Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறவிட்ட அதிமுக.. அரண்டு போன பாஜக.. போயஸ் கார்டன் போன "மெசேஜ்".. கூட்டணி முறிவுக்கு காரணமே இதுதானாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணிக்கு நிஜமாகவே என்ன காரணம் என்று தெரியாத நிலையில், அதுகுறித்த இன்னொரு தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தன்னுடைய தேர்தல் வேலையை இப்போதே துவக்கிவிட்டதாக செய்திகள் பரபரக்கின்றன.. சமீபத்தில்தான், தன்னுடைய கட்சி நிர்வாகிகளை அழைத்து, ஸ்பெஷலாக கவனித்ததுடன், புதிய பொறுப்புகளையும் தந்திருந்தார் சண்முகம்.

Are these the reasons for AIADMK-BJP alliance issues and What did AC Shanmugam say to Rajinikanth

அத்துடன், அதிமுக, பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.. கடந்த 2019 எம்பி தேர்தலில் வேலூர் தொகுதியில் பேட்டியிட்ட ஏசி சி.சண்முகம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் சொற்ப வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்தவர். இந்த துக்கத்தை தாளாமல், குலுங்கி குலுங்கி அழுதவர்..

தாமரை சின்னம்: அதனால்தான், இந்த முறை வெற்றி பெற்றே தீருவது என்று சபதம் போட்டு, வேலூரில் களப்பணியில் இறங்கவிட்டார்.. ஆனால, தாமரை சின்னத்தில் போட்டியிடுவாரா? இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா? என்றெல்லாம் எதுவுமே தெரியவிலை. ஏசி சண்முகத்தின் பரபரப்பை பார்த்ததுமே, வேலூர் திமுகவும் துரித பணியில் களத்தில் இறங்கிவிட்டது..

எப்படியும் இந்த முறையும் தன்னுடைய மகனை வேலூர் தொகுதியில் போட்டியிட வைக்க துரைமுருகன் ஆசைப்படுவதாக தெரிகிறது.. எனினும், ஏசி சண்முகம் வேலூர் திமுகவை இந்த முறை விடுவதாக இல்லையாம்.

பிறந்தநாள்: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். ஒவ்வொரு வருடமும் ரஜினியை சந்தித்து வாழ்த்துப்பெறுவது வழக்கம். அந்த வகையில் மூன்று நாட்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்தார்.

ஆனால், இந்த முறை சின்ன வித்தியாசம். ஏ.சி.சண்முகத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே அவருக்கு ஃபோன் செய்து வாழ்த்துச் சொன்ன ரஜினி, "வாங்களேன். பேசுவோம்" என்று ஏ.சி. சண்முகத்திடம் சொல்லியிருக்கிறார். அதற்கு, "உங்களுக்கு ஃபோன் செய்து நேரில் வாழ்த்துப்பெற எப்போது வரலாம் என கேட்பதற்காக ஃபோனை எடுத்தேன். உங்கள் அழைப்பு வந்துவிட்டது" என்றாராம் ஏ.சி.சண்முகம்.

எடப்பாடி பழனிசாமி: இதற்கு பிறகு, ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார்.. அந்த சந்திப்பில், அதிமுக-பாஜக கூட்டணி விவகாரம் பத்தி இருவருமே விவாதித்துள்ளனர். குறிப்பாக, "பாஜகவை கூட்டணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக்கியிருக்கிறாரே? ஏதேனும் முக்கிய காரணம் இருக்கா?" என்று ரஜினிகாந்த் கேட்டாராம்.

அதற்கு ஏசி சண்முகம், "சீட் ஷேரிங் தான் முக்கிய காரணம். பாஜகவுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் மொத்தமாக சீட்டுகளை பாஜகவிடம் தந்துவிட அமித்ஷா வலியுறுத்துகிறார். காரணம், ஓபிஎஸ் மற்றும் தினகரனை கூட்டணிக்குள் கொண்டுவரவேண்டும்னு பாஜக விரும்புகிறது.

அதிமுக: ஆனால், பாஜகவுக்கான சீட் ஷேரிங் மட்டும் பேசலாம். வேறு எதுவும் வேண்டாம். தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமைத்தாங்கும். கூட்டணியில் எந்தந்த கட்சிகள் இருக்கவேண்டும்னு அதிமுகதான் முடிவு செய்யும்னு எடப்பாடி பழனிசாமி கறாராக சொல்லிவிட்டார். இதுதான் அடிப்படை பிரச்சனை சார்.

மேலும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை.. அதற்கு பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து தமிழகத்தின் 4 திசைகளிலும் பாஜக அதிக இடங்களில் போட்டியிட்டால் சில தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பாஜகவின் வோட் பேங்க்கும் அதிகரிக்கும் என்பது உளவுத்துறையின் ரிப்போர்ட்... அதைவைத்துதான் அதிமுகவை ஒரு கட்டுக்குள் அடைக்க பாஜக விரும்பியது. இதுவும் முறிவுக்கு காரணம்" என்று விவரித்தாராம் ஏ.சி.சண்முகம்.

ஏசி சண்முகம்: இதன் பிறகு, இந்த கூட்டணி முறிவால், திமுகவுக்கு சாதகமா? பாதகமா? என்றும் விசாரித்திருக்கிறார் ரஜினிகாந்த். அதற்கு, "இரண்டுக்குமே வாய்ப்பிருக்கிறது சார். தேர்தல் நெருங்க நெருங்கத்தான் தெரியும் சார்" என்று சொல்லியுள்ளாராம் ஏ.சி.சண்முகம்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்று பகிரங்கமாக அறிவித்துவிட்ட நிலையில், கூட்டணி முறிவுக்கு காரணமே அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு என்கிறது ஒரு தரப்பு.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை தங்கள் பக்கம் திருப்பவே , அதிமுகவின் வியூகம் இது என்கிறது இன்னொரு தரப்பு. இதற்கு நடுவில் "சீட் விவகாரம்தான்" என்று ஏசி சண்முகம் கூறுவதாக கசிந்துள்ள தகவல் பரபரப்பை கூட்டி வருகிறது.

கூட்டணி கட்சிகள்: கூட்டணி கட்சிகளால் இந்த கூட்டணி முறிவை ஏற்க முடியவில்லையாம்.. டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஜான் பாண்டியன் போன்றோர், மேலிட பாஜகவிடம் சமரசத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசிந்து வரும்நிலையில், அதிமுக என்ன செய்ய போகிறதோ என்ற ஆர்வம் எகிறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+