் அடாவடிகளை மக்களிடத்தில் மறக்காமல் எடுத்து சொல்ல வேண்டும், அம்மா உணவகம், மகளிருக்கு ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை எல்லாம் மக்களிடத்தில் அந்த நேரத்தில் கொண்டு சென்றால் பலன் கிடைக்கும்" என்றெல்லாம் எடப்பாடி அறிவுறுத்தியதாக தெரிகிறது.

அதேபோல, ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம், வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அவை சாத்தியமா? இல்லையா? என்ற விவாதமும் ஆலோசனை கூட்டத்தில் நடத்தப்பட்டுள்ளதாம்..

அதேபோல, அதிமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும்விதமாக, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 மாவட்டங்கள் என 100-ல் இருந்து அதற்கு மேற்பட்ட மாவட்ட பதவிகளை உயர்த்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்களும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயம், சொந்த கட்சியினருக்கும் இந்த கூட்டத்தில் திட்டு விழுந்ததாக சொல்கிறார்கள்.. காரணம், நடந்து முடிந்த மதுரை மாநாடு குறித்து, உளவுத்துறையிடம், சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை கேட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி..

மாநாடு: இதையடுத்து, உளவுத்துறையும், மாநாட்டு பணி குறித்த லிஸ்ட் தயார் செய்து, மாநாட்டு குழுக்களில் இடம் பெற்றிருந்து யார் யார்? சரியாக செயல்படாத மாநில, மாவட்ட நிர்வாகிகள் யார், யார்? என்ற லிஸ்ட்டையும் தந்திருந்ததாம்.. இந்த லிஸ்ட்டை எடப்பாடி வாங்கி பார்த்ததுமே, எப்படியும் இவர்களுக்கு கச்சேரி இருக்க போகிறது என்று சலசலக்கப்பட்டது.

மேலும், மாநாட்டிற்கென அமைக்கப்பட்ட குழுவினரின் சரியான திட்டமிடல் இல்லாமல், புளிசோறு உணவுகளை வீண் அடித்தது, மாநாட்டிற்கு வந்தவர்களை முறையாக கவனிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எடப்பாடியின் காதுகளுக்கு எட்டியிருந்ததால், மதுரை அதிமுகவே வெலவெலத்து போயிருந்ததாம்.

மாநாடுகள்: அதைவிட முக்கியமாக, மாநாட்டிற்கான ஆட்களை அழைத்துவர மாவட்ட செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்கள் காற்றில் பறக்கவிட்ட விட்டதால், எப்படியும் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்தெல்லாம் கேள்வி எழுப்புவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தபடியே, அதிமுக மதுரை மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வராத மாவட்ட செயலாளர்களுக்கும், முறையாக வழிநடத்தாமல் இருந்த மாநாட்டு குழுவினருக்கும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செம டோஸ் விட்டாராம்.

இந்நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததையும் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி மேலும் அப்செட் ஆகியதாக தகவல்கள் வெளி வந்துள்ளன... இதையடுத்து, 13 மாவட்ட செயலாளர்களை மாற்ற போகிறாராம்..

தூண்டில் வலை: அதிலும், சென்னையில் மட்டும் 4 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட உள்ளார்களாம்.. யாரந்த 13 பேர் என்று தெரியவில்லை. ஆனால், 117 மாவட்ட செயலர்களை நியமிக்க எடப்பாடி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, தஞ்சாவூர், மதுரை, நாமக்கல், கோவை உள்ளிட்ட பல மாட்டங்களில், மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில், 3 முதல் 6 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.

எனவே, அவர்களிடமிருந்து தொகுதிகளை பிரித்து, புதுமுகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவிகளை வழங்கினால், அவர்கள் ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் எடப்பாடி நம்புகிறாராம்.. அதுமட்டுமல்ல, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றால், 117 மாவட்ட செயலர்களும், தலா ஒரு தொகுதியில் வெற்றி கிடைத்தாலே போதும், அதிமுக அரியணையில் உட்கார்ந்துவிடும் என்றும் கணக்கு போடுகிறாராம்.

வேகம்: இப்படி கட்சியின் உள்கட்டமைப்புகளை பலப்படுத்தும் அதேசமயம், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும் தூண்டில் போடப்பட்டு, அதில் சிலர் விரைவில் எடப்பாடி பக்கம் வரவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கொடநாடு விவகாரத்தில் திமுகவின் வேகம் அதிகரித்தாலும், அதைவிட ஸ்பீடாக எடப்பாடியின் அரசியல் நகர்வு நகர்ந்து கொண்டிருக்கிறதாம்.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+